விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடை தொடர்பான பரிமாற்றங்களை இங்கே வைத்துக் கொள்ளலாம்.
தொகுப்பு

தொகுப்புகள்


1



அறிவியற் பெயர்கள்[தொகு]

ஆங்கில விக்கியில் சியாமளும் நானும் அறிவியற் பெயர்களை எவ்வெழுத்துக்களில் எழுதுவது, தமிழில் எழுதும்போது பொதுப்பெயரை மட்டும் எழுதிவிட்டு அறிவியற் பெயர்களை ஆங்கில எழுத்துக்களில் தருவது நலமா என்பது தொடர்பில் உரையாடினோம். அதை இங்கே காணலாம். -- சுந்தர் \பேச்சு 08:40, 11 ஏப்ரல் 2008 (UTC)

இதே கேள்வியை கூகுள் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் கேட்டார். அறிவியல் பெயர்களைத் தமிழ் எழுத்துகளில் எழுதி விட்டு அடைப்புக்குறிக்குள் ஆங்கில எழுத்துகளில் சுட்டலாம் என்று நினைக்கிறேன்--ரவி 22:39, 5 மே 2010 (UTC)[பதிலளி]

இருசொல் பெயரீடு[தொகு]

தாவரம் மற்றும் விலங்குகளை இரு சொற்பெயரீட்டினால் குறிக்கும் போது அவை இலத்தினாக்கப்பட்ட ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும் என்பது விதி. பல கட்டுரைகளில் இருசொற் பெயரீட்டை தமிழில் எழுதியிருக்கின்றோம்.

எ.கா:குன்றி.கலந்துரையாடல் தேவை.--சஞ்சீவி சிவகுமார் 07:49, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் எழுதிவிட்டு தமிழில் அடைப்புக்குள் இடலாம் என நினைக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 07:54, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டுப் பாட நூல்களில் தமிழ் எழுத்துப்பெயர்ப்புகள் தான் உள்ளன (ஆங்காங்கே லத்தீன் எழுத்துப்பெயர்ப்பு அடைபுகளில் உள்ளது) கண்டிப்பாக லத்தீன் எழுத்துருவில் இருக்க வேண்டும். அதன் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு கூடுதலாக இருப்பின் அதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே. (குறிப்பு: தாவரவியல்/உயிரியல் துறை அறிவு எனக்கு மிகக் குறைவு. ஒரு layman ஆக இக்கருத்தினை முன்வைக்கிறேன். இது முற்றிலும் அபத்தமாகக் கூட இருக்கலாம் :-) )--சோடாபாட்டில்உரையாடுக 08:07, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]
உடனடியாகக் கருத்துத் தெரிவித்தமைக்கு நன்றி சோடாபாட்டில். ஆயினும் இவை இலத்தினாக்கப்பட்ட ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் என்பதை ஒரு விதியாக எனது உயர்தர வகுப்பு உயிரியல் ஆசிரியர் கற்பித்ததாக ஞாபகம்.தமிழில் எழுதினால் முதலாவதாக அமையும் சாதிப்பெயரின் முன்னெழுத்து பெரிய எழுத்தாக (Capital)ஆக இருக்க வேண்டும் எனும் விதியும் ஏனைய எழுத்துக்கள் சிறிய (small)ஆக இருக்க வேண்டும் என்பதுவும் விதிகளாகப் பேணப்படுவது கடினம் --192.248.66.3 09:31, 24 சனவரி 2012 (UTC)--சஞ்சீவி சிவகுமார் 09:32, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தமிழ், இலத்தீனம் ஆகிய இரு மொழிகளிலும் இருப்பது நன்று. ஒரு மொழி விடுபட்டுள்ள இடத்தில் மற்றொன்றையும் சேர்ப்பது ஏற்புடையதே. இலத்தீனத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று விதி இல்லை. இலத்தீன ஒலிப்பு தெரியாத மாணவர்களுக்குத் தமிழ் எழுத்துபெயர்ப்பு உதவும். //.தமிழில் எழுதினால் முதலாவதாக அமையும் சாதிப்பெயரின் முன்னெழுத்து பெரிய எழுத்தாக (Capital)ஆக இருக்க வேண்டும் எனும் விதியும் ஏனைய எழுத்துக்கள் சிறிய (small)ஆக இருக்க வேண்டும் என்பதுவும் விதிகளாகப் பேணப்படுவது கடினம்// இந்த விதி இலத்தீனத்துக்குத் தான் பொருந்தும்.--இரவி 12:05, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இது போன்ற உரையாடல்களை விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு பக்கத்தில் மேற்கொள்ள வேண்டுகிறேன். அப்போது தான் பிற்காலத்தில் நடை குறித்த கேள்விகள் உள்ளோருக்குச் சிக்கும். ஆலமரத்தடியில் தமிழ் விக்கிப்பீடியா திட்டம் குறித்த பொதுவான உரையாடல்களை மேற்கொள்ளலாம்--இரவி 12:07, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

  • அறிவியற்பெயர் ("Scientific name") என்பது இலத்தீனில்தான் இருக்க வேண்டும் (இலத்தீன் இலக்கண விதிகளுடன்) என்பது கரோலினசு லின்னேயசு 250 ஆண்டுகளுக்கு முன் விதித்த விதி. இன்றும் பின்பற்றப்பட்டாலும், இடாய்ச்சு (செருமன்) போன்றவற்றில் பிறைக்குறிகளுக்குள் இலத்தீனைத் தருகின்றார்கள் அல்லது தராமலும் இருக்கின்றார்கள். நாம் கட்டாயம் உரோமன் எழுத்தில் இலத்தீன் பெயரைத் தருதல் வேண்டும். ஆனால் கூடியமட்டிலும் அதன் நெருக்கமான தமிழ் ஒலிப்பையும் கட்டாயம் தர வேண்டு. பிறமொழியாளர்களைப் போலவே அறிவிய்ற்பெயரை ஒட்டிய அல்லது பொருத்தமான நற்றமிழ் அறிவியற் பெயரும் கொள்வது நல்லது. வருங்காலத்தில் ஒரு மொழியில் உள்ள ஒரு சொல்லுக்கு ஈடான பன்னூறு மொழிச்சொற்கள் மிக எளிதாகக் கிடைக்கும். எனவே கவலை வேண்டாம். தொடர்பு இருக்க வேண்டும் என்பதே தேவை. நமக்குப் பொருள் உடையதாக இருகக் வேண்டும் என்பதும் தேவை. அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநிலப் பல்கலைக்கழக வலைப்பக்கத்தில் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிவியற் பெயர்கள் பற்றி தந்துள்ளார்கள், இங்குப் பார்க்கவும். அறிவியற்பெயர்கள் சில நல்ல பொருத்தம் இல்லாதனவாகவும் சில தவறாகவும் அமைவதும் உண்டு. வகைப்பாட்டியலிலும் அடையாளப்படுத்தும் முறைகளிலும் இன்று பல புதிய முறைகள் முன்னுக்கு வந்துகொண்டு இருக்கின்றன கிளைப்பியல் (cladistics) முதல், மரபணு அடிப்படையில் எண்ணிமத் தனியடையாளக் குறியீடுகள் (DNA barcoding)முறைகள் வரை (எ.கா அனைத்துலக உயிரின அடையாளக் கோடடைதிட்டம் (International Barcode of Life Project (iBOL))பல முயற்சிகளும் திட்டங்களும் உள்ளன.

--செல்வா 13:59, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

  • அறிவியற்பெயர்களைத் தமிழ் விக்கிக் கட்டுரைகளில் இலத்தீன் மொழியில் (சில வேளைகளில் கிரேக்கம்) உரோமன் எழுத்தில் தரவேண்டும் என்னும் கருத்தோடு முழுமையாக உடன்படுகின்றேன். ஆங்கில விக்கியில் ஒரு பட்டியல் பார்த்தேன் (இங்கே). அதில் வரும் அறிவியற்பெயர்களுக்குத் தமிழாக்கம் உளதா? --பவுல்-Paul 15:43, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]
இப்பட்டியலை நானும் பலமுறை பார்த்து, இப்படி ஒரு முறையான பட்டியல் ஒன்றினை, இலத்தீன எழுத்திலும், தமிழ் எழுத்திலும் ஆஅ அகரவரிசையுடன் உருவாக்க நினைத்து சிறிது செய்தும் வைத்துள்ளேன். உங்களைப் போல் இலத்தீன் மொழிப்புலமை உடையவர்கள் துணையும், இன்னும் ஒரு 10-15 பேர் சேர்ந்தாலும், அனைத்தையும் நல்ல தமிழில் ஆக்கி இங்கே ஆவணப்படுத்தலாம். கடினமான வேலை இல்லை (!!), ஆனால் சீர்தரத்துடன் செய்வதும், கூடவே தக்க குறுவிளக்கங்கள் சேர்த்து எழுதுவதும், தமிழ்பேசுநிலங்களில் வாழ் துறையறிஞர்களின் ஒப்புதல் கிடைப்பது சற்று கடினமானதாக இருக்கலாம். சொல்லுங்கள், நீங்களும், மயூரநாதன், மணியன், சோடாபாட்டில், செந்தி, கலை, சுந்தர், கனகு சிறீதரன், நற்கீரன், பார்வதி, பரிதிமதி, பாஃகிம், நந்தகுமார், மகிழ்நன், கார்த்திக் பாலா, மரு. கார்த்தி, சூர்யபிரகாசு போன்று (++இன்னும் பலரும்) விக்கியில் உள்ளவர்கள் மட்டுமே சேர்ந்து இயங்கினாலும் கூட ஒரு சில மாதங்களுக்குள் நல்ல தரமான ஈடான பட்டியல் உருவாக்க முடியும். அதே நேரம் என் தனிக்கருத்து ஒன்று: சூழலோடு அக்கலைச்சொற்களை விளக்கி எழுதினால்தான் அவை பயன் மிக்கதாகவும், வேர்பற்றுவனவாகவும் இருக்கும் (இது சில மாதங்களில் முடிவது கடினம், என்றாலும் தக்கவாறு சேர்ந்தியங்கினால் இயலும் பல மாதங்களில்). சொல்லுங்கள் அடுத்த திட்டமாக இதனைச் செய்யலாம்! நான் அணியம்!--செல்வா 16:12, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]
பவுல், நான் சொன்னது இந்தப் பட்டியல் அன்று (அது சில ஆயிரம் சொற்கள் கொண்டது). இப்பட்டியலில் உள்ளதை ஒரு நாளிலோ, சில நாள்களிலோ செய்துவிடலாம். நான் செய்யத் தொடங்கிவிடுகிறேன். மொத்தம் 227 சொற்கள்தாம் உள்ளன.--செல்வா 16:53, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

பவுல் ஐயா, அங்கிருந்த 227 இலத்தீன் கிரேக்கச் சொற்கள் அனைத்திற்கும் தமிழில் சொற்கள் தந்திருக்கின்றேன். நீங்களும் சரிபார்த்து மேம்படுத்துங்கள். அவற்றின் பயன்பாடுகளைச் சில தமிழ் அறிவியற்பெயர்களில் காட்டி, இணைப்புக்கொடுக்க வேண்டும். அதனை அடுத்ததாகச் செய்கிறேன்.--செல்வா 23:04, 24 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மரியாதை அல்லது இழி சொற்கள்[தொகு]

இது தொடர்பான சரியான கையேட்டை ஆக்குவது முக்கியம். மேலோட்டமாக மரியாதைச் சொற்கள் கூடாது என்ற பரிந்துரையை விட நுணுக்கமாக செய்யப்பட வேண்டும்.

  • வகை1: தலைப்புகளில்
    • பதவி சாராத மரியாதைச் சொற்கள் -- திரு, திருமதி, திருவாளர், அவர்கள், செல்வி, செல்வன்...
    • பதவி சார் மரியாதைச் சொற்கள் -- மேதகு,
    • சமயச் சார் மரியாதைச் சொற்கள் -- வணக்கத்திற்குரிய, புனித, அருள்மிகு, சிறி, சிறிசிறி, பரமாத்மா, அருட்சகோதரன்...
    • சாதி சார் சொற்கள் -- ஐயங்கார், பிள்ளை.....
    • இவற்றில் அடங்காத மரியாதைச் சொற்கள் -- மகாத்மா, பெரியார், தந்தை, தலைவர்......
  • வகை2: உள்ளடக்கத்தில்
    • பதவி சாராத மரியாதைச் சொற்கள் -- திரு, திருமதி, திருவாளர், அவர்கள், செல்வி, செல்வன்...
    • பதவி சார் மரியாதைச் சொற்கள் -- மேதகு,
    • சமயச் சார் மரியாதைச் சொற்கள் -- வணக்கத்திற்குரிய, புனித, அருள்மிகு, சிறி, சிறிசிறி, பரமாத்மா, அருட்சகோதரன்...
    • சாதி சார் சொற்கள் -- ஐயங்கார், பிள்ளை.....
    • இவற்றில் அடங்காத மரியாதைச் சொற்கள் -- மகாத்மா, பெரியார், தந்தை, தலைவர்......


  • சாதிப்பெயர்களைக் கட்டுரையிலும் தலைப்பிலும் பயன்படுத்துவது குறித்து இங்கு உரையாடப்பட்டுள்ளது. இறுதி முடிவு ஏதும் இல்லை.
  • இழிசொல் என்ற பேச்சுக்கே இடம் வேண்டாம். எல்லா மனிதர்களுக்கும் தர வேண்டிய குறைந்தபட்ச மரியாதை தரப்பட வேண்டும். கொடுங்குற்றவாளி, தீவிரவாதி போன்றோரையும் அவர், இவர் என்றே விளிக்க வேண்டும் (பொது ஊடகங்களில் அவன், இவன் என்று அழைக்கிறார்கள்)
  • திரு, திருமதி, திருவாளர், அவர்கள், செல்வி, செல்வன், மேதகு போன்ற பதவி சார், பதவி சாரா மரியாதைச் சொற்கள் தலைப்பு, உள்ளடக்கம் எங்குமே தேவையில்லை.
  • சமயச் சார் சொற்களில் எவர் கொடுக்கும் பட்டங்களை ஏற்பது என்பதில் குழப்பமாக இருக்கிறது. இந்தியாவில் ஏகப்பட்ட போலிச் சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களது பட்டப்பெயர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ என்று நீண்டு கொண்டே போகும்.
  • குறிப்பிட்ட நபரின் பெயர் பொதுப்பெயராக இருந்து அவரது பட்டப்பெயர் மட்டுமே அவரைத் தனித்து அடையாளம் காண உதவுமானால், பட்டப்பெயரைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, கருணாநிதி என்றாலே ஒருவரைத் தான் குறிக்கும். எனவே, கலைஞர் கருணாநிதி என்று அழைக்கத் தேவை இல்லை. ஆனால், உலகில் ஏகப்பட்ட தெரசாக்கள் இருப்பதால் அன்னை தெரசா என்று குறிப்பிடுவது தேவைப்படலாம்.
  • தந்தை, பெரியார், மகாத்மா, தலைவர் என்று அழைக்கப்படுபவர்கள் எல்லாம் தங்கள் பெயராலும் அறியப்பெற்றவர்கள் தாம் என்பதால் தலைப்பில் அவை தேவை இல்லை.--ரவி 10:58, 20 மே 2008 (UTC)[பதிலளி]

யூனியன், ரேடியோ, சைக்கிள் - தவறான எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

மூன்றும் தவறான எடுத்துக்காட்டுக்கள். ஒன்றியம், வானொலி, மிதிவண்டி என நல்ல தமிழ்ச் சொற்கள் இருக்கும் போது விசமத்தனமானமாகா திணிப்பது. இதை மாற்றி எழுத வேண்டும்.

ஆங்கில விக்கியில் ரேடியோ, யூனிய, சைக்கிள் போன்றவற்றுக்கு சப்பானிய சொற்களைப் பயன்படுத்த முடியாது. அந்த மாதிரி வழிகாட்டுத்தல் படு பிழை. ஊர்ப் பெயர்கள், அமைப்புகள் பெயர்கள், நபர்கள் பெயர்கள் போன்றவையே இப்படி எழுப்படுவது உண்டு. --Natkeeran 12:26, 4 ஜூலை 2009 (UTC)
நீங்கள் இந்த பத்தியின் மையக் கருத்தை புரிந்து கொள்ளவில்லை. ரேடியோ, யூனியன், சைக்கிள, தாலிபான் போன்றவை பிறமொழி மூலமானாலும், தமிழில் சேர்க்கப் பட்டுள்ளன. அதனால் சாய்வெழுத்து வேண்டாம் --Ginger 12:37, 4 ஜூலை 2009 (UTC)
தாலிபான் தவிர நீங்கள் குறிப்பிட்ட ஏனையவை தமிழில் இல்லை. எனவே இங்கு சாய்வெழுத்துப் பிரச்சினை இல்லை. பிறமொழிச் சொற்கள் வேறு ஏராளம் தமிழில் உள்ளனவே (உ-ம்: அறிவியல் சொற்கள்). அவற்றை எடுத்துக்காட்டுக்குப் பயன்படுத்துங்கள்.--12:49, 4 ஜூலை 2009 (UTC)
ரேடியோ [1] என்றால் 358,000 பக்கங்கள் வருகின்றன. இந்த வருடம் ரேடியோ எப்படி இயங்குகிறது? என்ற புத்தகமே பிரசுரமாயுள்ளது http://nhm.in/shop/978-81-8368-996-0.html. ரேடியோ தமிழ் வழக்கில் பல நாட்களாக இருக்கின்றது.--Ginger 15:37, 4 ஜூலை 2009 (UTC)
தாலிபான் என்பது உருது/அரபி மொழிகளிருந்து வருகிரது. தாலிப் என்றால் மாணவன் என அர்த்தம் (உருதுவில்)--Ginger 11:04, 5 ஜூலை 2009 (UTC)
கம்பியூட்டரும் பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் வருகிறது. அதனால் அது தமிழ் சொல் என்று கொள்ள முடியாது. அது ஆங்க்கிலச் சொல்லின் எழுத்துப்பெயர்ப்பு. சில இடங்களில் எழுத்துப் பெயர்ப்புச் சொற்கள் பயன்படலாம். ஆனால் தமிழில் மாற்றிச் சொற்கள் இருக்கும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. கணினி என்பது தமிழ்.

மரியாதை சொற்கள்[தொகு]

மரியாதை சொற்கள் மாண்புமிகு, மேதகு, திரு, நீதியரசர் என்று அமைச்சர், குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், நீதிபதி இன்னும் பல உயரிய பதவிகளில் முன் குறிப்பிடலாம். தலைப்புகளில் அல்ல. கட்டுரைகளில், வார்ப்புருக்களில் குறிப்பிடலாம் என்பது என் கருத்து.--செல்வம் தமிழ் 12:44, 4 ஜூலை 2009 (UTC)

தவறு. மரியாதைச் சொற்கள் (மாண்புமிகு, மேதகு, திரு, ஐயா, சார்) இவை கட்டுரைகளில் தேவையே இல்லை. அமைச்சர், குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், நீதிபதி போன்றோரை, எடுத்துக்காட்டாக பிரதமர் இந்திரா காந்தி என்றே குறிப்பிடலாம். வேறு எதுவும் தேவையில்லை.--Kanags \பேச்சு 12:54, 4 ஜூலை 2009 (UTC)

ஐயா, சார் தேவையில்லை, ஆங்கிலத்தில் மிஸ்டர் என கூறப்பட்டுள்ளதே. நீதிபதியை - நீதியரசர் என்று குறிப்பிடலாம் இல்லையா--செல்வம் தமிழ் 13:49, 4 ஜூலை 2009 (UTC)

ஆங்கில விக்கியில் பெயருக்கு முன் மிஸ்டர், அருட்தந்தை போன்ற எதுவும் சேர்க்கபடகூடாது என்பது கொள்கையில் உள்ளது. மிஸ்டர் போன்றவை பாத்திரங்களுக்கு பயன்படுத்தலாம் (எ.கா: மிஸ்டர். பீன்)--கார்த்திக் 17:35, 4 ஜூலை 2009 (UTC)

காலக்குறிப்புகள் மற்றும் பிற[தொகு]

நேரம், காலம், இடம், பாலினம், ஒருமை, பன்மை, சிறுவர், குற்றம் சாற்றப்பெற்றவர், முன்னொட்டு, பின்னொட்டு ஆகியவற்றை எவ்வாறு கையாளுவது என்ற பதிவர் அண்ணாகண்ணன் பதிவு பயனுள்ளதாக இருக்கும். சுட்டி --மணியன் 05:58, 8 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

அடிக்குறிப்புகள் தமிழாக்கம்[தொகு]

கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் கேட்ட ஐயங்களில் ஒன்று: அடிக்குறிப்புகள், வெளியிணைப்புகள், உசாத்துணைகளில் வரும் செய்தித் தலைப்புகள், நூல் பெயர்கள் போன்றவற்றைத் தமிழாக்க வேண்டுமா, தமிழில் எழுத்து பெயர்த்துத் தர வேண்டுமா அல்லது அப்படியே ஆங்கிலத்திலேயே தரலாமா? தமிழாக்கித் தருவதால் குறிப்பிட்ட நூல் / செய்தியைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம் ஆகும் என்று தோன்றுகிறது. அப்படியே ஆங்கிலத்திலேயே தந்து விடச் சொல்லலாமா?--ரவி 22:38, 5 மே 2010 (UTC)[பதிலளி]

நடைக்கையேடு குறித்த குறுநூல்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் நடைக்கையேடுகள் பல்வேறு இடங்களில் சிதறி உள்ளன. இவற்றைத் தொகுத்து ஒரு குறுநூலாக்கினால் நன்று. கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் போன்றவர்களுக்குத் தர இலகுவாக இருக்கும். நற்கீரன், மணியன், கலை போன்றோர் இதனைப் பொறுப்பெடுத்துச் செய்து தர முடியுமானால் நன்று :) --ரவி 22:41, 5 மே 2010 (UTC)[பதிலளி]

வாழும் நபர்கள் குறித்த கட்டுரைகள்[தொகு]

வாழும் நபர்கள் குறித்த கட்டுரைகள் எழுதுவதற்கான ஒரு குறைந்தபட்ச வழகாட்டல் தேவைப்படுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்த வரை, தங்களைப் பற்றி தாங்களே எழுதிக் கொள்ளக்கூடிய விளம்பரக் கட்டுரைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. என் பரிந்துரைகள்:

  • ஒருவர், தன்னைப் பற்றித் தானே கட்டுரை எழுதக் கூடாது.
  • ஒருவரின் முக்கியத்துவம் கருதி, விக்கிப்பீடியா பயனர் ஒருவர் அவரையோ அவரைச் சார்ந்தவர்களையோ அணுகி விவரங்களைப் பெற்றாலும், கொடுக்கப்பட்ட விவரங்களை அப்படியே எழுதுதல் கூடாது. தேவைப்படும் தகவல்களை மட்டும் எடுத்துக் கொண்டு கலைக்களஞ்சிய நடைக்கு உட்பட்டே எழுத வேண்டும்.
  • கட்டுரைப் பக்கத்துக்கு மாற்றாக, தன்னுடைய பயனர் பக்கத்தை கட்டுரைப் பக்கம் போன்ற தோற்றம் / மயக்கம் வருமாறு எழுதுதல் கூடாது. பயனர் பக்கத்தில் ஒருவர் என்ன எழுதுகிறார், எப்படி எழுதுகிறார் என்பது குறித்துக் கூடுதல் சுதந்திரம் இருந்தாலும், பயனர் பக்கத்தில் உள்ள தகவல்கள் பெருமளவு விக்கிப்பீடியா ஈடுபாடு சார்புடையதாக இருப்பது நன்று. தேவைப்படும் தகவல்களை விக்கிக்கு வெளியே உள்ள தளத்துக்கு நகர்த்தி விட்டு, அதற்கு ஒரு இணைப்பு மட்டும் தரலாம்.--ரவி 23:02, 5 மே 2010 (UTC)[பதிலளி]

அமைப்புகளில் பொறுப்பு வகிப்போர் விவரம்[தொகு]

சில அமைப்புகள் குறித்த கட்டுரைகளில் தலைவர் தொடக்கம், வட்டச் செயலாளர், சின்னச் சின்ன அணிகளின் துணைச்செயலாளர், பொருளாளர் அளவுக்கு விவரங்கள் நீள்கின்றன. மாறிக் கொண்டே இருக்கும் இது போன்ற தகவல்கள் ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தேவை இல்லை. இவை பெருமளவு விளம்பர / பரப்புரைத் தகவல்கள் போலவே உள்ளன. எனவே, அமைப்புகள் குறித்த கட்டுரைகளில் தலைவர் பெயரையும் சேர்த்து மிக முக்கியமான மூன்று பொறுப்புகளை வகிப்பவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடலாம் என பரிந்துரைக்கிறேன்--ரவி 23:04, 5 மே 2010 (UTC)[பதிலளி]

" தமது " மற்றும் "தனது" - பயன்பாடு "[தொகு]

"ஒருவர்" என்பது போன்ற உயர்திணை (மரியாதையுடன் கூடிய) சொற்களுடன் "தமது" என்ற சொல்லும் "ஒருவன்" என்பது போன்ற சொற்களுடன் "தனது" என்ற சொல்லும் பயன்படுத்தபப்ட வேண்டும் என்று இலக்கண விதி தமிழில் உள்ளதா? அறிந்தவர்கள் தெளிவு படுத்த வேண்டுகிறேன்.--MUTTUVANCHERI NATARAJAN 05:46, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

ஒருவர் என்பதுடன் தமது, தனது இரண்டும் வரலாம். தன், தான், தனது ஆகியவை மரியாதை குறைவான சொற்கள் அல்ல. ஆனால், ஒருவன் என்ற சொல்லுடன் தனது என்பது மட்டுமே வரும். தமது வராது. இது போன்ற ஐயங்களைப் பேச்சு:நடைக் கையேடு பக்கத்தில் கேட்கலாம். ஆலமரத்தடியில் பொதுவான விக்கிப்பீடியா கலந்துரையாடல்களை மட்டும் செய்யலாம். நன்றி--இரவி 05:59, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

நீக்கப்பட்ட பகுதியைத் தக்கத் திருத்தங்கள் செய்து சேர்க்க வேண்டும்[தொகு]

பெயர் அறிவிக்காத பயனர் (212.104.124.172) ஒருவர் 19:33, 21 சனவரி 2012 செய்திருந்த திருத்ததை சோடாபாட்டில் நீக்கி இருந்தார். அதில் பல மிக நல்ல செய்திகள் உள்ளன. தக்கவாறு திருத்தியோ வடிவமைத்தோ நாம் சேர்த்துக்கொள்ளத் தக்கது. நீக்கிய பகுதியின் படி கீழே:

"செயப்பாட்டுவினை (passive voice) பெரும்பாலான இடங்களில் தவிர்க்கத்தக்கது. அது வாசிப்பதற்குத் தடையாகவும் தமிழ்மொழிக்கு இயல்பல்லாததால் குழப்பமாகவும் இருக்கும். "தவிர்க்கப்படக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்பதைத் "தவிர்க்கக்கூடிய சொற்பயன்பாடுகள்" என்றே சொல்லலாம். அதுதான் இயல்பான பேச்சுவழக்கும் பண்டைத்திராவிடமொழி இயல்புமாகும். செயப்பாட்டுவினை பெரும்பாலும் ஆங்கிலத்தின் செயப்பாட்டு வினையை அப்படியே நேரடிமொழிபெயர்ப்பால் விளைவது. "Edited pages" என்பதைத் "தொகுக்கப்பட்ட பக்கங்கள்" என்னாமல் "தொகுத்த பக்கங்கள்" என்றே இயல்பாகச் சொல்லலாம். நாம் தமிழ்மொழியில் "கேட்ட கேள்வி" என்றுதான் சொல்கிறோம். "கேட்கப்பட்ட கேள்வி" என்று சொல்வதில்லையே! சிலசமயங்களில் குழப்பத்தைத் தவிர்க்கவும் நெருக்கடியினாலும் செயப்பாட்டுவினையைப் புழங்குவதில் தவறில்லை. இங்கே சொல்லியுள்ளது ("சொல்லப்பட்டுள்ளது" என்று சொல்லவேண்டாம்!)பொதுவான நெறிமுறையேU

--செல்வா 14:53, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அந்தப் பத்தி ஏற்கனவே உள்ளது செல்வா (பெரியண்ணன் சந்திரசேகரன் சேர்த்ததாக நினைவு). அதனால்தான் சோடாபாட்டில் நீக்கியிருப்பார். -- சுந்தர் \பேச்சு 15:00, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]
அது சோதனைத் தொகுப்பு. ஏற்கனவே உள்ள பத்தியை அனானி ஏழெட்டு முறை மீண்டும் படியெடுத்து சேர்த்திருந்தார். நான் சரியான எதையும் நீக்கவில்லை--சோடாபாட்டில்உரையாடுக 15:06, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]
ஓ!!நன்றி. --செல்வா 15:09, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

எளிய நடை[தொகு]

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழ் விக்கிப்பீடியாவில் பல நேரம் ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்து மொழிபெயர்க்கிறோம். அதனால், பல நேரங்களில் பின்வரும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

  1. மிகுதியான செயப்பாட்டு வினைப் பயன்பாடு. ஆங்கிலத்தில் கலைக்களஞ்சிய நடையில் இன்னார் செய்தார் என்பதை வெளிப்படையாகச் சொல்வதைக் குறிக்காமல் விடும் வகையில் செயப்பாட்டு வினை அதிகமாகப் பயன்படுகிறது. ஆனால் தமிழில் வினையைச் செய்பவர் இல்லாமல் இருக்கலாம். (Tamil is a null subject language.) அதனால், செயப்பாட்டுவினை இல்லாமலேயே அவ்வாறு செய்ய முடியும். செயப்பாட்டு வினையைக் குறைத்து எழுதும்போது இயல்பாக இருப்பதுடன் வரியின் நீளமும் குறைவதால் படிப்பதற்கு எளிதாகும். காட்டாக, நட்டுவைத்த மரம் என்றால் இயல்பு. நட்டுவைக்கப்பட்ட மரம் என்று எழுதத்தேவையில்லை.
  2. ஆங்கிலச் சொல் வரிசை. தமிழில் பலவிதமான சொல்வரிசைகள் இருக்கும்போதும் பொருள் கொள்ள முடியும் என்றாலும், நீளமான வரிகளில் சில பகுதிகள் வேறு சில பகுதிகளுடன் ஒட்டி வந்தால்தான் இயல்பாகவும், படிப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.
  3. உட்கூறுகளைச் சேர்த்து எழுதுவது. ஆங்கிலத்தில் பல clause-களை இணைத்து எழுதுவது வழக்கில் உள்ளது. எளிமை பொருட்டு தமிழ் விக்கியில் அவற்றைப் பிரித்துத் தனித்தனி வரிகளில் எழுதுவது நல்லது என நினைக்கிறேன்.

மேலே நான் குறிப்பிட்டவைகளுக்கு எடுத்துக்காட்டுக்களைத் தர முயலுகிறேன். பொதுவாக ஏற்பு இருந்தால் நடைக்கையேட்டில் எடுத்துக்காட்டுகளுடன் சேர்த்து விடலாம். இன்னும் சில இருக்கின்றன, இப்போது நினைவில்லை. சில வகையான திருத்தங்களை தானியங்கி வழியாகக் கூடச் செய்ய முடியுமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 14:54, 22 சனவரி 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:16, 17 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மற்றும்[தொகு]

பேச்சு:அஃப்ளாடாக்சின் பக்கத்தில் இருந்து:

மிக அதிகமாக "மற்றும்" என்னும் சொல் வந்தால் புரிந்துகொள்வது கடினமாக இருப்பினும், இயல்பாகவும் இல்லை. ஆங்கிலத்தில் கடைசியில் and சேர்ப்பது போல் நாம் சேர்ப்பது மிகவும் செயற்கையாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன். பால் மற்றும் தேன் என்பதை விட பாலும் தேனும் என்று உம் சேர்த்து எழுதுவது இயல்பாக உள்ளது. 3, 4 சொற்கள் வந்தாலும் ஒன்று காற்புள்ளி இட்டு எழுதலாம் அல்லது உம் சேர்த்து எழுதலாம். சில இடங்களில் நேரிடும் சிக்கலையும் அறிவேன் (வேற்றுமைகளோடு சேர்ந்து வரும்பொழுது). --செல்வா 13:24, 28 சனவரி 2012 (UTC)

பல கட்டுரைகளை உரை திருத்தும் போது, தேவையன்றியும் அளவுக்கு அதிகமாகவும் மற்றும் பயன்படுத்தும் இடங்கள் வாசிப்புக்கு இடையூறாகவும் சில வேளைகளில் இலக்கணப் பிழையாகவும் உள்ளது. எடுத்துக்காட்டு:

//இந்தக் காலகட்டத்தில் கட்டுரைகளுக்குப் பதிலாக, ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் கொண்டுவரவுள்ள இணையத் திருட்டு நிறுத்தல் சட்டத்திற்கும் (SOPA) மற்றும் அறிவுசார் சொத்துரிமை காப்பு சட்டத்திற்கும் (PIPA) எதிரான அறிக்கையைத் தாங்கிவந்தது.//

என்பதில் உம் போட்டு எழுதும் போது இடையில் மற்றும் வருவது தவறு.

இது குறித்த வழிகாட்டை நடைக்கையேட்டில் சேர்க்க வேண்டும்--இரவி 21:00, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஆண்டுகள் பற்றிய ஐயங்கள்[தொகு]

ஆண்டுகள் பயன்பாடு குறித்து இரு ஐயங்கள்:

  1. 1988 ல் அல்லது 1988 இல் - எது பரிந்துரைக்கப்படுகிறது?
  2. சொற்றொடரில் ஆண்டு வரும் இடம் பற்றிய பயன்பாடு. In 1988, Rama killed Ravana என்பதை அப்படியே ”1998 இல், ராமன் ராவணனைக் கொன்றான்” என்று எழுதுவது உகந்ததா? அல்லது எழுவாய்க்குப் பின்னரே ஆண்டு வருமாறு எழுத வேண்டுமா? அல்லது பத்தியில் காலவரிசைக்கு / நிகழ்வுக்குத் தரப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்து மாற்றிக் கொள்வதா?--சோடாபாட்டில்உரையாடுக 04:46, 11 பெப்ரவரி 2012 (UTC)

இல்லா[தொகு]

ஒப்பிலா, பேசா, மாறா என்பது போன்று வரும் சொற்களின் இறுதியில் சந்தி வராது என நினைக்கிறேன்.

ஒப்பிலா தலைவன், மாறா காதல், பேசா குழந்தை - சரி.

ஒப்பிலாத் தலைவன், மாறாக் காதல், பேசாக் குழந்தை - தவறு.

இத்தவறு பரவலான ஒன்றாக உள்ளது.

இதை உறுதி செய்தால் நடைக் கையேட்டில் சேர்க்கலாம். --இரவி (பேச்சு) 08:20, 2 மார்ச் 2012 (UTC)

ஆம், இதுகுறித்து தமிழ் நடைக்கையேடு எனும் நூலில் பார்த்ததாக நினைவு. உறுதிப்படுத்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:18, 3 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

பகாப்பதம் என்ற சொல் நீண்ட காலமாக வழக்கிலுள்ளது. அதுவும் தவறா??? --மதனாகரன் (பேச்சு) 11:30, 3 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ்நடைக் கையேட்டில் இலா என்பது பற்றி எந்த காட்டும் இல்லை. மற்றபடி பொதுவாக ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைத் தொடர்ந்து ஒற்று மிகும் கன அக்கையேட்டில் தந்துள்ளார்கள். பகாப்பதம் சரியே. இரவி நீங்கள் குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் வேறு அமைதி பொருட்டு அவ்வாறு விதிவிலக்கு இருந்தால் சான்று கிடைக்கிறதா பாருங்கள். இப்போதைக்கு ஒற்று மிகும் என்பதற்கான சான்று தெளிவாக உள்ளது. -- சுந்தர் \பேச்சு 13:50, 6 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இரவி வினைமுற்றுத் தொடர் பற்றிக் குறிப்பிட வந்துள்ளார் என நினைக்கின்றேன். பேசா குழந்தைகள் (குழந்தைகள் பேசா எனும் பொருளில்) என்று வரும்போது ஒற்று மிகாது. --மதனாகரன் (பேச்சு) 11:00, 9 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆனால் மேலேயுள்ள எடுத்துக்காட்டுக்களில் சில அவ்வடிவில் இல்லையென நினைக்கிறேன். எப்படியாவது சொற்புணர்ச்சிக்கான ஒரு எளிய கையேடு தேவை. -- சுந்தர் \பேச்சு 09:05, 10 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
http://ethirneechal.blogspot.fi/p/tamil-grammar.html தொடர்புடைய பதிவு -- சுந்தர் \பேச்சு 09:06, 31 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

மாறிகளுக்கான குறியீடு[தொகு]

கணித, அறிவியல் மாறிகளுக்கு ஆங்கில (இலத்தீன்), கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகிறோம். இம்மொழிகளை அறியாதவர்களுக்காகவும், ஓர் ஒழுங்கு பொருட்டும் இவற்றுக்குத் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தலாமா? எவ்வெவ் எழுத்துக்களைப் பயன்படுத்துவது நல்லது. இணைக்கையில் தலைகீழாகும் தோற்றமுரண்#திசைவெளிப் பார்வை - இப்பத்திக்கான பரிந்துரைகளை வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 07:52, 3 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இணைக்கையில் தலைகீழாகும் தோற்றமுரண்#இம்முரண்தோற்றத்தின் உளவியற் பின்புலம் - இங்கு நானாக உயிரெழுத்துக்களை மாறிகளுக்கும், உறுப்பு எண்களுக்கு ஆங்கிலத்தில் i எழுத்துக்கு மாற்றாக ககரத்தையும் பயன்படுத்தியுள்ளேன். இது சரியா என்றும் பார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 06:46, 10 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

முதல் வரியில் அதிக குறிப்புகள்[தொகு]

கட்டுரையின் முதல் வரியில், மூல மொழிப் பெயர், ஆங்கிலப் பெயர், அதன் எழுத்துப் பெயர்ப்பு, ஒலி வடிவம், பிறப்பு - இறப்பு, பிற பெயர்கள் என அனைத்தையும் திணிப்பது படிப்பதற்கு இடையூறாக அமைகிறது. நாடுகள் தொடர்பான கட்டுரையாக இருந்தால் மூன்றுக்கு மேற்பட்ட ஆட்சி மொழிகளைக் கொண்டிருந்தால் மூன்றினையும் குறிப்பிட்டு, அவற்றிற்கான எழுத்துப்பெயர்ப்பையும் குறிப்பிடுவது சரியாக அமையாது. வேற்று நாட்டு நபர் எனில், அவரின் முழு நீளப் பெயர், அதன் எழுத்துப் பெயர்ப்பு, பெயர்ச் சுருக்கம், பிறப்பு -இறப்பு தேதி என நீள்கிறது. பெரும்பாலான கட்டுரைகளில் வார்ப்புரு இருப்பதால், வார்ப்புருவினால் முதல் வரி ஏழு எட்டு வரிகளாக மடங்கி விடுகிறது. இவை அனைத்தையும் முதல் வரியில் இடுவதால், முதல் வரி மட்டுமே ஒரு பத்தி போலத் தோன்றும் வகையில் உள்ளது. இவை அனைத்தையும் வார்ப்புருவில் இடுவது சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என கருதுகிறேன். தேவையெனில் ஒன்றிரண்டை மட்டும் முதல் வரியில் தரலாம் என்பது என் கருத்து. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:54, 1 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில், முதல் வரியில் இடாது அதே வேளை சரியான கவனம் பெறும் வகையில் வார்ப்புரு மூலம் எப்படி இத்தகவலைக் காட்சிப்படுத்துவீர்கள் என்பதற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தர முடியுமா?--இரவி (பேச்சு) 05:22, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

திகதியும் எண்களும்[தொகு]

தமிழில் திகதிகளை எழுதுகையில் 8 செப்டம்பர் 1943 என்றோ செப்டம்பர் 8, 1943 என்றோ எழுதுவது தமிழ் முறைக்கு ஒவ்வாதது. தமிழ் முறையில் எழுதுகையில் 1943 செப்தெம்பர் 8 என்றவாறு எழுதுவதே சரியானது. ஆண்டு, மாதம், திகதி என்ற ஒழுங்கில் இடம் பெற வேண்டும். அத்துடன் 8 ல் என்றோ 8 ம் என்றோ 8 ன் என்றோ எழுதுவதும் தவறு. ஏனெனில் பகுபதங்களின் பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் போன்ற எவ்வுறுப்பும் மெய்யெழுத்தில் தொடங்காத அதே வேளை (ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன போன்ற) வேற்றுமை உருபு எதுவும் மெய்யெழுத்தில் தொடங்குவதுமில்லை. எனவே, அவ்வாறான இடங்களில் 8 இல், 8 ஆம், 8 இன் என்றவாறு எழுதுவதே முறை. எனவே, இதற்கு மாறான வடிவங்களில் எழுதுவோர் தமது எழுத்து நடையைத் திருத்திக் கொள்ள வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 05:17, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

8 இல், 8 ஆம், 8 இன் என எழுதவேண்டும் எனும் தங்களின் கருத்து சரியானதே. எனினும் ஆண்டு, மாதம், திகதி எனும் ஒழுங்கே பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கு காரணம்/சான்று ஏதாவ்து உண்டா? மேலும், செப்தெம்பர் என்பது எவ்வகையில் சரியாகும்? ப் இன் பின் த் வருவதற்குத் தமிழில் இலக்கணமில்லையே! செப்டம்பர்/செப்தெம்பர் இரண்டுமே தவறே. வேண்டுமானால் செத்தெம்பர் எனலாம். எவ்வாறாயினும் இவ்வாறான மாற்றங்கள் தேவையற்றவை என்பதே எனது பணிவான கருத்து. --சிவகோசரன் (பேச்சு) 08:19, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழில் திகதிகளை எழுதும் போது ஆண்டு, மாதம், நாள் எனும் ஒழுங்கில் எழுதப்படுவதே பன்னெடுங்காலமாக வழக்கத்திலுள்ளது. சாதாரணமாகக் கூறினாலும் இரண்டு யனவரி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தேழாம் திகதி என்று கூறுவதில்லை. எண்களில் எழுதுவதை எழுத்தில் எழுதிப் பார்த்தால் தெரியும். பொதுவாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தேழாம் ஆண்டு யனவரி மாதம் இரண்டாம் திகதி என்றோ ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தேழு யனவரி இரண்டாம் திகதி என்றோ குறிப்பிடுவதே வழமை. இன்றைய நாளை எடுத்துக் கொண்டால், ஓகத்து மூன்று இரண்டாயிரத்துப் பதினான்காம் திகதி என்றோ மூன்று ஓகத்து இரண்டாயிரத்துப் பதினான்காம் திகதி என்றோ யாரும் கூறுவதில்லை. இரண்டாயிரத்துப் பதினான்கு ஓகத்து மூன்றாம் திகதி என்றவாறு ஆண்டு, மாதம், திகதி என்ற ஒழுங்கில் குறிப்பிடுவதே முறை. நான் செப்தெம்பர் என்று குறித்தது அவ்வாறுதான் குறிக்க வேண்டும் என்பதற்காகவல்ல. ஒரு உதாரணத்துக்கு மட்டுமே. எனினும் சப்தம், சகாப்தம், எகிப்து, திருப்தி, ஆப்த நண்பன் போன்ற சொற்கள் பன்னெடுங்காலமாகப் புழக்கத்திலுள்ளதைக் கவனிக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 04:59, 3 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

இதனோடு தொடர்புடைய என்னுடைய எண்ணம் ஒன்று, நாட்களை உள்ளிட ஒரு வார்ப்புருவை உருவாக்கி, அனைவரையும் அவ்வார்ப்புரு பயன்படுத்தச் சொன்னால், அனைத்து கட்டுரைகளிலும் ஒரே சீரான வடிவம் மட்டும் எழுத்துக்கோர்வையோடு அமைவதோடு, இப்பொருளில் ஒரு முடிவான ஒப்புதல் ஏற்படும்போது, ஒரு இடத்தில் மாற்றுவதன்மூலம் அனைத்து இடங்களிலும் மாற்றலாம். - தமிழ்த்தம்பி (பேச்சு) 09:41, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:திகதி / Template:Date (en:Template:Date) விரிவுப்படுத்திப் பயன்படுத்த வேண்டும்! - தமிழ்த்தம்பி (பேச்சு) 10:38, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
convert என்ற வார்ப்புரு உங்கள் நோக்கத்தை நிறைவு செய்யும். தொலைவை மைல்களில் தந்து, வார்ப்புருவை இட்டால், அடைப்புக்குறிக்குள் கிலோமீட்டரையும் காட்டும். அதில் திகதியையும் சேர்த்துவிட்டு, அடைப்புக்குறிக்குள் தமிழ்த் திகதி வரும்படி அமைக்கலாம். நிரலர்கள் உதவுவார்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:04, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
குறிப்புக்கு நன்றி, எனக்கும் நிரலாக்கம் வரும், நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன். - தமிழ்த்தம்பி (பேச்சு) 19:56, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

எண்கள் - மில்லியன்களும் ஆயிரங்களும் கோடிகளும்[தொகு]

கட்டுரைகளில் பரவலாக எண்களைக் குறிக்க மில்லியன் பில்லியன் என்ற சொற்களைப் பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கிறேன். இவை தமிழல்லாத சொற்கள் என்பதோடு அல்லாமல் தமிழ் பேசும் இடங்களில் ஆயிரம், நூறாயிரம், கோடி என்று பிரித்துத்தான் பழக்கமே ஒழிய யாரும் மில்லியன்களிலும் பில்லியன்களிலும் எண்ணுவதில்லை என்று நினைக்கிறேன். (இப்பொழுது ஒவ்வொரு மில்லியனையும் நான் மனதில் எண் மாற்றித்தான் படித்துக்கொண்டு இருக்கிறேன்.)

இவ்வாறான ஒரு நடை தற்போது பின்பற்றப்படுவதற்கான காரணம் ஏதேனும் உண்டா? இல்லையென்றால் ஒருசீராக அனைத்துக்கட்டுரைகளிலும் தமிழில் ஆயிரம், நூறாயிரம், கோடி என்று பயன்படுத்துமாறு கையேட்டில் சேர்ப்பதோடு தானியங்கி நிரல் எழுதி இருக்கும் எண்களை மாற்றினால் இனிமை. கருத்துக்களை கூறுங்கள். நன்றி. - தமிழ்த்தம்பி (பேச்சு) 23:03, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

இவை இவற்றை இவைகள் இவைகளை[தொகு]

இவைகள் என்னும் சொல் தமிழ் இலக்கணப்படி சரியா? எனக்குத் தெரிந்தவரை அவை இவை இவற்றுள் பன்மை ஏற்கனவே உள்ளடங்கி இருப்பதால் அவைகள் இவைகள் என்பவை பன்மை இரட்டிப்பு ஆகி தவறாகிவிடுவன. இந்த கட்டுரை கூட இதையே சொல்கிறது. ஆனால் த.வி.யிலும் சரி, பிற வலைய தளங்களிலும் சரி, இவைகள் அவைகள் பரவலாகப் பயன்படுத்துவதோடு ஒரே இடத்தில் இவை இவைகள் இரண்டையும் இடைமாற்றியும் பயன்படுத்துகின்றனர் (காட்டுக்கு இந்த தமிழ் இணைய பல்கலை. பாடம் இலக்கணம் சொல்லித்தருகையில்கூட இவை இவைகள் இரண்டையும் பட்டியலிடுகிறது). இது குறித்து கருத்துக்களை கலந்துபேசி, ஒருசீராக த.வி. முழுவதும் பயன்படுத்த ஒரு பரிந்துரையை கையேட்டில் சேர்க்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். - தமிழ்த்தம்பி (பேச்சு) 08:28, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நானும் இதையே வலியுறுத்துகிறேன். நம்மில் பலர் (குறிப்பாக நான்!) மொழிபெயர்ப்பில் பயிற்சி பெறாததால், ஆங்கிலத்தில் உள்ளவாறே மொழிபெயர்த்துவிடுகிறோம். :( பள்ளியில் படித்த பிறகு தமிழ் பயன்பாடு அரிதாகிவிட்டதாலும் இவ்வாறான பிழை ஏற்பட வாய்ப்புண்டு. ’மற்றும்’, ’அல்லது’ ஆகிய இரு சொற்களும் அப்படியே எழுதப்படுகின்றன. அவனும் அவளும் என்பதைக் கூட அவன் மற்றும் அவள் என்று எழுதி வருகின்றனர். சொல் அமைப்பிலும் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. எ.கா: வாத நோய்க்கெதிரான ஐரோப்பிய கூட்டமைப்பு என்பதை ஐரோப்பிய வாத நோய்க்கெதிரான கூட்டமைப்பு என்று எழுதியிருந்தனர். ’செய்தனர்’ என்பதை ’செய்தார்கள்’ என்றும் எழுதும் பழக்கம் வந்துவிட்டது. ’இதை நகர்த்த முடியும்’ என்பது செயற்கையான முறையில் ‘இந்த நகர்த்தலைச் செய்ய முடியும்’ என்று எழுதப்படுகிறது. :( (விக்கிப்பீடியாவில் அதிகம் பங்களிக்கும் பயனர்களின் எழுத்து நடையின் தாக்கம் பல கட்டுரைகளில் இருக்கும். இதை ஒட்டியே மற்றவர்களும் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தி!) ஆங்கிலத்தில் உள்ள நீண்ட வரியை அவ்வாறே மொழிபெயர்ப்பதால் புரியாதபடியாகிவிடுகிறது. அவற்றை உடைத்து எழுதலாம். நீங்கள் காணும் இடங்களில் தவறுகளை திருத்திவிடுங்கள். அடிக்கடி ஒரு தவறை காண நேர்ந்தால் அதை இந்த பக்கத்தில் பதிந்து வையுங்கள். திருத்திக் கொள்வோம். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:08, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நன்றி தமிழ்க்குரிசில். "ஐரோப்பிய வாத நோய்க்கெதிரான" :D நல்ல சிரிப்பு போங்கள் . இந்திய வாத நோயை யாரும் எதிர்க்கவில்லையா? :) நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பல கட்டுரைகளை ஆ.வி.யிலிருந்து மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் மொழிபெயர்ப்பு தனிப்பிரிவைக் கையாள "ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மொழிபெயர்ப்பது" குறித்து ஒரு அறிமுகப்பாடமோ, கையேடோ எழுதி, பதுப்பயனர் அறிமுக வார்ப்புருவில் இணைக்கலாம். என்னால் முடிந்தபோது அதற்கு பங்களிக்கவும் அவா. - தமிழ்த்தம்பி (பேச்சு) 15:46, 30 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]