இராசகோபாலாச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி

1948ஆம் ஆண்டு பொது நிகழ்ச்சியொன்றில்

முதலமைச்சர்,மதராச மாநிலம்
பதவியில்
10 ஏப்ரல் 1952 – 13 ஏப்ரல் 1954
ஆளுநர் ஸ்ரீ பிரகாசா
முன்னவர் பி. எசு. குமாரசாமி ராசா
பின்வந்தவர் கு. காமராசர்

இந்திய உள்துறை அமைச்சர்
பதவியில்
26 சனவரி 1950 – 1951
பிரதமர் சவகர்லால் நேரு
முன்னவர் சர்தார் வல்லபாய் படேல்
பின்வந்தவர் கைலாசு நாத் கட்சு

இந்திய கவர்னர் செனரல்
பதவியில்
21 சூன் 1948 – 25 சனவரி 1950
பிரதமர் சவகர்லால் நேரு
Monarch சார்சு VI மன்னர்
முன்னவர் லூயி மவுண்ட்பேட்டன்
பின்வந்தவர் பதவி நீக்கப்பட்டது

மேற்கு வங்க ஆளுனர்
பதவியில்
15 ஆகஸ்ட் 1947 – சூன் 1948
முன்னவர் பிரெடிரிக் பர்ரோசு
பின்வந்தவர் கைலாசு நாத் கட்சு

முதலமைச்சர்,மதராச மாகாணம்
பதவியில்
14 சூலை 1937 – 9 அக்டோபர் 1939
ஆளுநர் ஜான் எர்சுகின்
முன்னவர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
பின்வந்தவர் ஆளுனர் ஆட்சி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு,
சுதந்திராக் கட்சி

பிறப்பு 10 திசம்பர் 1878
சேலம் மாவட்டம், மதராச மாகாணம்
இறப்பு 25 திசம்பர் 1972 (அகவை 94)
சென்னை
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத்
துணை
அலமேலு மங்கம்மா
பழைய மாணவர் சென்ட்ரல் கல்லூரி, பெங்களூரு
மாநிலக் கல்லூரி, சென்னை
தொழில் வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி
துறை வழக்கறிஞர்
சமயம் இந்து
காந்தியுடன் இராஜாஜி

சி. இராசகோபாலாச்சாரி (10 திசம்பர் 1878 - 25 திசம்பர் 1972),தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். சுருக்கமாக இராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர். 1952 -54 காலகட்டத்தில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் செனரலாக பொறுப்பாற்றினார்.

பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் துவங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்.

இராசாசியின் கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது. 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார்.பின்னர் அரசியலில் ஈடுபட்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகரதந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார்.1937ஆம் ஆண்டு மதராச மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.பிரித்தானியா செர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.போர்க்காலத்தில் பிரித்தானியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.பின்னாளில் முகமது அலி சின்னாவுடனும் அகில இந்திய முசுலிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில்,வழங்கல்,கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராக பணியாற்றினார்.

பொருளடக்கம்

வகித்த பதவிகள் [தொகு]

1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.நாடாளுமன்றத்திலும் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.

குமரி மாவட்டம் விடுதலை போரில் இராஜாஜியின் பங்கு [தொகு]

தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவர் காமராசை நம்பாமல், இராஜாஜியை நம்பினார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில் சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”.[1] திரு. காமராசரால் தீர்வுகாண இயலாத நிலையில், ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: “திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார் [2] இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வழக்கறிஞர் தைக்காடு திரு. சுப்பமைணிய ஐயரைத் தொடர்பு கொண்டு, இராஜாஜியின் அறிவுரையையும் அதன் மீது தங்களது முடிவும் அறிவிக்கப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைச் சட்டம் 527 (C.R.P.C) –ன் அடிபபடையில் திரு – கொச்சியில் நடந்து வருகின்ற பதினொரு வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பாரத ரத்னா [தொகு]

1954ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது

இலக்கியம் [தொகு]

இராசாசி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே. .

நினைவுச் சின்னங்கள் [தொகு]

தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராசகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் தருமபுரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு இராசாசி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.பார்க்க

படைப்புகள் [தொகு]

மேலும் அறிய [தொகு]

புற இணைப்புகள் [தொகு]


பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found

"http://ta.wikipedia.org/w/index.php?title=இராசகோபாலாச்சாரி&oldid=1389957" இருந்து மீள்விக்கப்பட்டது