சு. வெங்கடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2012 சென்னை புத்தகக் காட்சியில்

சு. வெங்கடேசன் ஒரு தமிழ் புதின எழுத்தாளர். மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாராகவும் உள்ளார். வெங்கடேசன் மதுரையில் வசிக்கிறார். திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதிக்கு 2006ல் தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

இலக்கிய வாசகராக இருந்த வெங்கடேசன் எழுதிய ஒரே நாவல் காவல் கோட்டம். பெருந்திரளான எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கர்களும். இன்னொன்று சிறிய எண்ணிக்கையில் திருட்டை தொழிலாகக் கொண்ட கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம்செய்து கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை காவல்கோட்டம் காட்டுகிறது. இதற்கு 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

[தொகு] வாழ்க்கை சுருக்கம்

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். இவைதவிர இவர் எழுதிய பிற படைப்புகள் (கவிதைகள் ஆய்வு கட்டுரைகள் முதலியன):

  • திசையெல்லாம் சூரியன்
  • பாசி வெளிச்சத்தில்
  • ஆதிப்புதிர் (கவிதை)
  • கலாசாரத்தின் அரசியல்
  • மனிதர்கள், நாடுகள், உலகங்கள்
  • சமயம் கடந்த தமிழ்

காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:[1]

நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்.

தினமலர், டிசம்பர் 29, 2011

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=சு._வெங்கடேசன்&oldid=1061778" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்