அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்ணா பல்கலைக்கழகம், மதுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம் மதுரை
வகைபொது
உருவாக்கம்2010
துணை வேந்தர்முனைவர். ஆர். முருகேசன்
துறைத்தலைவர்டாக்டர்.வி.மாலதி (2018 முதல்)
அமைவிடம், ,
625019
,
9°54′09″N 78°02′18″E / 9.9024464°N 78.038267°E / 9.9024464; 78.038267
வளாகம்மதுரை
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.autmdu.ac.in

அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், மதுரை (Anna University Regional Campus , Madurai) தமிழகத்தின், மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகரில் 2010 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றின் மூலம் நிறுவப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆறு கிளைகளில் ஒன்றாக விளங்குகிறது. தென்தமிழ்நாட்டில் உயர்கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 36 கல்வி நிறுவனங்களின் 15000 மாணவர்கள் படிக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாகம் மதுரை (கீழக்குயில்குடி), ராமநாதபுரம் (புல்லாங்குடி) மற்றும் திண்டுகல்(ரெட்டியார் சத்திரம், மாங்கரைப் பிரிவு)லில் இயங்குகிறது. தவிர, மதுரை, காரைக்குடி நகரங்களில் தன்னாட்சி பெற்ற அரசினர் கல்லூரிகளும் காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் ஆய்வு மையமும் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளன. தற்போது 17 பட்டப்படிப்பு பாடதிட்டங்களையும் 21 பட்டமேற்படிப்பு பாடத்திட்டங்களையும் நடத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர். ஆர். முருகேசன் பொறுப்பாற்றி வருகிறார்.[1][2][3]

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை.
  • சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, அச்சுதன் வயல், இராமநாதபுரம்.
  • கணபதி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மேலக்காவனூர், பரமக்குடி.

மதுரை மாவட்டத்திலுள்ள பொறியியல் & மேலாண்மைக் கல்லூரிகள்[தொகு]

அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • லதா மாதவன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அழகர்கோயில், மதுரை.
  • பி. டி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
  • ராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
  • எஸ். ஏ. சி. எஸ். - எம். ஏ.வி.எம்.எம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அழகர் கோயில், மதுரை.
  • வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
  • பாத்திமா மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
  • அல்ட்ரா பெண்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை.
  • தயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, செங்கப்படை, மதுரை.

சுயநிதி மேலாண்மைக் கல்லூரிகள்[தொகு]

  • மைக்கேல் மேலாண்மைப் பயிற்சி நிறுவனம், மதுரை.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • பி. எஸ். என். ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
  • ஆர். வி. எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
  • ஆர். வி. எஸ். சிற்பக் கலையியல் கல்லூரி, திண்டுக்கல்.
  • ஆர். வி. எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி, திண்டுக்கல்.
  • ஆர். வி. எஸ். கணினிப் பயன்பாட்டுக் கல்லூரி, திண்டுக்கல்.
  • கொடைக்கானல் தொழில்நுட்பக் கல்லூரி, கொடைக்கானல்.
  • கிறிஸ்டியன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.
  • ஸ்ரீ சுப்ரமணியா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பழனி.
  • என். பி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, நத்தம்.
  • எஸ். பி. எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தாமரைப்பாடி, திண்டுக்கல்.

சுயநிதி மேலாண்மைக் கல்லூரிகள்[தொகு]

  • ஆர்.வி.எஸ்.மேலாண்மைக் கல்லூரி, திண்டுக்கல்.
  • விஜய் மேலாண்மைப் பயிற்சி நிறுவனம், திண்டுக்கல்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

அரசு பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி.
  • மத்திய மின்வேதியியல் ஆய்வு நிறுவனம், காரைக்குடி.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காளையார் கோயில்.
  • மதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பொட்டப்பாளையம், மானாமதுரை .
  • பாண்டியன் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருமாஞ்சோலை.
  • பண்ணை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மானாமதுரை.
  • கே. எல். என். பொறியியல் கல்லூரி, பொட்டப்பாளையம்.
  • கே. எல். என். தகவல் தொழில்நுட்பக் கல்லூரி, பொட்டப்பாளையம்.
  • விக்ரம் பொறியியல் கல்லூரி,
  • ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அமராவதி புதூர், காரைக்குடி.

தேனி மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள்[தொகு]

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்[தொகு]

  • பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, திம்மரசநாயக்கனூர், ஆண்டிபட்டி.
  • உடையப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வடவீரநாயக்கன்பட்டி, பெரியகுளம்.
  • தேனி கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி.
  • நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வடவீரநாயக்கன்பட்டி, பெரியகுளம்.

வெளியிணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Anna University of Technology, Coimbatore". autmdu. பார்க்கப்பட்ட நாள் 13 June 2011.
  2. "Madurai Region". www.annauniv.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-01-11.
  3. "Anna University of Technology Madurai". autmdu.ac.in. Archived from the original on 18 July 2011. பார்க்கப்பட்ட நாள் 7 May 2012.