தி. ஜானகிராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி.ஜானகிராமன்

தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982)[1]. ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.

தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.

படைப்புகள்[தொகு]

மொழியாக்கம்[தொகு]

நாவல்[தொகு]

 • மோகமுள்
 • அமிர்தம்
 • அம்மா வந்தாள்
 • மரப்பசு
 • நளபாகம்
 • மலர்மஞ்சம்
 • உயிர்த்தேன்
 • அன்பே ஆரமுதே
 • செம்பருத்தி

சிறுகதை[தொகு]

நாடகம்[தொகு]

 • நாலுவேலி நிலம்
 • வடிவேல் வாத்தியார்

கட்டுரை[தொகு]

 • உதயசூரியன் (ஜப்பான் பயண நூல்)
 • அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை)
 • கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை)
 • நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்)

மேற்கோள்கள்[தொகு]

 1. மறைவு ஆண்டு 1983 என்று ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி. ஜானகிராமன் படைப்புகள் முதல் பதிப்பில் தவறுதலாக வெளியாகியதால் சில இடங்களில் அவரது இறப்பு ஆண்டு 1983 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலின் 2008ம் பதிப்பில் 1982 என்று திருத்தப்பட்டுள்ளது. மேலும் சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கிய கலைக்களஞ்சியத்தில் 1982 என்று குறிப்பிடப்பட்டுள்ளது

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தி._ஜானகிராமன்&oldid=1743494" இருந்து மீள்விக்கப்பட்டது