அ. சீனிவாச ராகவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அ. சீ. ரா என்றழைக்கப்பட்ட அ. சீனிவாச ராகவன் ( அக்டோபர் 23 1905 - ஜனவரி 5 1975) குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ராகவன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்டியூரில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை நாகப்பட்டினத்திலும், கல்லூரிப் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும் முடித்தார். சிறிது காலம் அதே கல்லூரியிலும் சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், சென்னை புனித சேவியர் கல்லூரியிலும் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றினார். 1951-1969 இல் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார்.

1968 இல் இவரது வெள்ளைப் பறவை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[1][2][3]. 2005 இல் இவரது அனைத்து படைப்புகளும் ஒரே தொகுப்பில் வெளியிடப்பட்டன[4][5].

படைப்புகள்[தொகு]

(கீழ்வரும் பட்டியல் முழுமையானது அல்ல)

 • வெள்ளைப் பறவை (கவிதை தொகுப்பு)
 • நிகும்பலை
 • அவன் அமரன்
 • கெளதமி
 • உதய கன்னி (நாடகம்)
 • மேல் காற்று
 • இலக்கிய மலர்கள்
 • காவிய அரங்கில்
 • குருதேவரின் குரல்
 • புது மெருகு
 • பாரதியின் குரல்
 • கம்பனில் இருந்து சில இதழ்கள்
 • நம்மாழ்வார்

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அ._சீனிவாச_ராகவன்&oldid=1355954" இருந்து மீள்விக்கப்பட்டது