அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.
பொருளடக்கம் |
துவக்க நிலை[தொகு]
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அரசுக்கு அளித்த கல்லூரிகள், சொத்துகள், ரூ.20 லட்சம் ஆகியவற்றைக் கொண்டு 1928-ல் தனிச் சட்டம் மூலம் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
இந்த தனிச் சட்டத்தின்படி ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் வாரிசுகளுக்கு நிறுவனர் என்ற அங்கீகாரத்துடன் சில அதிகாரங்கள், சலுகைகள் வழங்கப்பட்டன.[1]
இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள உள்ளன, தமிழகப் பலகலைக் கழகங்களில் இங்கு தான் முதன் முதல் (30 சனவரி 2010) தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற்றது.
நிதி நெருக்கடி[தொகு]
பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் இதன் இருந்ததால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.[2]
நிர்வாக சீரமைப்பு[தொகு]
தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மாற்றுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு 1928-ல் கொண்டுவரப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டம் முடிவுக்கு வருகிறது.[3][4][5][6]
இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற முக்கியப் பிரமுகர்கள்[தொகு]
- ரா. வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர்
- க.அன்பழகன் * இரா. நெடுஞ்செழியன் * எஸ்.டி.சோமசுந்தரம்* பண்ருட்டி இராமச்சந்திரன் *பழ.நெடுமாறன் * இயக்குநர் கே.பாலசந்தர்[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=691148 இணை வேந்தரின் அதிகாரங்கள் தினமலர்
- ↑ http://dinamani.com/latest_news/article1335742.ece அண்ணாமலை பல்கலை.யை அரசுடைமை ஆக்க வேண்டும் தினமணி
- ↑ அண்ணாமலைப் பல்கலை.யை அரசே ஏற்கிறது: மசோதா தாக்கல் தினமணி
- ↑ மலை'யளவு பிரச்னை தினமணி தலையங்கம்
- ↑ Government introduces bill to take over Annamalai University Express News
- ↑ Annamalai University Bill introduced, varsity to lose special status Business Line
- ↑ http://dinamani.com/latest_news/2013/04/17/தேவையற்ற-பணி-நியமனங்கள்-நித/article1548826.ece தினமணி