பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெரூசலம் நகரின் வாயிலருகே இருக்கும் பிள்ளைகள்
நமீபியாவில் பிள்ளைகள்

பிள்ளை என்பது பொதுவாக, மனிதரில் பிறப்புக்கும், பருவம் அடைவதற்கும் இடைப்பட்ட இளம் வயதினரைக் குறிக்கும். இது ஆண், பெண் ஆகிய இரு பாலாருக்கும் பொதுவான பெயர் ஆகும். தமிழில் இச் சொல் தென்னை, கமுகு போன்ற இளம் தாவரங்களையும், கீரி போன்ற விலங்குகளின் குட்டிகள் போன்றவற்றையும் கூடக் குறிப்பிடப் பயன்படுவதுண்டு. இது தவிர பிள்ளை என்பது தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காணப்படும் ஒரு சாதிப் பெயராகவும் உள்ளது. இக்கட்டுரை இள வயது மனிதர் தொடர்பாகவே எழுதப்படுகிறது. சட்டப்படி, வெவ்வேறு நாட்டுச் சட்டங்களில் பராயம் அடைந்தவர்களாகக் கொள்ளப்படும் வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் பிள்ளைகள் எனக் கணிக்கப்படுவார்கள். இச் சொல் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் பெற்றோருடனான உறவுத் தொடர்பைக் குறிக்கவும் பயன்படுகின்றது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்