ஈரோடு தமிழன்பன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரோடு தமிழன்பன் தமிழகக் கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.
[தொகு] வெளியாகியுள்ள நூல்கள்
| வெளியான ஆண்டு | நூலின் பெயர் | பதிப்பகம் | குறிப்புகள் |
| 1970 | சிலிர்ப்புகள் | பாரி நிலையம் | |
| 1982 | அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் | பூம்புகார் பதிப்பகம் | |
| 1985 | திரும்பி வந்த தேர்வலம் | பூம்புகார் பதிப்பகம் | |
| 1990 | கண்ணுக்கு வெளியே சில கனாக்கள் | நர்மதா பதிப்பகம் | |
| 1995 | என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
| 1998 | நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் | பூம்புகார் பதிப்பகம் | |
| 1999 | அணைக்கவா என்ற அமெரிக்கா | பூம்புகார் பதிப்பகம் | |
| 1999 | உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்.... வால்ட் விட்மன் | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
| 2000 | பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் | விழிகள் பதிப்பகம் | |
| 2000 | வணக்கம் வள்ளுவ! | பூம்புகார் பதிப்பகம் | சாகித்ய அகாடமி விருது |
| 2002 | சென்னிமலைக் கிளிளோப்பாத்ராக்கள் | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
| 2002 | வார்த்தைகள் கேட்ட வரம் | விழிகள் பதிப்பகம் | |
| 2002 | மதிப்பீடுகள் | மருதா | |
| 2003 | இவர்களோடும் இவற்றோடும் | விழிகள் பதிப்பகம் | |
| 2004 | கனாக்காணும் வினாக்கள் | விழிகள் பதிப்பகம் | |
| 2004 | மின்னல் உறங்கும் போது | ஸ்ரீ துர்க்கா பதிப்பகம் | |
| 2005 | கதவைத் தட்டிய பழைய காதலி | விழிகள் பதிப்பகம் | |
| 2005 | விடியல் விழுதுகள் | பூம்புகார் பதிப்பகம் | |
| 2005 | கவின் குறு நூறு | பாப்லோ பாரதி பதிப்பகம் | |
| 2007 | பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா | பாப்லோ நெருதா ஸ்பானிய-லத்தீன் அமெரிக்க ஆய்வு நிறுவனம் | |
| 2008 | இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம் | ரஹ்மத் அறக்கட்டளை | |
| 2008 | ஓலைச்சுவடியும் குறுந்தகடும் | விடிவெள்ளி வெளியீடு | |
| 2008 | சொல்ல வந்தது.... | முத்தமிழ்ப் பதிப்பகம் |
[தொகு] விருதுகள்
- "வணக்கம் வள்ளுவ" என்ற கவிதைத் தொகுப்பிற்காக இவருக்கு 2004 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.