கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
புனித பேதுரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருத்தூதர் புனித பேதுரு
Saint Peter the Apostle
|

முதலாம் திருத்தந்தை பேதுரு.
ஓவியர்: பீட்டர் பால் ரூபென்ஸ் (1577-1640). ஓலாந்து. |
| பிறப்பு |
தகவலில்லை |
| இறப்பு |
கி.பி. 64; உரோமை |
| முக்கிய திருத்தலங்கள் |
புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகர் |
| திருவிழா |
பெப்ரவரி 22, ஜூன் 29, நவம்பர் 18 |
| சித்தரிக்கப்படும் வகை |
திறவுகோல்கள்; தலைகீழாக சிலுவையில் அறையப்பட்ட மனிதர்; திருச்சபையின் முதல் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையால் போற்றப்படுகிறார். |
புனித பேதுரு (திருத்தந்தை)
Saint Peter |
 |
| ஆட்சி துவக்கம் |
கிபி சுமார் 30 |
| ஆட்சி முடிவு |
கிபி சுமார் 67 |
| முன்னிருந்தவர் |
யாருமில்லை (இவரே முதலாமவர்) |
| பின்வந்தவர் |
லைனஸ் |
புனித பேதுரு அல்லது புனித இராயப்பர் (ஆங்கிலம்:Saint Peter) என்பவர் இயேசு கிறித்து ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) தலைமையானவர். இவரது இயற்பெயர் சீமோன் (Simon) ஆகும். இவரைத் தம் சீடராக அழைத்த இயேசு "பேதுரு" என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு அளித்தார்[1]. இப்பெயரின் தமிழ் வடிவம் இராயப்பர் என்பதாகும். "ராய்" என்னும் தெலுங்குச் சொல்லுக்குப் "பாறை" (கல்) என்பது பொருள்.
பேதுரு கலிலேயாவைச் சேர்ந்த மீனவர் ஆவார். இயேசு இவரைத் தம் சீடராகத் தெரிந்து கொண்டார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். நீரோ மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவர் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். தூய பேதுருவின் கல்லறை உள்ளதாகக் கருதப்படும் வத்திக்கான் நகரத்தில் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான வழிபாட்டிடங்களுள் ஒன்றாகிய புனித பேதுரு பெருங்கோவில் அமைந்துள்ளது.
புதிய ஏற்பாட்டு நூல்களில் பேதுரு [தொகு]
பேதுருவின் வாழ்க்கைக் குறிப்புகள் சில புதிய ஏற்பாட்டு நூல்களாகிய நற்செய்திகளிலும் திருத்தூதர் பணி நூலிலும் உள்ளன. இயேசுவின் பணிக்காலத்தில் அவர் தம் சீடராக அழைத்துக்கொண்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதலிடம் பெறுபவர் பேதுரு. மீன் பிடித்தல் தொழிலைச் செய்துவந்த பேதுருவை ஒருநாள் இயேசு கலிலேயக் கடலருகில் கண்டார். இயேசு அவரை நோக்கித் தம் சீடராகுமாறு கேட்டார். பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்தார். பேதுருவின் இயற்பெயர் சீமோன்; அவர்தம் தந்தை பெயர் யோனா. எனவே அவர் "யோனாவின் மகன் சீமோன்" என்று அழைக்கப்பட்டார். ஆனால் இயேசு அவருக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்தார். விவிலியத்தில் இவ்வாறு புதிய பெயர் கொடுக்கும்போது அப்பெயரைப் பெறும் மனிதர் ஒரு சிறப்புப் பணிக்கு அழைக்கப்படுவதை அப்பெயர் குறிப்பது வழக்கம். இயேசு சீமோனுக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்ததும் தனிப்பொருள் கொண்ட நிகழ்வுதான்.
பேதுரு என்னும் சொல் அரமேய மொழியில் "கேபா" என வரும். அதன் பொருள் "பாறை" ஆகும். பேதுரு என்பது அதன் கிரேக்க வடிவம். இலத்தீனில் "Petra" என்றால் பாறை. அதைத் தழுவியே சீமோனுக்கு "Petrus" (ஆங்கிலத்தில் Peter) என்னும் பெயர் வந்தது.
பேதுருவை இயேசு "பாறை" என்று அழைத்ததற்கான விளக்கத்தை மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது.
- மத்தேயு 16
- 13-19
| “ |
இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.
|
” |
பேதுருவின் குடும்பம் [தொகு]
பேதுருவின் குடும்பம் பற்றிய சில தகவல்கள் நற்செய்திகளில் உள்ளன. அவர் கப்பர்நாகும் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தார் என்றும், திருமணமானவர் என்றும் அவருடைய மாமியார் காய்ச்சலாய் இருந்தபோது இயேசு அவருடைய வீட்டுக்குச் சென்று அப்பெண்மணிக்கு நலமளித்தார் என்றும் நற்செய்திகள் குறிப்பிடுகின்றன.
- மாற்கு 1
- 29-31
| “ |
பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.
இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
|
” |
பேதுருவின் பெயர் பற்றிய குறிப்பு [தொகு]
பேதுருவின் இயற்பெயர் எபிரேயத்தில் சீமோன் என்பதாகும். அது கிரேக்கத்தில் Σιμων என்று எழுதப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இரு இடங்களில் அப்பெயர் "சிமியோன்" (Συμεων) என்னும் வடிவத்தில் வருகிறது (காண்க: திருத்தூதர் பணிகள் 15:14; 2 பேதுரு 1:1).
இயேசு பேதுருவுக்குக் கொடுத்த சிறப்புப் பெயர் "பாறை" அல்லது "கல்" என்னும் பொருள்கொண்ட அரமேயச் சொல்லாகிய "கேபா" (பண்டைக் கிரேக்கம்: Kephas) என்பதாகும். பேதுரு "கேபா" என்று ஒன்பது முறை புதிய ஏற்பாட்டு நூல்களில் அழைக்கப்படுகிறார். யோவான் நற்செய்தி ஒருமுறையும் தூய பவுல் எழுதிய திருமுகங்கள் எட்டு முறையும் பேதுருவை "கேபா" என்று அழைக்கின்றன.
"கேபா" என்னும் அரமேயச் சொல் கிரேக்கத்தில் Petros என்று பெயர்க்கப்பட்டது. அதிலிருந்து தமிழ் "பேதுரு" என்னும் வடிவம் பிறந்தது. பேதுரு என்னும் பெயர் நற்செய்தி நூல்களிலும் திருத்தூதர் பணிகள் நூலிலும் 150 தடவைக்கு மேலாக வருகிறது. "சீமோன் பேதுரு" என்னும் இரட்டைப் பெயர் பெரும்பாலும் யோவான் நற்செய்தியில் சுமார் 20 தடவை வருகிறது.
கிரேக்க மொழி பேசிய கிறித்தவர் நடுவே "பேதுரு" என்னும் சொல் (பாறை, கல்) எளிதில் பொருள் விளங்கும் பெயராக விளங்கியிருக்கும்.
பேதுரு முதல் திருத்தந்தை என்பது பற்றிய கருத்துகள் [தொகு]
கத்தோலிக்க திருச்சபை இயேசுவின் திருத்தூதராகிய பேதுரு முதல் "திருத்தந்தை" (Pope) என்று அறிக்கையிடுகிறது. அதற்கு, கீழ்வரும் காரணங்கள் காட்டப்படுகின்றன:
- இயேசு தம் நெருங்கிய சீடர்களாகத் தெரிந்துகொண்ட "திருத்தூதர்கள்" (Apostles) பன்னிருவரில் முதன்மை இடம் பேதுருவுக்கு அளிக்கப்பட்டது;
- இயேசு பேதுருவுக்கு அளித்த சிறப்புப் பணி;
- பன்னிரு திருத்தூதர் குழுவில் பேதுரு ஆற்றிய தனிப்பட்ட பணி.
பேதுரு வகிக்கும் சிறப்பிடத்தைக் கீழ்வருமாறு விளக்கலாம்.
- இயேசு தம்மைப் பின்செல்லும்படி முதல்முதலாக அழைத்தது பேதுருவைத்தான் (காண்க: மத்தேயு 4:18-19).
- இயேசு திருத்தூதர்களிடம் கேள்விகள் கேட்ட போதெல்லாம் அவர்கள் பெயரால் பதில் கூறுபவர் பேதுருவே (காண்க: மாற்கு 8:29; மத்தேயு 18:21; லூக்கா 12:41; யோவான் 6:67-69).
- லூக்கா மற்றும் பவுல் தரும் தகவல்படி, உயிர்த்தெழுந்த இயேசுவை முதன்முறையாகச் சந்தித்தவர் பேதுருவே (காண்க: லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:5). மத்தேயு, யோவான், மாற்கு நற்செய்திகளின்படி, மகதலா மரியா உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் காண்கிறார். ஆனால் அங்குகூட, "நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், 'உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்' எனச் சொல்லுங்கள்" என்று இயேசு கூறுகிறார் (மாற்கு 16:7).
- எல்லா நற்செய்தி நூல்களிலும் அதிக முறை பெயர்சொல்லிக் குறிப்பிடப்படும் திருத்தூதர் பேதுரு தான்.
- இயேசு பேதுருவிடம் தான் பிற திருத்தூதர்களை விட அதிக பொறுப்பு ஒப்படைக்கிறார்.
- பன்னிரு திருத்தூதர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தரப்படும் இடங்களில் எல்லாம் நற்செய்தி நூல்கள் பேதுருவைத் தான் முதன்முதலாகக் குறிப்பிடுகின்றன (காண்க: மாற்கு 3:16-19; மத்தேயு 10:1-4; லூக்கா 6:12-16
- பண்டைய இசுரயேல் நாட்டில் முதல் மகன், முதலில் வருபவர், பெயர்ப்பட்டியலில் முதலில் இருப்பவர் என்னும்போது அவருக்குச் சிறப்பிடம், தனிப் பணி உண்டு என்று பொருளாகும். பேதுரு எருசலேம் கிறித்தவ சபையில் மிக முக்கியமான ஒருவராக இருந்தார்என்பதைக் குறிக்க, தூய பவுல் பேதுருவை அச்சபையின் "தூண்" என்று அழைக்கின்றார் (காண்க: கலாத்தியர் 2:9). வேறு பல திருச்சபைச் சமூகங்களிலும் பேதுரு செல்வாக்கு பெற்றிருந்தார் (காண்க: திருத்தூதர் பணிகள் 1:15-26; 2:14-40; 3:1-26; 4:8; 5:1-11, 29; 8:18-25; 9:32-43; 10:5; 12:7; 1 பேதுரு 2:11; 5:13).
ஆதாரங்கள் [தொகு]
விக்கிமூலம்:இணைப்பு [தொகு]
பேதுரு - எழுத்துப் படையல்கள்
|
கத்தோலிக்க புனிதர்கள் அகர வரிசை (வழிபாட்டு ஆண்டு விழா முறைப்படி) |
|
அக்கிலேயு, நெரேயு · அக்குவினோ நகர் தோமா · அகஸ்டின் ஜாவோ ரோங்கு · அகுஸ்தீன் · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · அங்கேரி எலிசபெத்து · அங்கேரி ஸ்தேவான் · அசிசி நகர் பிரான்சிஸ் · அடால்பெர்ட் · அத்தனாசியு · அந்தியோக்கு நகர் இஞ்ஞாசி · அந்திரேயா · அந்தோணியார் (பதுவா நகர்) · அந்தோணி மரிய கிளாரெட் · அந்தோனி மரிய செக்கரியா · அப்போலினாரிஸ் · அம்புரோஸ் · அரசியான தூய கன்னி மரியா · அருளானந்தர் (ஜான் தெ பிரிட்டோ) · அல்போன்ஸ் மரிய லிகோரி · அல்போன்சா முட்டாத்துப்பாடாத் · அலக்கோக்கு மார்கரீத் மரியா · அலெக்சாந்திரியா நகர் கேத்தரின் · அலெக்சாந்திரியா நகர சிரில் · அலோசியுஸ் கொன்சாகா · அவிலா நகர் இயேசுவின் தெரேசா · அன்னா, சுவக்கீம் (தூய மரியாவின் பெற்றோர்) · அன்னை தெரேசா · ஆகத்தா · ஆக்னெஸ் · ஆஞ்சலா மெரிசி · ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · ஆண்டவரின் தோற்றமாற்றம் · அன்னை (கன்னி மரியாவின் பிறப்பு) · ஆல்பர்ட் (பெரிய) · ஆன்சலம் · ஆன்ஸ்காரியு · ஆன்ரூ கிம் தே கோன் · ஆன்ரு டுங் லாக் · இசிதோர் · இஞ்ஞாசி (லொயோலா) · இப்போலித்து; போன்சியானு · இயேசுவின் (அவிலா நகர்) தெரேசா · இயேசுவின் திருப்பெயர் · இரண்டாம் சிக்ஸ்து · இரபேல்; கபிரியேல்; மிக்கேல் ·இரனேயு · இரேய்முந்து பெனாப்போர்த்து · இலாரியார் · இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு · இறை யோவான் · இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் · ஈசாக்கு ஜோகு; ஜான் பிரபூபு · உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர் · எட்விஜ் · எபிரேம் · எமிலியன் எரோணிமுசு · எருசலேம் நகர் சிரில் · எரோணிமுசு · எரோணிமுசு எமிலியன் · எலிசபெத்து (அங்கேரி) · எலிசபெத்து (போர்த்துகல் · எலியாஸ் சவாரா குரியாக்கோஸ் · என்றி · ஏழாம் கிரகோரி · ஐந்தாம் பயஸ் · கசிமீர் · கபிரியேல், மிக்கேல், இரபேல் · கப்பெஸ்தரானோ நகர் யோவான் · கமில்லஸ் தெ லெல்லிஸ் · கயத்தான் · கலசான்ஸ் நகர் யோசேப்பு · கலிஸ்து (முதலாம்) · கனீசியு பீட்டர் · காசியா சபை ரீத்தா · கார்மேல் அன்னை · காவல் தூதர்கள் (தூய) · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · கான்டி நகர் யோவான் · கிம் தே கோன், ஆன்ரூ · கிரகோரியார்; நசியான்சன்; பெரிய பசிலியார் · கிரகோரி (பெரிய) · கிரகோரி (ஏழாம்) · கிளமெண்ட் (முதலாம்) · கிளாரா ·கிளாவர் பீட்டர் · யோவான் கிறிசோஸ்தோம் · கிறிசோலோகு பீட்டர் · கிறிஸ்டோபர் மெகாலன் · கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு · குரியாக்கோஸ் எலியாஸ் சவாரா · குழந்தை இயேசுவின் தெரேசா · கேத்தரின் (அலெக்சாந்திரியா நகர்) · கேத்தரின் (சியென்னா நகர்) · கொர்னேலியு; சிப்பிரியான் · மரியா கொரெற்றி · கொலும்பன் · கொன்சாகா அலோசியுஸ் · கொன்சாலோ கார்சியா · கோஸ்மாஸ்; தமியான் · சலேசியார் பிரான்சிஸ் · சவேரியார் பிரான்சிஸ் · சனுவாரியுசு · சாந்தால் நகர் ஜான் பிரான்சிஸ்கா · சார்லஸ் பொரோமியோ · சார்லஸ் லுவாங்கா · சார்பெல் மாக்லுப் · சானல் பியர் · சிக்மரிங்கன் நகர் பிதேலிஸ் · சிக்ஸ்து (இரண்டாம்) · சிப்பிரியான் · சியென்னா நகர் கேத்தரின் · சியன்னா நகர் பெர்னார்தீன் · சிராமெல் மரிய தெரேசா · அலெக்சாந்திரியா நகர சிரில் · சிரில் (எருசலேம் நகர்) · சிரில்; மெத்தோடியு · சில்வெஸ்தர் (முதலாம்) · சிலுவையின் பவுல் · சிலுவையின் யோவான் · சீமோன்; யூதா · சுவக்கீம்; அன்னா · செசிலியா · செபஸ்தியார் · செபமாலை அன்னை · சோங் காசாங் பவுல் · ஜஸ்டின் · ஜார்ஜ் · ஜாவோ ரோங்கு அகஸ்டின் · ஜான் தெ பிரிட்டோ · ஜான் பாப்டிஸ்ட் (லசால் நகர்) · ஜான் பிரபூபு; ஈசாக்கு ஜோகு · ஜான் பிரான்சிஸ்கா (சாந்தால் நகர்) · ஜான் பிசர்; தாமஸ் மூர் · ஜான் போஸ்கோ · ஜான் மரிய வியான்னி · ஜான் யூட்ஸ் · ஜூலியன் எய்மார்ட் பீட்டர் · ஜெர்த்ரூது · யோசப் வாசு · ஜோஸ்பீன் பக்கீத்தா · ஸ்காட்லாந்து மார்கரீத் · ஸ்கொலாஸ்திக்கா · ஸ்தேவான் · டுங் லாக் ஆன்ரூ · தமசுஸ் (முதலாம்) · தமசேன் யோவான் · தமியான்; கோஸ்மாஸ் · தமியான் பீட்டர் · தனிஸ்லாஸ் · தாமஸ் பெக்கட் · தாமஸ் மூர்; ஜான் பிசர் · திமொத்தேயு; தீத்து · திருச்சிலுவையின் தெரேசா பெனடிக்டா · திருச்சிலுவையின் மகிமை · திருமுழுக்கு யோவானின் பிறப்பு · திருமுழுக்கு யோவானின் பாடுகள் · தியோனிசியு · தீத்து; திமொத்தேயு · துரீபியு மாங்ரோவேகோ · தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் · தூய கன்னி மரியா அரசி · தூய கன்னி மரியா இறைவனின் தாய் · தூய கன்னி மரி ஊழியர் சபை நிறுவிய புனிதர் எழுவர் · தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் · தூய கன்னி மரியாவின் கணவர் யோசேப்பு · தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · தூய கன்னி மரி பிறப்பு (ஆரோக்கிய அன்னை) · தூய கன்னி மரியாவின் பெற்றோர் சுவக்கீம், அன்னா · தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு (பனிமய அன்னை) · தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு · தூய கார்மேல் அன்னை · தூய காவல் தூதர்கள் · தூய செபமாலை அன்னை · தூய பாத்திமா அன்னை · தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) · தூய லூர்து அன்னை · தூர் நகர் மார்ட்டின் · தெ பால் வின்சென்ட் · தெ பிரிட்டோ ஜான் (அருளானந்தர்) · தெ போரஸ் மார்ட்டின் · தெ லெல்லிஸ் கமில்லஸ் · தெரசா (அன்னை) · தெரேசா (இயேசுவின்) (அவிலா நகர்) · தெரேசா (குழந்தை இயேசுவின்) · தெரேசா பெனடிக்டா (திருச்சிலுவையின்) · தொழிலாளர் யோசேப்பு · தோமா · தோமா (அக்குவீனோ நகர்) · தோமினிக் · தோமினிக் சாவியோ · நசியான்சன் கிரகோரியார்; பெரிய பசிலியார் · நார்பெர்ட் · நிக்கோலாஸ் · நெரேயு; அக்கிலேயு · நேரி பிலிப்பு · நோலா பவுலீனு · பக்கீத்தா ஜோஸ்பீன் · பங்கிராஸ் · பசிலியார் (பெரிய); நசியான்சன் கிரகோரியார் · பத்தாம் பயஸ் · பதுவா நகர் அந்தோணியார் · பபியான் · பயஸ் (ஐந்தாம்) · பயஸ் (பத்தாம்) · பர்த்தலமேயு · பர்னபா · பவுல் (சிலுவையின்) · பவுல் சோங் காசாங் · பவுல்; பேதுரு · பவுல், பேதுரு பேராலயங்களின் நேர்ந்தளிப்பு · பவுல் மனமாற்றம் · பவுல் மீகி · பவுலீனு நோலா · பவோலா பிரான்சிஸ் · பனிமய அன்னை (தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு · பாசி நகர் மகதலா மரியா · பாத்திமா அன்னை (தூய) · பிசர் ஜான்; தாமஸ் மூர் · பிதேலிஸ் (சிக்மரிங்கன் நகர்) · பியர் சானல் · பிரான்சிஸ்கா (உரோமை நகர்) · பிரான்சிஸ் (அசிசி நகர்) · பிரான்சிஸ் சலேசியார் · பிரான்சிஸ் சவேரியார் · பிரான்சிஸ் பவோலா · பிரிசித்தா · பிரிந்திசி நகர் லாரன்ஸ் · பிலிப்பு நேரி · பிலிப்பு; யாக்கோபு · பிளாசியு · பீட்டர் கனீசியு · பீட்டர் கிறிசோலகு · பீட்டர் கிளாவர் · பீட்டர் ஜூலியன் எய்மார்ட் · பீட்டர் தமியான் · பீட்டர் மார்சலின் · பீடு (வணக்கத்துக்குரிய) · புரூனோ · புனிதர் அனைவர் · பெக்கட் தாமஸ் · பெர்நார்ட் · பெர்பெத்துவா; பெலிசித்தா · பெலிசித்தா; பெர்பெத்துவா · பெர்னார்தீன் (சியன்னா நகர்) · பெரர் வின்சென்ட் · பெரிய ஆல்பெர்ட் · பெரிய கிரகோரியார் · பெரிய லியோ · பெல்லார்மின் ராபர்ட் · பெனடிக்ட் · பெனடிக்டா தெரேசா (திருச்சிலுவையின்) · பெனாப்போர்த்து இரேய்முந்து · பேட்ரிக் · பேதுருவின் தலைமைப் பீடம் · பேதுரு; பவுல் · பொரோமியோ சார்லஸ் · பொலிக்கார்ப்பு · பொனவெந்தூர் · போஸ்கோ ஜான் · போன்சியானு; இப்போலித்து · போனிப்பாஸ் · மகதலா மரியா · மகதலா மரியா (பாசி நகர்) · மத்தியா · மத்தேயு · மரிய கிளாரெட் அந்தோணி · மரியா கொரெற்றி · மரிய கோல்பே மாக்சிமிலியன் · மரிய செக்கரியா · மரிய தெரேசா சிராமெல் · மரிய லிகோரி அல்போன்ஸ் · மரிய வியான்னி ஜான் · மரியா மகதலா · மரியா மகதலா (பாசி நகர்) · மரியாவின் திருப்பெயர் · மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · மாக்சிமிலியன் மரிய கோல்பே · மாக்லுப் சார்பெல் · மாங்ரோவேகோ துரீபியு · மாசில்லாக் குழந்தைகள் · மார்கரீத் மரியா அலக்கோக்கு · மார்சலின் பீட்டர் · மார்ட்டின் தெ போரஸ் · மார்ட்டின் (தூர் நகர்) · மார்ட்டின் (முதலாம்) · மார்த்தா · மாற்கு · மான்போர்ட் நகர் லூயி மரிய கிரிஞ்ஞோ · மிக்கேல், கபிரியேல், ரபேல் (அதிதூதர்கள்) · மீகி பவுல் · முட்டாத்துபாடாத் அல்போன்சா · முதலாம் கலிஸ்து · முதலாம் சில்வெஸ்தர் · முதலாம் கிளமெண்ட் · முதலாம் தமசுஸ் · முதல் மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · முதலாம் மார்ட்டின் · மெகாலன் கிறிஸ்டோபர் · மெத்தோடியு; சிரில் · மெரிசி ஆஞ்சலா · மோனிக்கா · யாக்கோபு · யாக்கோபு; பிலிப்பு · யுசேபியு (வெர்செல்லி நகர் · யூட்ஸ் ஜான் · யூதா; சீமோன் · யோசபாத்து · யோசேப்பு (கலசான்ஸ் நகர்) · யோசேப்பு (தூய கன்னி மரியாவின் கணவர்) · யோசேப்பு (தொழிலாளர்) · யோவான் · யோவான் (இறை) · யோவான் (கப்பெஸ்த்தரானோ நகர்) · யோவான் (கான்டி நகர்) · யோவான் கிறிசோஸ்தோம் · யோவான் (சிலுவையின்) · யோவான் தமசேன் · யோவான் (முதலாம்) · யோவான் லெயோனார்ட் · யோவானின் (திருமுழுக்கு) பிறப்பு · யோவானின் (திருமுழுக்கு) பாடுகள் · ரபேல், மிக்கேல், கபிரியேல் (அதிதூதர்கள்) · ராபர்ட் பெல்லார்மின் · ரீத்தா (காசியா சபை) · ருய்ஸ் லாரன்ஸ் · ரோசா (லீமா நகர்) · ரோமுவால்து · லசால் நகர் ஜான் பாப்டிஸ்ட் · லாரன்ஸ் · லாரன்ஸ் (பிரிந்திசி நகர்) · லாரன்ஸ் ருய்ஸ் · லீமா நகர் ரோசா · லுஸ்தானியா நகர் எலிசபெத்து · லுவாங்கா சார்லஸ் · லூக்கா · லூசியா · லூயி · லூயி மரிய கிரிஞ்ஞோ (மான்போர்ட் நகர் · லூர்து அன்னை (தூய) · லெயோ (பெரிய) · லெயோனார்ட் யோவான் · லொயோலா இஞ்ஞாசி · புனித வனத்து அந்தோனியார் · வணக்கத்துக்குரிய பீடு · யோசப் வாசு · வியாகுல அன்னை (தூய மரியாவின் துயரங்கள் · வியான்னி மரிய ஜான் · வின்சென்ட் · வின்சென்ட் தெ பால் · வின்சென்ட் பெரர் · வெர்செல்லி நகர் யுசேபியு · வென்செஸ்லாஸ் ·
|
|