பண்ருட்டி இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பன்ருட்டி ச. இராமச்சந்திரன்
அரசியல் கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்

பிறப்பு திசம்பர் 21, 1937 (1937-12-21) (அகவை 75)
புலியூர் , பண்ருட்டி
இருப்பிடம் சென்னை

பன்ருட்டி ச. இராமச்சந்திரன் ( Panruti S. Ramachandran)கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் 1937ல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார்.

ஐந்து முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும், மு. கருணாநிதி , எம்.ஜி.ஆர் அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவர் 2011ல் ஆலந்தூர் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்வருகிறார்.

ஆரம்பத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியிலும் பணியாற்றிய இவர் மக்கள் நல உரிமை கழகம் என்ற தனி அமைப்பை நடத்தினார். தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் அவைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.