நூர்சியாவின் பெனடிக்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நூர்சியா நகரின் புனித பெனடிக்ட்

புனித பெனடிக்ட்
ஓவியர்: ஃபிரா ஆன்ஜெலிக்கோ
துறவி, ஆதீனத் தலைவர்
பிறப்பு சுமார் 480
நூர்சியா, இத்தாலி
இறப்பு 543 (அகவை 63)
மோன்தே கசினோ
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்க திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
புனிதர் பட்டம் மூன்றாம் ஹோனோரியஸ்-ஆல் 1220, உரோமை நகரம்
முக்கிய திருத்தலங்கள் இவரின் கல்லரையின் அமைவிடமான மோன்தே கசினோவில் உள்ள ஆலயம்
திருவிழா ஜூலை 11
சித்தரிக்கப்படும் வகை -மணி
-உடைந்த தட்டு
-உடைந்த கோப்பை மற்றும் நஞ்சினைக்குறிக்க பாம்பு
-உடைந்த பாத்திரம்
-தூரிகை
பாதுகாவல் -நஞ்சினால் பாதிக்கப்பட்டோர்
-பில்லி சூனியத்திலிருந்து தப்ப
-உழவர்
-பொற் கொல்லர்
-மரண படுக்கையில் இருப்போர் -ஐரோப்பா
-காய்ச்சல்
-துறவற சபையினர்
-பிள்ளை
-தன் தலைவரின் உடமைகளை உடைத்த வேலைக்காரர்கள்
-பாவ சோதனை


நூர்சியாவின் புனித பெனடிக்ட் (இத்தாலியம்: San Benedetto da Norcia) (சுமார்.480–543) ஒரு கிறித்தவப் புனிதரும், கத்தோலிக்க திருச்சபையினால் ஐரோப்பா மற்றும் மாணவர்களுக்கு பாதுகாவலராகக் கருதப்படுபவர் ஆவார்.

இத்தாலியில், உரோமைக்கு 40 மைல்s (64 கிமீ) கிழக்கே உள்ள சிபாய்கோ என்னும் இடத்தில் இவர் 12 மடங்களைத் தோற்றுவித்தார். இதன்பின் இவர் தெற்கு இத்தாலியில் ஊள்ள மோன்தே கசினோவில் உள்ள மலைப்பகுதியில் தன் வாழ்வின் மீதியைக் கழித்தார்.

பெனடிக்டின் முக்கிய சாதனையாகக் கருதப்படுவது, இவர் தனது துறவிகளுக்கான கட்டளைகளைக் கொண்ட சட்ட நூல் ஒன்றைத் தொகுத்ததாகும். இதில் ஜான் சாசியானின் எழுத்துகளின் தாக்கம் பெரிதும் உள்ளது. இது நவீனத்துவம் மற்றும் நேரியத் தனித்துவம் பெற்றிருப்பதனால் இதனால் இடைக்காலத்தில் நிறுவப்பட்ட மடங்கள் அனைத்தும் இச்சட்டங்களையே ஏற்று பின்பற்றின. இந்த காரணத்தால், பெனடிக்ட் மேற்கு கிறித்தவ துறவறமடங்களின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார்.

பொருளடக்கம்

இறப்பு [தொகு]

இவர் மோன்தே கசினோவில் நின்றுகொண்டு இறைவேண்டல் புரியும் போது இறந்தார். பாரம்பரியக் கூற்றின் படி இது நிகழ்ந்தது மார்ச் 21, 547.

1964இல் இவரை ஐரோப்பாவின் பாதுகாவலராக திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார்.[1]

இவரின் நினைவுநாளான மார்ச் 21, பெரும்பாலும் தவக்காலத்தில் வருவதால், இவரின் விழா நாள், இவரின் மீப்பொருட்கள் பிரான்சுக்கு கொன்டுவரப்பட்ட நாளான ஜூலை 11இல் கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் விருப்ப நினைவாக இடம் பெருகின்றது.

கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் மார்ச் 14 ஆகும்.[2] ஆங்கிலிக்க ஒன்றியம் இவரை ஜூலை 11இல் நினைவு கூர்கின்றது.

பெனடிக்டின் சட்டங்கள் [தொகு]

இவை இவரால் இயற்றப்பட்ட எழுபத்தி மூன்று குறுகிய அதிகாரங்களை உடைய சட்ட தொகுப்பு ஆகும். இச்சட்டங்கள் ஒரு மடத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் மற்றும் ஒரு மடத்தில் எவ்வாறு வாழ்வது என்பது குறித்து விளக்குகின்றது. மடத்தின் தலைவருக்கு எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் எனவும், அவ்வாறு கீழ்படியாதோருக்கான தண்டனை மற்றும் மடத்தின் தலைவருக்கான கடமைகள் முதலியன இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் காண்க [தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:

ஆதாரங்கள் [தொகு]

  1. "St. Benedict of Nursia". Catholic Online. பார்த்த நாள் 2008-07-31.
  2. Orthodox Church in America: The Lives of the Saints, March 14th

 This article incorporates text from a publication now in the public domain:  "St. Benedict of Nursia". Catholic Encyclopedia. (1913). ரொபெர்ட் அப்பில்டன் கம்பனி. 

புனித பெனடிக்ட் குறித்தான படக்காட்சியகம் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]