எலூத்தேரியுஸ் (திருத்தந்தை)
| புனித எலூத்தேரியுஸ் Eleuterus |
|
| 13ஆம் திருத்தந்தை | |
| ஆட்சி துவக்கம் | கிபி சுமார் 174 |
|---|---|
| ஆட்சி முடிவு | கிபி சுமார் 189 |
| முன்னிருந்தவர் | சொத்தேர் |
| பின்வந்தவர் | முதலாம் விக்டர் |
| பிற தகவல்கள் | |
| பிறப்புப் பெயர் | எலூத்தெருஸ் (அ) எலூத்தேரியுஸ் |
| பிறப்பு ஆண்டும் இடமும் | தெரியவில்லை; நிக்கோப்பொலிஸ், எப்பீருஸ், கிரேக்க நாடு |
| இறப்பு ஆண்டும் இடமும் | கிபி சுமார் 189 உரோமை, உரோமைப் பேரரசு |
| புனிதர் பட்டம் | |
| திருவிழா | மே 26 |
| ஏற்கும் சபை | கத்தோலிக்க திருச்சபை |
திருத்தந்தை புனித எலூத்தேரியுஸ் (Pope Saint Eleuterus) (இறப்பு: கிபி 174) (Greek Ελευθέριος) கிபி சுமார் 174ஆம் ஆண்டிலிருந்து சுமார் 189 வரை உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்[1]. வரலாற்றில் இவர் 13ஆம் திருத்தந்தை ஆவார். வத்திக்கானிலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வமான "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" திருத்தந்தை எலூத்தேரியுஸ் 171இலிருந்து 177 வரை (அல்லது 185இலிருந்து 193 வரை) ஆட்சிசெய்தார் என்று கூறுகிறது. இன்றைய துருக்கியில் உள்ள எப்பீரஸ் பகுதியில் நிக்கோப்பொலிஸ் என்னும் பண்டைய கிரேக்க நகரில் அவர் பிறந்தார்.
- எலூத்தேரியுஸ் (பண்டைக் கிரேக்கம்: Ελευθέριος; இலத்தீன்: Eleuterus/Eleutherius) என்னும் பெயர் கிரேக்க மொழியில் "விடுதலை பெற்றவர்", "சுதந்திரமானவர்" என்று பொருள்படும்.
எலூத்தேரியுசின் சமகாலத்தவரான ஹெகேசிப்பஸ் என்பவர் கூற்றுப்படி, எலூத்தேரியுஸ் உரோமைத் திருச்சபையில் ஒரு திருத்தொண்டராக திருத்தந்தை அனிசேட்டஸ் காலத்திலும் (கிபி சுமார் 154-164), அதன் பின் திருத்தந்தை சொத்தேர் காலத்திலும் பணிசெய்துவிட்டு, சொத்தேரின் இறப்புக்குப் பின் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார் (கிபி சுமார் 174).
[தொகு] மேற்கோள்கள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Pope Eleuterus |
| முன்னர் சொத்தேர் |
உரோமை ஆயர் திருத்தந்தை 174–189 |
பின்னர் முதலாம் விக்டர் |