தோப்பில் முகமது மீரான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோப்பில் முகமது மீரான் என்பவர் (பி. செப்டெம்பர் 26, 1944) தமிழ், மலையாள எழுத்தாளர். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.[1]
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தார். இவரது மனைவியின் பெயர் ஜலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெளிட்டுள்ளார். இவரது புதினம் சாய்வு நாற்காலி 1997ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.
விருதுகள் [தொகு]
- சாகித்திய அகாதமி விருது - சாய்வு நாற்காலி (1997)
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
- இலக்கியச் சிந்தனை விருது
- லில்லி தேவசிகாமணி விருது
- தமிழக அரசு விருது
- அமுதன் அடிகள் இலக்கிய விருது
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
எழுதிய நூல்கள் [தொகு]
(முழுமையானதல்ல)
புதினங்கள் [தொகு]
- ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
- துறைமுகம் (1991)
- கூனன் தோப்பு 1993)
- சாய்வு நாற்காலி (1997)
சிறுகதைத் தொகுப்புகள் [தொகு]
- அன்புக்கு முதுமை இல்லை
- தங்கரசு
- அனந்தசயனம் காலனி
- ஒரு குட்டித் தீவின் வரிப்படம்
- தோப்பில் முகமது மீரான் கதைகள்
- ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
மொழிபெயர்ப்புகள் [தொகு]
- தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது)
- வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Living Legend". தி இந்து. 19 பிப்பிரவரி 2005. http://www.hinduonnet.com/thehindu/mp/2005/02/19/stories/2005021900630100.htm. Retrieved 3 மே 2010.