ரா. வெங்கட்ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராமசுவாமி வெங்கட்ராமன்


பதவியில்
ஜூலை 25, 1987 – ஜூலை 25 1992
உதவி தலைவர் சங்கர் தயாள் சர்மா
முன்னவர் ஜெயில் சிங்
பின்வந்தவர் சங்கர் தயாள் சர்மா

பிறப்பு திசம்பர் 4, 1910(1910-12-04)
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு ஜனவரி 27, 2009 (அகவை 98)
புது டில்லி, இந்தியா

இரா. வெங்கட்ராமன் (டிசம்பர் 2, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.

இவர் 1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பை பட்டுக்கோட்டையில் முடித்த பின் உயர் கல்விக்காக சென்னை சென்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்படிப்பும் பின் சென்னை சட்ட கல்லூரியில் சட்ட படிப்பும் படித்தார். 1935-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும் 1951-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைநராக பதிவு செய்து கொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரா._வெங்கட்ராமன்&oldid=1722397" இருந்து மீள்விக்கப்பட்டது