தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமைவிடம்: தமிழ்நாடு அரசால் 2005 ஆண்டு உடல்கல்வியியல் மற்றும் விளையாட்டுக்கள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம். இந்தியாவிலேயே இதுவே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும்.
[தொகு] வழங்கும் படிப்புகள்
இப்பல்கலைக்கழகம் கீழ்காணும் நான்கு பிரிவுகளின் கீழான இளம்நிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஆய்வியல் நிறைஞர், முனைவர், மதிப்புறு முனைவர் போன்ற ஆய்வியல் பட்டப்படிப்புகளையும் வழங்குகிறது.
- ஆசிரியர் கல்வி
- விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
- உடல்நலம் மற்றும் உடல்நல அறிவியல்
- மேலாண்மை
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.tnpesu.org - (ஆங்கிலத்தில்)