நன்னூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நன்னூல் வகைப்பாடு 1
நன்னூல் வகைப்பாடு 2
நன்னூல் வகைப்பாடு 3

நன்னூல், 13ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும். தமிழ்மொழி இலக்கணநூல்களுள் தற்போது இருப்பவைகளில் மிகப்பழமையானதான தொல்காப்பியத்தின் சில பகுதிகள் வழக்கொழிந்தன, மற்றும் சிலவற்றிற்கு கூடுதல் விளக்கம் தேவைப்பட்டது. வழக்கொழிந்த இலக்கணப் பயன்பாடுகளுக்கு இணையான சமகாலப் பயன்பாடுகளை வகுத்தும், ஏற்கனவே வகுக்கப் பெற்ற பயன்பாடுகளை மேலும் விளக்கியும், எளிமைப்படுத்தியும் நன்னூலில் எழுதப்பட்டது. தற்காலம்வரை, செந்தமிழுக்கான இலக்கணமுறை நன்னூலைப் பின்பற்றியே உள்ளது.

நூலின் பகுதிகள்[தொகு]

நன்னூல் இரு அதிகாரங்களாக பகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தினை ஒட்டி எழுதப்பட்ட இன்னூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் பல காரணங்களுக்காக 3 அதிகாரங்கள் தொலைந்து போயிருக்கக்கூடும் எனவும் சான்றோர் கூறுவர். இவை:

 1. பாயிரம்
 2. எழுத்ததிகாரம்
 3. சொல்லதிகாரம்

பாயிரம்[தொகு]

சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம் என இரு வகையாகவும் நூலின் முகவுரையாகவும் அமைந்துள்ளது சிறப்பு.

பொதுப்பாயிரத்தின் உறுப்புகள்[தொகு]

 1. நூலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
 2. ஆசிரியனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
 3. பாடஞ் சொல்லலினது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
 4. மாணாக்கனது வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)
 5. பாடங் கேட்டலின் வரலாறு (வகைகள் மற்றும் தன்மைகள்)

எழுத்ததிகாரம்[தொகு]

இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:

 1. எழுத்தியல்
 2. பதவியல்
 3. உயிரீற்றுப் புணரியல்
 4. மெய்யீற்றுப் புணரியல்
 5. உருபு புணரியல்

சொல்லதிகாரம்[தொகு]

இவ்வதிகாரம் பின்வரும் 5 பகுதிகளாக உள்ளது:

 1. பெயரியல்
 2. வினையியல்
 3. பொதுவியல்
 4. இடையியல்
 5. உரியியல்

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=நன்னூல்&oldid=1578907" இருந்து மீள்விக்கப்பட்டது