அண்ணா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அண்ணா பல்கலைக்கழகம்
Anna University Logo.jpg
குறிக்கோள் வாசகம் Progress Through Knowledge (அறிவின் மூலம் முன்னேற்றம்)
தொடக்கம் 1978
பள்ளி வகை இணைவு பல்கலைக்கழகம்
துணை-வேந்தர் முனைவர் இராஜாராம் .
அமைவிடம் சென்னை, தமிழ் நாடு, இந்தியா
வளாகம் 100 ஏக்கர்கள் (400,000 m²)
இணைய முகவரி http://www.annauniv.edu/

அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

வரலாறு[தொகு]

உருவாக்கம்[தொகு]

  • பின்னர் 1982 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது

மறுசீரமைப்பு[தொகு]

  • 2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
  • 2007-ம் ஆண்டு: நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் கீழ்கண்டவாறு 6 பல்கலைகழகங்களாகச் செயல்பட்டு வந்தது:
  • 2007-ம் ஆண்டு: அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[2][3]
  • 2012-ம் ஆண்டு: ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைகழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.

வளாகம்[தொகு]

அறிவியல் மையம்

பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம், தென்சென்னை பகுதியில் 100 ஏக்கர் (400,000 சதுர.மீ) பரப்பில் அமைந்துள்ளது. அடையாறும் தமிழக ஆளுனர் மாளிகையான ராஜ்பவனும் இவ்வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளன. முதன்மை வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி அமைந்துள்ளன. மெட்ராசு தொழில்நுட்ப கழகம் 200,000 சதுர.மீட்டர் பரப்பளவில் குரோம்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ளது. அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியின் சில ஆய்வுக்கூடங்கள் தரமணி வளாகத்தில் அமைந்துள்ளன. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள அறிவியல் மையம் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் வளாகங்களும்[தொகு]

அண்ணா பல்கலைக்கழக - கிண்டி, சென்னை வளாகம்

கீழ்க்காணும் பட்டியலில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் இருவகைப்படும் அவை:

  • அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் வளாகங்களும்
  • அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளும் வளாகங்களும்

புரிதலுக்காக இப்பட்டியல் பன் கிளையாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - தரமணி, சென்னை மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - மதுரை மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் மண்டலம்


அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 கிண்டி பொறியியல் கல்லூரி கிண்டி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.annauniv.edu அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி கிண்டி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.annauniv.edu/act/ அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
3 மெட்ராசு தொழில்நுட்ப கழகம் குரோம்பேட்டை சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.annauniv.edu/sap/ அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
4 கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி கிண்டி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1981 http://www.mitindia.edu அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்

அண்ணா பல்கலைகழகம் - தரமணி சென்னை மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - தரமணி வளாகம் - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை தரமணி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைகழகம் 1952 http://www.annauniv.edu அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - விழுப்புரம் வளாகம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.annauniv.edu/ அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - திண்டிவனம் வளாகம் திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.annauniv.edu அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
4 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - ஆரணி வளாகம் ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1981 http://www.annauniv.edu [அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
5 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - காஞ்சிபுரம் வளாகம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1942 http://www.annauniv.edu அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்


அண்ணா பல்கலைகழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி வளாகம் - அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.tau.edu.in/ அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் பண்ருட்டி வளாகம் பண்ருட்டி கடலூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.tau.edu.in/ அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் பட்டுக்கோட்டை வளாகம் ராஜாமடம், பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.tau.edu.in/ அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
4 அண்ணா பல்கலைக்கழகம் திருக்குவளை வளாகம் திருக்குவளை நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1981 http://www.tau.edu.in/ அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
5 அண்ணா பல்கலைக்கழகம் அரியலூர் வளாகம் அரியலூர் அரியலூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1942 http://www.tau.edu.in/ அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்


அண்ணா பல்கலைகழகம் - மதுரை மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை மதுரை மதுரை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://autmdu.ac.in அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் இராமநாதபுரம் வளாகம் இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://autmdu.ac.in அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் திண்டுக்கல் வளாகம் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://autmdu.ac.in அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்


அண்ணா பல்கலைகழகம் - திருநெல்வேலி மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் திருநெல்வேலி திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.auttvl.ac.in/ அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் நாகர்கோவில் வளாகம் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.auttvl.ac.in/ அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் வ. உ. சிதம்பரனார் கல்வி வளாகம் தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.auttvl.ac.in/ அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்


அண்ணா பல்கலைகழகம் - கோயம்புத்தூர் மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.annauniv.edu/ அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்

இணைந்துள்ள கல்லூரிகள்[தொகு]

அண்ணா பல்கலைக்கழகச் சீரமைப்பு விதி (The Anna University Amendment Act) 2001-இன் படி, ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டன. இவற்றுள் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகளும் மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் 225 தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

பிற தகவல்கள்[தொகு]

  • இப்பல்கலைக்கழகம், 1978 முதல் 1982 வரை, "பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்" என்று அழைக்கப்பட்டது. அதன் பின் தற்போதைய பெயருக்கு மாறியது.
  • அண்மையில், தேசிய அங்கீகாரக் குழு (National Accreditation Committee) அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 5 நட்சத்திர அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. அண்ணா பல்கலைக்கழகம் கோவை, பார்த்த நாள், 10, ஏப்ரல், 2012.
  2. அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன, பார்த்த நாள், 10, ஏப்ரல், 2012.
  3. த இந்து நாளிதழில், பார்த்த நாள், 10, ஏப்ரல், 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_பல்கலைக்கழகம்&oldid=1683456" இருந்து மீள்விக்கப்பட்டது