ராஜம் கிருஷ்ணன்
ராஜம் கிருஷ்ணன் (பிறப்பு: 1925) மூத்த தமிழக எழுத்தாளர். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] பிறப்பும் இளமைக் காலமும்
1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருக்கு மணம் செய்விக்கப்பட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.
[தொகு] எழுத்து
1970 ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர்.
இவரின் 80-க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் கிடைக்கப்பெறுகின்றன.
[தொகு] முதுமைக் காலம்
திரு. கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில் அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் தற்போது சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் உள்ளார்.
[தொகு] விருதுகள்
கடந்த தலைமுறை தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முகங்களுள் ஒன்றான திருமதி. கிருஷ்ணன் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றவர். அவற்றுள் சில:
- 1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
- 1953—கலைமகள் விருது
- 1973—சாகித்ய அகாதமி விருது
- 1975—சோவியத் லாண்ட் நேரு விருது
- 1991—திரு.வி.க. விருது
[தொகு] நூல்கள்
இவரின் படைப்புகளுள் சில:
- கூட்டுக் குஞ்சுகள்
- வனதேவியின் மைந்தர்கள்
- உத்தரகாண்டம்
- மாறி மாறி பின்னும்
- மலர்கள்
- பாதையில் பதித்த அடிகள்
- உயிர் விளையும் நிலங்கள்
- புதியதோர் உலகம் செய்வோம்
- பெண் விடுதலை
- இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
- காலந்தோறும் பெண்மை
- கரிப்பு மணிகள்
- வளைக்கரம்
- ஊசியும் உணர்வும்
- வேருக்கு நீர்
- பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
- இடிபாடுகள்
- அலை வாய்க்கரையில்
- சத்திய தரிசனம்
- கூடுகள்
- அவள்
- முள்ளும் மலர்ந்தது
- குறிஞ்சித் தேன்
- சுழலில் மிதக்கும் தீபங்கள்
[தொகு] மேற்கோள்கள்
- ராஜம் கிருஷ்ணன் - ஐக்கிய அமெரிக்க நாடுகளின் காங்கிரஸ் நூலக இணையக் குறிப்பு
- ராஜம் கிருஷ்ணன் பேட்டி அவள் விகடன் மூலம்