இந்தியாவின் உள்துறை அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உள்துறை அமைச்சர் -இந்தியாவின் உள்துறை அமைச்சர்,(உளவிவகார அமைச்சர்) இந்தியாவின் ஆய அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் பொறுப்பாகும். இந்திய உள்துறை அமைச்சக்தின் பொறுப்பில் இவ்வமைச்ர்கள் பணிபுரிவர். பிரதமருக்கு அடுத்த நிலையில் அதிக முக்கியத்துவம் ம்ற்றும் பொறுப்புகள் வாய்ந்த அமைச்சர் பொறுப்பாகும். மாநில அளவிலும் இவ்வமைச்சகங்கள் பொறுப்பு வாயந்தனவாக கருதப்படுகின்றன. உள்நாட்டு பதுகாப்புக்கு இவ்வமைச்சகங்களே பொறுப்பு ஏற்கின்றன. உள்துறை அமைச்சரின் முக்கிய பொறுப்புகளாவன;

  • மாநில ம்ற்றும் மைய அரசின் உள்நிர்வாகம் சார்ந்த விவகாரங்களை கவனித்தல்.
  • அனைத்து உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை கவனித்தல்.
  • நாட்டின் அனைத்து சட்ட ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்தல்.
  • அனைத்து குடியுரிமை ம்ற்றும் இயற்கை பண்புகளை கொண்ட மக்களதொகை கணக்கெடுத்தல், தேசிய கீதம், தேசியக் கொடி, மொழிகள் இவைகளை காத்தல்.
  • அரசியலமைப்பின் படி இதன் அடிப்படை செயல்பாடுகளான குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மற்றும் ஏனைய அமைச்சர்களின் சுற்ற்றிக்கைகள், நியமனங்கள், பொறுப்பு விலகல்கள் அல்லது விலக்கல்கள், ஆளுநர் ம்ற்றும் துணை ஆளுநர்களின் நியமனம் மற்றும் விலக்கல்கள் போன்ற செயல்பாடுகள் இத்துறை அமைச்சரால் அல்லது அமைச்சகத்தால் கவனிக்கப்படுகின்றன.


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்