ராஜீவ் காந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ராஜீவ் காந்தி | |
![]() |
|
|
9வது இந்தியப் பிரதமர்
|
|
|---|---|
| பதவியில் அக்டோபர் 31, 1984 – டிசம்பர் 2, 1989 |
|
| முன்னிருந்தவர் | இந்திரா காந்தி |
| பின்வந்தவர் | வி. பி. சிங் |
|
|
|
| பிறப்பு | ஆகஸ்ட் 20, 1944 மும்பாய் |
| இறப்பு | மே 21, 1991 ஸ்ரீபெரும்புதூர் |
| அரசியல் கட்சி | காங்கிரஸ் (I) |
| வாழ்க்கைத்துணை | சோனியா காந்தி |
| சமயம் | இந்து சமயம் |
ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியாரான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[மேற்கோள் தேவை]


