விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விளையாட்டு (Game) என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும். விளையாட்டு சில சமயங்களில் வேலை, என்பதுடன் தொடர்புடையது போல் காணப்படுகிறது. ஆனால், வேலை ஊதியத்துக்காகச் செய்யப்படுவது. விளையாட்டு ஒரு கலை என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால் கலையைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு இருப்பதில்லை. இருந்தாலும், எப்போதும் இவற்றுக்கு இடையேயான எல்லைகள் தெளிவாக இருப்பதில்லை. தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வருமானத்துக்கான ஒரு தொழிலாகவே உள்ளது.

"ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு பாப்பா" என்பது பாரதியின் கூற்று. விளையாட்டு அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும் செயற்பாடுகளில் ஒன்று.

பொருளடக்கம்

விளையாட்டு வகைகள் [தொகு]

விளையாட்டுக்கள் உடற்றிறன் விளையாட்டுக்கள், பலகை விளையாட்டுக்கள், நிகழ்பட விளையாட்டுக்கள் எனப் பல வகைகளாக உள்ளன.

உடற்திறன் விளையாட்டுக்கள் [தொகு]

மனிதன் தனது உடல் திறன்களை திடமாக்கிகொள்ளும் பரிசோதித்துக்கொள்ளும் களங்களில் விளையாட்டு முக்கியமானது. அனேக விளையாட்டுக்கள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை பயிற்சிக்கு உட்படுத்துகின்றன. உடலைச் முதன்மையாக ஈடுபடுத்தினாலும் விளையாட்டில் சிறப்பாக ஆட உள ஒழுக்கமும் ஒருமுனைப்படுத்தலும் இன்றியமையாதது.

விளையாட்டுகள் [தொகு]

முதன்மைக் கட்டுரை: விளையாட்டுகளின் பட்டியல்

இவற்றையும் பார்க்க [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

விளையாட்டு (Sports) தினமலர்

"http://ta.wikipedia.org/w/index.php?title=விளையாட்டு&oldid=1175447" இருந்து மீள்விக்கப்பட்டது