கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் (Pope Saint Callixtus I or Callistus I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கிபி 217இலிருந்து 222 வரை ஆட்சி செய்தார்[2]. அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை செஃபரீனுஸ் ஆவார். கலிஸ்டசின் இறப்புக்குப் பின் அர்பன் திருத்தந்தையாகப் பதவி ஏற்றார். திருத்தந்தை புனித முதலாம் கலிஸ்டஸ் கத்தோலிக்க திருச்சபையின் 16ஆம் திருத்தந்தை ஆவார். இவரது திருவிழா அக்டோபர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இவர் கல்லறைத் தொழிலாளர்களின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார்.
- கலிஸ்டஸ் (பண்டைக் கிரேக்கம்: Callixtus அல்லது Callistus; இலத்தீன்: Callixtus அல்லது Callistus) என்னும் பெயர் "அழகுமிக்கவர்", "எழில் நிறைந்தவர்" என்னு பொருள்படும்.
வரலாறு [தொகு]
முதலாம் கலிஸ்டஸ் ஆட்சி புரிந்த காலத்தில் உரோமை மன்னர்களாக இருந்தோர் எலகாபலுஸ் (Elagabalus) என்பவரும் அவருக்குப் பின் அலக்சாண்டர் செவேருஸ் (Alexander Severus) என்பவருமாவர். கலிஸ்டஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார்.
கலிஸ்டசின் வரலாறு பற்றிய குறிப்புகள் அவருடைய எதிரிகளின் எழுத்துகளிலிருந்தே தெரிய வருகின்றன. உரோமை நகர் இப்போலித்து (Hippolytus of Rome) என்னும் புகழ்பெற்ற இறையிலார் கலிஸ்டசின் எதிரிகளுள் ஒருவர். அவர் தம் "Philosophumena" என்னும் நூலில் கலிஸ்டசைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
கலிஸ்டஸ் இளமைப் பருவத்தில் ஓர் அடிமையாக இருந்தார். அவரது தலைவர் கார்ப்போஃபொருஸ் (Carpophorus) என்பவர் கைம்பெண்களையும் கைவிடப்பட்ட குழந்தைகளையும் பராமரிப்பதற்காகக் கிறித்தவர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை கலிஸ்டசின் பொறுப்பில் கொடுத்திருந்தார். அந்நிதியைத் தொலைத்துவிட்ட கலிஸ்டஸ் உரோமையிலிருந்து தப்பியோடினார். ஆனால் போர்த்துஸ் என்னும் இடத்தில் பிடிபட்டார். தப்பிப்பதற்காகக் கடலில் குதித்த கலிஸ்டசை அவருடைய தலைவரிடம் ஒப்படைத்தனர். கலிஸ்டசிடம் தாம் கொடுத்த பணத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் அவரை விடுதலை செய்யுமாறு கோரினார்கள். அவர் உரோமையிலிருந்த சில யூதர்களிடம் பணம் கடன் வாங்கவோ திரும்பப் பெறவோ சென்றபோது எழுந்த தகராறில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
கலிஸ்டஸ் கிறித்தவர் என்று தெரிந்ததும் சார்தீனியா தீவில் சுரங்கங்களில் கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்டார். உரோமை அரசன் கோம்மொதுஸ் என்பவரை மார்சியா என்னும் பெண்மணி அணுகி, கிறித்தவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டார். எனவே ஹையசிந்த் என்னும் குரு சார்தீனியாவுக்குச் சென்று அங்கே கட்டாய வேலை செய்ய அனுப்பப்பட்ட கலிஸ்டசுக்கும் பிறருக்கும் விடுதலை பெற்றுக் கொடுத்தார். அப்போது கலிஸ்டசின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவர் ஆன்சியும் என்னும் நகருக்கு அனுப்பப்பட்டார். அங்கே முதலாம் விக்டர் என்னும் திருத்தந்தையிடமிருந்து பெற்ற உதவித் தொகை கொண்டு வாழ்ந்துவந்தார்.
திருத்தந்தை செஃபிரீனுசின் உதவியாளர் [தொகு]
திருத்தந்தை முதலாம் விக்டர் இறந்ததும் செஃபிரீனுஸ் திருத்தந்தையாகப் பதவியேற்றார். இவர் திருத்தொண்டராக இருந்த கலிஸ்டசிடம் உரோமை ஆப்பியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தார்.
மேலும், கலிஸ்டஸ் திருத்தந்தை செஃஃபிரீனுசின் வலது கைபோல் செயல்பட்டு, அவரது ஆலோசனையாளராகவும் விளங்கினார்.
கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டம் [தொகு]
கலிஸ்டசின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் இன்று "புனித கலிஸ்டஸ் கல்லறைப் புதைநிலம்" (Catacomb of St. Callixtus) என்று அழைக்கப்படுகின்றது. கிபி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒன்பது திருத்தந்தையர் அப்புதைநிலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் "திருத்தந்தையரின் சிறுகோவில்" என்று அழைக்கப்படுகிறது. திருத்தந்தை கலிஸ்டஸ் அவருடைய பெயர்கொண்ட கல்லறைத் தோட்டத்தில் அடக்கப்படவில்லை.
பல நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த அக்கல்லறைத் தோட்டப் பகுதி 1849இல் ஜொவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி (Giovanni Battista de Rossi) என்னும் அகழ்வாய்வு வல்லுநரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படல் [தொகு]
திருத்தந்தை செஃபிரீனுஸ் இறந்ததும் அவருக்கு நெருங்கிய துணையாளராகவிருந்த கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலை பெற்ற ஓர் அடிமை திருத்தந்தையாகப் பதவி ஏற்பதற்கு அக்காலத்தில் தடையிருக்கவில்லை. கிபி ஐந்தாம் நூற்றாண்டில்தான் திருத்தந்தை முதலாம் லியோ சட்டம் இயற்றி, விடுதலை பெற்ற அடிமை திருத்தந்தையாக முடியாது என்று வரையறுத்தார்.
கலிஸ்டசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் [தொகு]
திருத்தந்தை கலிஸ்டசைப் பற்றி அவருடைய எதிரியாக இருந்த இப்போலித்து என்பவர் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவற்றுள் சில:
- கலிஸ்டஸ் திருச்சபையின் உண்மையான போதனையைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் கிறித்தவக் கொள்கையை கலிஸ்டஸ் "ஒரே கடவுள் மூன்று வடிவங்களில் தந்தை, மகன், தூய ஆவி என விளங்குகிறார்" என்று கலிஸ்டஸ் கூறியதாகக் குற்றம் சாட்டினார்.
- இருமுறை அல்லது மூன்றுமுறை திருமணம் செய்தவர்களையும் குருத்துவ நிலைபெற அனுமதித்தது தவறு என்னும் குற்றச்சாட்டு.
- அடிமைகளுக்கும் சுதந்திர மக்களுக்கும் இடையே நிகழும் திருமணம் செல்லுபடியாகாது என்று கலிஸ்டஸ் கூறவில்லை என்னும் குற்றச்சாட்டு.
- விபசாரத்தில் ஈடுபட்டோர் மனம் திரும்பி பாவப் பரிகாரம் செய்தபின் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தவறு என்னும் குற்றச்சாட்டு.
ஆக, இப்போலித்து கடுமையான ஒழுக்க நெறியைப் போதித்தார். கலிஸ்டசோ மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார். எனவே, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கலிஸ்டஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இப்போலித்துவின் ஆதரவாளர்கள் அவரை "எதிர்-திருத்தந்தையாக" (Anti-Pope) தேர்ந்தெடுத்தனர். இப்போலித்து தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு நாடுகடத்தப்பட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். இறப்பதற்கு முன் அவர் திருச்சபையோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டார். அவர் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராகப் போற்றப்படுகிறார்.
மொந்தானியக் கொள்கைக்கு ஆதரவு அளித்த தெர்த்தூல்லியன் என்னும் பண்டைக் காலக் கிறித்தவ அறிஞரோடும் கலிஸ்டஸ் மோத வேண்டியதாயிற்று.
திருத்தந்தை கலிஸ்டசின் இறப்பு [தொகு]
"உரோமை மறைச்சாட்சியர் நூல்" (Roman Martyrology) என்னும் பழைய ஏட்டில், புனித பேதுருவுக்கு அடுத்த படியாக "மறைச்சாட்சி" என்னும் பட்டம் புனித கலிஸ்டசுக்கே வழங்கப்பட்டுள்ளது.
அவுரேலியா நெடுஞ்சாலையில் (Via Aurelia) அமைந்திருந்த கலிஸ்டசின் கல்லறை 1960இல் கண்டெடுக்கப்பட்டது. அக்கல்லறை திருத்தந்தை முதலாம் ஜூலியஸ் என்பவரால் கட்டியெழுப்பப்பட்டது. அதில் காணப்பட்ட குறிப்பின்படி, கலிஸ்டஸ் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். அவரைக் கம்புகளால் அடித்துக் கொன்றார்கள். அவரது உடல் ஒரு குழியில் வீசப்பட்டது. அதனருகே கலிஸ்டசே எழுப்பியிருந்த புனித மரியா கோவில் (Basilica of Santa Maria in Trastevere) உள்ளது.
ஆதாரங்கள் [தொகு]
|
கத்தோலிக்க புனிதர்கள் அகர வரிசை (வழிபாட்டு ஆண்டு விழா முறைப்படி) |
|
அக்கிலேயு, நெரேயு · அக்குவினோ நகர் தோமா · அகஸ்டின் ஜாவோ ரோங்கு · அகுஸ்தீன் · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · அங்கேரி எலிசபெத்து · அங்கேரி ஸ்தேவான் · அசிசி நகர் பிரான்சிஸ் · அடால்பெர்ட் · அத்தனாசியு · அந்தியோக்கு நகர் இஞ்ஞாசி · அந்திரேயா · அந்தோணியார் (பதுவா நகர்) · அந்தோணி மரிய கிளாரெட் · அந்தோனி மரிய செக்கரியா · அப்போலினாரிஸ் · அம்புரோஸ் · அரசியான தூய கன்னி மரியா · அருளானந்தர் (ஜான் தெ பிரிட்டோ) · அல்போன்ஸ் மரிய லிகோரி · அல்போன்சா முட்டாத்துப்பாடாத் · அலக்கோக்கு மார்கரீத் மரியா · அலெக்சாந்திரியா நகர் கேத்தரின் · அலெக்சாந்திரியா நகர சிரில் · அலோசியுஸ் கொன்சாகா · அவிலா நகர் இயேசுவின் தெரேசா · அன்னா, சுவக்கீம் (தூய மரியாவின் பெற்றோர்) · அன்னை தெரேசா · ஆகத்தா · ஆக்னெஸ் · ஆஞ்சலா மெரிசி · ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · ஆண்டவரின் தோற்றமாற்றம் · அன்னை (கன்னி மரியாவின் பிறப்பு) · ஆல்பர்ட் (பெரிய) · ஆன்சலம் · ஆன்ஸ்காரியு · ஆன்ரூ கிம் தே கோன் · ஆன்ரு டுங் லாக் · இசிதோர் · இஞ்ஞாசி (லொயோலா) · இப்போலித்து; போன்சியானு · இயேசுவின் (அவிலா நகர்) தெரேசா · இயேசுவின் திருப்பெயர் · இரண்டாம் சிக்ஸ்து · இரபேல்; கபிரியேல்; மிக்கேல் ·இரனேயு · இரேய்முந்து பெனாப்போர்த்து · இலாரியார் · இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு · இறை யோவான் · இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் · ஈசாக்கு ஜோகு; ஜான் பிரபூபு · உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர் · எட்விஜ் · எபிரேம் · எமிலியன் எரோணிமுசு · எருசலேம் நகர் சிரில் · எரோணிமுசு · எரோணிமுசு எமிலியன் · எலிசபெத்து (அங்கேரி) · எலிசபெத்து (போர்த்துகல் · எலியாஸ் சவாரா குரியாக்கோஸ் · என்றி · ஏழாம் கிரகோரி · ஐந்தாம் பயஸ் · கசிமீர் · கபிரியேல், மிக்கேல், இரபேல் · கப்பெஸ்தரானோ நகர் யோவான் · கமில்லஸ் தெ லெல்லிஸ் · கயத்தான் · கலசான்ஸ் நகர் யோசேப்பு · கலிஸ்து (முதலாம்) · கனீசியு பீட்டர் · காசியா சபை ரீத்தா · கார்மேல் அன்னை · காவல் தூதர்கள் (தூய) · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · கான்டி நகர் யோவான் · கிம் தே கோன், ஆன்ரூ · கிரகோரியார்; நசியான்சன்; பெரிய பசிலியார் · கிரகோரி (பெரிய) · கிரகோரி (ஏழாம்) · கிளமெண்ட் (முதலாம்) · கிளாரா ·கிளாவர் பீட்டர் · யோவான் கிறிசோஸ்தோம் · கிறிசோலோகு பீட்டர் · கிறிஸ்டோபர் மெகாலன் · கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு · குரியாக்கோஸ் எலியாஸ் சவாரா · குழந்தை இயேசுவின் தெரேசா · கேத்தரின் (அலெக்சாந்திரியா நகர்) · கேத்தரின் (சியென்னா நகர்) · கொர்னேலியு; சிப்பிரியான் · மரியா கொரெற்றி · கொலும்பன் · கொன்சாகா அலோசியுஸ் · கொன்சாலோ கார்சியா · கோஸ்மாஸ்; தமியான் · சலேசியார் பிரான்சிஸ் · சவேரியார் பிரான்சிஸ் · சனுவாரியுசு · சாந்தால் நகர் ஜான் பிரான்சிஸ்கா · சார்லஸ் பொரோமியோ · சார்லஸ் லுவாங்கா · சார்பெல் மாக்லுப் · சானல் பியர் · சிக்மரிங்கன் நகர் பிதேலிஸ் · சிக்ஸ்து (இரண்டாம்) · சிப்பிரியான் · சியென்னா நகர் கேத்தரின் · சியன்னா நகர் பெர்னார்தீன் · சிராமெல் மரிய தெரேசா · அலெக்சாந்திரியா நகர சிரில் · சிரில் (எருசலேம் நகர்) · சிரில்; மெத்தோடியு · சில்வெஸ்தர் (முதலாம்) · சிலுவையின் பவுல் · சிலுவையின் யோவான் · சீமோன்; யூதா · சுவக்கீம்; அன்னா · செசிலியா · செபஸ்தியார் · செபமாலை அன்னை · சோங் காசாங் பவுல் · ஜஸ்டின் · ஜார்ஜ் · ஜாவோ ரோங்கு அகஸ்டின் · ஜான் தெ பிரிட்டோ · ஜான் பாப்டிஸ்ட் (லசால் நகர்) · ஜான் பிரபூபு; ஈசாக்கு ஜோகு · ஜான் பிரான்சிஸ்கா (சாந்தால் நகர்) · ஜான் பிசர்; தாமஸ் மூர் · ஜான் போஸ்கோ · ஜான் மரிய வியான்னி · ஜான் யூட்ஸ் · ஜூலியன் எய்மார்ட் பீட்டர் · ஜெர்த்ரூது · யோசப் வாசு · ஜோஸ்பீன் பக்கீத்தா · ஸ்காட்லாந்து மார்கரீத் · ஸ்கொலாஸ்திக்கா · ஸ்தேவான் · டுங் லாக் ஆன்ரூ · தமசுஸ் (முதலாம்) · தமசேன் யோவான் · தமியான்; கோஸ்மாஸ் · தமியான் பீட்டர் · தனிஸ்லாஸ் · தாமஸ் பெக்கட் · தாமஸ் மூர்; ஜான் பிசர் · திமொத்தேயு; தீத்து · திருச்சிலுவையின் தெரேசா பெனடிக்டா · திருச்சிலுவையின் மகிமை · திருமுழுக்கு யோவானின் பிறப்பு · திருமுழுக்கு யோவானின் பாடுகள் · தியோனிசியு · தீத்து; திமொத்தேயு · துரீபியு மாங்ரோவேகோ · தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் · தூய கன்னி மரியா அரசி · தூய கன்னி மரியா இறைவனின் தாய் · தூய கன்னி மரி ஊழியர் சபை நிறுவிய புனிதர் எழுவர் · தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் · தூய கன்னி மரியாவின் கணவர் யோசேப்பு · தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · தூய கன்னி மரி பிறப்பு (ஆரோக்கிய அன்னை) · தூய கன்னி மரியாவின் பெற்றோர் சுவக்கீம், அன்னா · தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு (பனிமய அன்னை) · தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு · தூய கார்மேல் அன்னை · தூய காவல் தூதர்கள் · தூய செபமாலை அன்னை · தூய பாத்திமா அன்னை · தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) · தூய லூர்து அன்னை · தூர் நகர் மார்ட்டின் · தெ பால் வின்சென்ட் · தெ பிரிட்டோ ஜான் (அருளானந்தர்) · தெ போரஸ் மார்ட்டின் · தெ லெல்லிஸ் கமில்லஸ் · தெரசா (அன்னை) · தெரேசா (இயேசுவின்) (அவிலா நகர்) · தெரேசா (குழந்தை இயேசுவின்) · தெரேசா பெனடிக்டா (திருச்சிலுவையின்) · தொழிலாளர் யோசேப்பு · தோமா · தோமா (அக்குவீனோ நகர்) · தோமினிக் · தோமினிக் சாவியோ · நசியான்சன் கிரகோரியார்; பெரிய பசிலியார் · நார்பெர்ட் · நிக்கோலாஸ் · நெரேயு; அக்கிலேயு · நேரி பிலிப்பு · நோலா பவுலீனு · பக்கீத்தா ஜோஸ்பீன் · பங்கிராஸ் · பசிலியார் (பெரிய); நசியான்சன் கிரகோரியார் · பத்தாம் பயஸ் · பதுவா நகர் அந்தோணியார் · பபியான் · பயஸ் (ஐந்தாம்) · பயஸ் (பத்தாம்) · பர்த்தலமேயு · பர்னபா · பவுல் (சிலுவையின்) · பவுல் சோங் காசாங் · பவுல்; பேதுரு · பவுல், பேதுரு பேராலயங்களின் நேர்ந்தளிப்பு · பவுல் மனமாற்றம் · பவுல் மீகி · பவுலீனு நோலா · பவோலா பிரான்சிஸ் · பனிமய அன்னை (தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு · பாசி நகர் மகதலா மரியா · பாத்திமா அன்னை (தூய) · பிசர் ஜான்; தாமஸ் மூர் · பிதேலிஸ் (சிக்மரிங்கன் நகர்) · பியர் சானல் · பிரான்சிஸ்கா (உரோமை நகர்) · பிரான்சிஸ் (அசிசி நகர்) · பிரான்சிஸ் சலேசியார் · பிரான்சிஸ் சவேரியார் · பிரான்சிஸ் பவோலா · பிரிசித்தா · பிரிந்திசி நகர் லாரன்ஸ் · பிலிப்பு நேரி · பிலிப்பு; யாக்கோபு · பிளாசியு · பீட்டர் கனீசியு · பீட்டர் கிறிசோலகு · பீட்டர் கிளாவர் · பீட்டர் ஜூலியன் எய்மார்ட் · பீட்டர் தமியான் · பீட்டர் மார்சலின் · பீடு (வணக்கத்துக்குரிய) · புரூனோ · புனிதர் அனைவர் · பெக்கட் தாமஸ் · பெர்நார்ட் · பெர்பெத்துவா; பெலிசித்தா · பெலிசித்தா; பெர்பெத்துவா · பெர்னார்தீன் (சியன்னா நகர்) · பெரர் வின்சென்ட் · பெரிய ஆல்பெர்ட் · பெரிய கிரகோரியார் · பெரிய லியோ · பெல்லார்மின் ராபர்ட் · பெனடிக்ட் · பெனடிக்டா தெரேசா (திருச்சிலுவையின்) · பெனாப்போர்த்து இரேய்முந்து · பேட்ரிக் · பேதுருவின் தலைமைப் பீடம் · பேதுரு; பவுல் · பொரோமியோ சார்லஸ் · பொலிக்கார்ப்பு · பொனவெந்தூர் · போஸ்கோ ஜான் · போன்சியானு; இப்போலித்து · போனிப்பாஸ் · மகதலா மரியா · மகதலா மரியா (பாசி நகர்) · மத்தியா · மத்தேயு · மரிய கிளாரெட் அந்தோணி · மரியா கொரெற்றி · மரிய கோல்பே மாக்சிமிலியன் · மரிய செக்கரியா · மரிய தெரேசா சிராமெல் · மரிய லிகோரி அல்போன்ஸ் · மரிய வியான்னி ஜான் · மரியா மகதலா · மரியா மகதலா (பாசி நகர்) · மரியாவின் திருப்பெயர் · மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · மாக்சிமிலியன் மரிய கோல்பே · மாக்லுப் சார்பெல் · மாங்ரோவேகோ துரீபியு · மாசில்லாக் குழந்தைகள் · மார்கரீத் மரியா அலக்கோக்கு · மார்சலின் பீட்டர் · மார்ட்டின் தெ போரஸ் · மார்ட்டின் (தூர் நகர்) · மார்ட்டின் (முதலாம்) · மார்த்தா · மாற்கு · மான்போர்ட் நகர் லூயி மரிய கிரிஞ்ஞோ · மிக்கேல், கபிரியேல், ரபேல் (அதிதூதர்கள்) · மீகி பவுல் · முட்டாத்துபாடாத் அல்போன்சா · முதலாம் கலிஸ்து · முதலாம் சில்வெஸ்தர் · முதலாம் கிளமெண்ட் · முதலாம் தமசுஸ் · முதல் மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · முதலாம் மார்ட்டின் · மெகாலன் கிறிஸ்டோபர் · மெத்தோடியு; சிரில் · மெரிசி ஆஞ்சலா · மோனிக்கா · யாக்கோபு · யாக்கோபு; பிலிப்பு · யுசேபியு (வெர்செல்லி நகர் · யூட்ஸ் ஜான் · யூதா; சீமோன் · யோசபாத்து · யோசேப்பு (கலசான்ஸ் நகர்) · யோசேப்பு (தூய கன்னி மரியாவின் கணவர்) · யோசேப்பு (தொழிலாளர்) · யோவான் · யோவான் (இறை) · யோவான் (கப்பெஸ்த்தரானோ நகர்) · யோவான் (கான்டி நகர்) · யோவான் கிறிசோஸ்தோம் · யோவான் (சிலுவையின்) · யோவான் தமசேன் · யோவான் (முதலாம்) · யோவான் லெயோனார்ட் · யோவானின் (திருமுழுக்கு) பிறப்பு · யோவானின் (திருமுழுக்கு) பாடுகள் · ரபேல், மிக்கேல், கபிரியேல் (அதிதூதர்கள்) · ராபர்ட் பெல்லார்மின் · ரீத்தா (காசியா சபை) · ருய்ஸ் லாரன்ஸ் · ரோசா (லீமா நகர்) · ரோமுவால்து · லசால் நகர் ஜான் பாப்டிஸ்ட் · லாரன்ஸ் · லாரன்ஸ் (பிரிந்திசி நகர்) · லாரன்ஸ் ருய்ஸ் · லீமா நகர் ரோசா · லுஸ்தானியா நகர் எலிசபெத்து · லுவாங்கா சார்லஸ் · லூக்கா · லூசியா · லூயி · லூயி மரிய கிரிஞ்ஞோ (மான்போர்ட் நகர் · லூர்து அன்னை (தூய) · லெயோ (பெரிய) · லெயோனார்ட் யோவான் · லொயோலா இஞ்ஞாசி · புனித வனத்து அந்தோனியார் · வணக்கத்துக்குரிய பீடு · யோசப் வாசு · வியாகுல அன்னை (தூய மரியாவின் துயரங்கள் · வியான்னி மரிய ஜான் · வின்சென்ட் · வின்சென்ட் தெ பால் · வின்சென்ட் பெரர் · வெர்செல்லி நகர் யுசேபியு · வென்செஸ்லாஸ் ·
|
|