கண்ணதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்ணதாசன்

பிறப்பு முத்தையா
சூன் 24, 1927(1927-06-24)
சிறுகூடல்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு அக்டோபர் 17 1981 (அகவை 54)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர் காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில் கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியா
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
எழுதிய காலம் 1944-1981
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக

சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்(கள்) பொன்னழகி
பார்வதி
பிள்ளைகள் 13

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் கம்பனியில் பணியில் சேர்ந்தார்.

கண்ணதாசனின் முதல் மனைவி பெயர் பொன்னம்மா. இரண்டாம் திருமணம் பார்வதி என்பவரை செய்து கொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள் பிறந்தன. ஐம்பதாவது வயதில் வள்ளியம்மையை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிறந்தவர் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்.

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

[தொகு] மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.

[தொகு] மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[1] அமைத்துள்ளது. இங்கு கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கம் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.600/-ம், தனியார் நிகழ்ச்சிகளுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.750/-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

[தொகு] படைப்புகள்

[தொகு] கவிதை நூல்கள்

  • கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்
  • பாடிக்கொடுத்த மங்களங்கள்
  • கவிதாஞ்சலி
  • தாய்ப்பாவை
  • ஸ்ரீகிருஷ்ண கவசம்
  • அவளுக்கு ஒரு பாடல்
  • சுருதி சேராத ராகங்கள்
  • முற்றுப்பெறாத காவியங்கள்
  • பஜகோவிந்தம்
  • கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

[தொகு] புதினங்கள்

  • அவள் ஒரு இந்துப் பெண்
  • சிவப்புக்கல் மூக்குத்தி
  • ரத்த புஷ்பங்கள்
  • சுவர்ணா சரஸ்வதி
  • நடந்த கதை
  • மிசா
  • சுருதி சேராத ராகங்கள்
  • முப்பது நாளும் பவுர்ணமி
  • அரங்கமும் அந்தரங்கமும்
  • ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
  • தெய்வத் திருமணங்கள்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • காதல் கொண்ட தென்னாடு
  • அதைவிட ரகசியம்
  • ஒரு கவிஞனின் கதை
  • சிங்காரி பார்த்த சென்னை
  • வேலங்காட்டியூர் விழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • வனவாசம்
  • அத்வைத ரகசியம்
  • பிருந்தாவனம்

[தொகு] வாழ்க்கைச்சரிதம்

  • எனது வசந்த காலங்கள்
  • எனது சுயசரிதம்
  • வனவாசம்

[தொகு] கட்டுரைகள்

  • கடைசிப்பக்கம்
  • போய் வருகிறேன்
  • அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  • நான் பார்த்த அரசியல்
  • எண்ணங்கள்
  • தாயகங்கள்
  • வாழ்க்கை என்னும் சோலையிலே
  • குடும்பசுகம்
  • ஞானாம்பிகா
  • ராகமாலிகா
  • இலக்கியத்தில் காதல்
  • தோட்டத்து மலர்கள்
  • இலக்கிய யுத்தங்கள்
  • போய் வருகிறேன்

[தொகு] நாடகங்கள்

  • அனார்கலி
  • சிவகங்கைச்சீமை
  • ராஜ தண்டனை

இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

[தொகு] விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணதாசன்&oldid=901452" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்