சி. சு. செல்லப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
படிமம்:SiSuChellappa.jpg
சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் "வாடிவாசல்", "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்

மதுரை மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள வத்தலகுண்டு எனும் சிற்றூரில், 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார். ஊர் சின்னமனூர் என்பதால் சி.சு.செல்லப்பா என்று எழுதி வந்தார்.

மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. அவர் எழுதிய "சரசாவின் பொம்மை" சி.சு.செல்லப்பாவுக்குச் சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.

1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

[தொகு] விமரிசக எழுத்தாளராக

சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.

[தொகு] வெளியிட்ட நூல்கள்

அவர் தமது முதிய வயதில், ந. பிச்சமூர்த்தி கதையைப் பற்றிய கருத்து, பி.எஸ்.இராமையாவின் கதைக்களம்... எண்ணூறு ஆயிரம் பக்ககங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார்.

சிறுகதை, குறுநாவல், கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாடகம், இறுதி நாள்களில் வெளியான "சுதந்திர தாகம்" நூல், நிறைவாக "பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி" கட்டுரை உள்பட 29 நூல்கள் எழுதிய சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார்.

[தொகு] விருதுகள்

இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது[1][2][3].

[தொகு] மேற்கோள்கள்

  1. "Sahitya Akademi Award for Tamil writers".
  2. இராமகிருஷ்ணன், எஸ். "சி.சு.செல்லப்பா". உயிர்மை. பார்த்த நாள் 4 பெப்ரவரி 2010.
  3. "Little known Tamil scholars 4 - C. S. Chellappa". திண்ணை (03 மே 2009). பார்த்த நாள் 4 பெப்ரவரி 2010.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சி._சு._செல்லப்பா&oldid=1034918" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்