மேலாண்மை பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மேலாண்மை பொன்னுசாமி தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.

இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். தற்போதும் சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வசிக்கிறார். கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இவரது பிரதான தொழில். இவருக்கு மனைவி பொன்னுத் தாய் மற்றும் 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார்.

மேலாண்மை பொன்னுசாமி இதுவரை 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.

இவரது கதைகள் பல்வேறு இலக்கிய பத்திரிகைகள் மட்டுமின்றி, ஜனரஞ்சக பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியதில் முக்கியப் பங்கு வகித்த இவர் தற்போது அச்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார்.இவரது புனைப்பெர்கள் அன்னபாக்கியன்,அன்னபாக்கியச்செல்வன்,ஆமார்நாட்டான்.

[தொகு] முக்கிய சிறுகதை தொகுப்புகள்

  • சிபிகள்
  • பூக்காத மாலை
  • பூச்சுமை
  • மானுடப் பிரவாகம்
  • காகிதம்
  • கணக்கு
  • மனப் பூ
  • தழும்பு
  • தாய்மதி
  • உயிர்க்காற்று
  • என்கனா
  • மனப்பூ
  • ஒருமாலைப் பூத்து வரும்
  • அன்பூவலம்
  • வெண்பூமனம்
  • மானாவாரிப்பூ
  • இராசாத்தி

[தொகு] குறுநாவல்

  • ஈஸ்வர...
  • பாசத்தீ
  • தழும்பு
  • மரம்
  • கோடுகள்

[தொகு] நாவல்

  • முற்றுகை
  • அச்சமே நரகம்
  • ஆகாய சிறகுகள்
  • மின்சாரப்பூ
  • ஊர்மண்
  • முழுநிலா

[தொகு] பரிசுகள்

[தொகு] விருதுகள்

  • மனப் பூ தொகுப்புக்கு தமிழக அரசின் இலக்கிய விருது
  • வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் "மாட்சிமைப் பரிசு" என்ற கேடயம்.
  • உயிர்க் காற்று தொகுப்புக்கு பாரத டேட் வங்கியின் இலக்கிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள்.

[தொகு] சிறப்புகள்

  • சிபிகள் தொகுப்பு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பாட நூலாக இடம் பெற்றது.
  • பாட்டையா சிறுகதை பணிரெண்டாடம் வகுப்பு பாடமாக இடம்பெற்றது.
  • 10க்கும் மேற்பட்டோர் இவரது படைப்புகளை ஆய்வு செய்து 10க்கும் மேற்பட்டோர் எம்.பில் பட்டம் பெற்றது. நான்கு பேர் பி.எச்டி பட்டம் பெற்றது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேலாண்மை_பொன்னுசாமி&oldid=984420" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்