ஹிப்போவின் அகஸ்டீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| புனித அகஸ்டீன் Saint Augustine |
|
|---|---|
|
அகஸ்டீன், சாண்ட்ரோ பொட்டிசெல்லியால் வரையப்பட்டது, 1480 |
|
| மேற்றிராணியார், Confessor, Doctor of the Church | |
| பிறப்பு | நவம்பர் 13 354, தாகஸ்டே, நுமிடியா (இப்போது சூக் அஹ்ராஸ், அல்ஜீரியா) |
| இறப்பு | ஆகஸ்ட் 28 430 (அகவை 75), ஹிப்போ ரீஜியஸ், நுமிடியா (தற்போதைய அன்னாபா, அல்ஜீரியா) |
| வணக்கத்துக்குரியவர் ஆக்கப்பட்டமை |
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கிழக்கத்திய மரபுவாதத் திருச்சபைகள் கீழைநாட்டு மரபுவாதம் அங்கிலிக்க காம்யூனியன் லூதரனியம் |
| புனிதத்தலம் | San Pietro in Ciel d'Oro, Pavia, Italy |
| விழா | ஆகஸ்ட் 28 (மேல்நாட்டுக் கிறிஸ்தவம்) ஜூன் 15 (கீழ்நாட்டுக் கிறிஸ்தவம்) |
| Attributes | child; dove; pen; shell, pierced heart |
| Patronage | brewers; printers; இறையியலாளர்கள் Bridgeport, Connecticut; Cagayan de Oro, Philippines; Ida, Philippines; Kalamazoo Michigan; Saint Augustine, Florida; Superior, Wisconsin; Tucson, Arizona; Avilés, Spain |
ஹிப்போவின் அகஸ்டீன் (Augustine of Hippo) எனப்படும் செயிண்ட் அகஸ்டீன் (நவம்பர் 13, 354 – ஆகஸ்ட் 28, 430) ஹிப்போ ரீஜியசின் மேற்றிராணியாராக இருந்தவர். இவர் ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். ஒரு தேவாலயத் தந்தையான அகஸ்டீன், மேல்நாட்டுக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியில் முக்கியமான ஒருவராவார். இவர் புளோட்டினசின் நியோ-பிளேட்டோனிசத்தால் கவரப்பட்டார். இவர் தொடக்க வினை (original sin), நீதியான போர் (just war) ஆகிய கருத்துருக்களை உருவாக்கினார். மேல்நாட்டில் ரோமப் பேரரசு குலைவடையத் தொடங்கிய காலத்தில், திருச்சபை என்பது கடவுளின் நகரம், இது மனிதனின் பொருள்சார்ந்த நகரத்திலும் வேறானது என்னும் கருத்தை முன்வைத்தார். இவரது சிந்தனைகள் மத்தியகாலத்தின் உலகநோக்கில் செல்வாக்குச் செலுத்தின.
அகஸ்டீன் அல்ஜீரியாவில் உள்ளதும், தற்காலத்தில் சூக் அஹ்ராஸ் என வழங்கப்படுவதுமான அக்காலத்து தகாஸ்டே என்னும் நகரில் ஹிப்போவின் மொனிக்கா எனப்படும் ஒரு கத்தோலிக்கத் தாயாருக்குப் பிறந்தார். இவர் வட ஆபிரிக்காவில் கல்வி கற்றார். ஒரு கிறிஸ்தவன் ஆகும்படியான தாயாரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்காமல் இருந்தாலும் பின்னாளில் இவர் கத்தோலிக்கராக மதம் மாறினார்.