அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி
| அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி | |
|---|---|
![]() |
|
|
|
|
| குறிக்கோள்: | கல்வி மூலம் சேவை Service Through Education |
| நிறுவல்: | 2007 |
| வகை: | பொது |
| வேந்தர்: | ரோசைய்யா |
| துணைவேந்தர்: | எம். இராசாராம் |
| அமைவிடம்: | திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா |
| வளாகம்: | பாளையம்கோட்டை, திருநெல்வேலி |
| விளையாட்டில் சுருக்கப் பெயர்: |
AU TVL |
| இணையத்தளம்: | அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி |
அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி (Anna University Tirunelveli) தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரில் நிறுவப் பட்டுள்ள ஓர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாகும். இது 1 பெப்ரவரி 2007 அன்று அண்ணா பல்கலைக்கழகம் ஆறு பல்கலைக்கழகங்களாகப் பிரிக்கப்பட்டபோது அவற்றில் ஒன்றாக உருவானது. மற்ற ஐந்து பல்கலைக்கழகங்கள்: அண்ணா பல்கலைக்கழகம் , அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சி, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், மதுரை.[1] இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல்கலைக்கழகமாக (affiliating type of university) செயல்பட்டு வருகிறது. விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 65 பொறியியல் கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] வளாகங்கள்
பல்கலைக்கழகம் திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து இயங்குகிறது. இக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலை 7இல் பாளையம்கோட்டையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் அருகாமையில் நிரந்த கட்டமைப்பு ரூ.7.44 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 25 ஏக்கர் நிலத்தில் வ.உ.சிதம்பரனார் பொறியியல் கல்லூரியும் நாகர்கோவிலில் 25 ஏக்கர் நிலத்தில் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் கட்டப்பட்டுள்ளன.
[தொகு] ஆசிரியர் குழு
| பதவி | பொறுப்பு |
|---|---|
| துணைவேந்தர் | எம். இராசாராம் |
| பதிவாளர் | என். செண்பக விநாயக மூர்த்தி |
| புல முதல்வர் | எசு.நடராசன் |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Welcome to Anna University of Technology, Coimbatore". annauniv.ac.in. பார்த்த நாள் 18 November 2010.
