பூமணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பூமணி பி.மாணிக்கவாசகம் | |
|---|---|
| பிறப்பு | 1947 ஆம் ஆண்டு. ஆண்டிபட்டி கோவில்பட்டி தமிழ் நாடு |
| தொழில் | நாவலாசிரியர் சிறுகதை எழுத்தாளர் |
| நாடு | இந்தியன் |
| இலக்கிய வகை | அறிவியல் |
| கருப்பொருட்கள் | இலக்கியம் |
| குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
பிறகு வெக்கை வரப்புகள் வாய்க்கால் |
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை
பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - P.மாணிக்கவாசகம்.), ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். பூமணி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய சிறந்த எழுத்தாளர். பூமணி, கூட்டுறவுத் துறையின் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி.கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971 ல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி.க.சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.
[தொகு] ஆக்கங்கள்
[தொகு] சிறுகதைத் தொகுப்பு
- வயிறுகள்.
- ரீதி.
- நொறுங்கல்கள்.
[தொகு] நாவல்
- வெக்கை.
- நைவேத்தியம்.
- வரப்புகள்.
- வாய்க்கால்.
- ‘’பிறகு’’.
[தொகு] திரைப்படம்
- கருவேலம்பூக்கள்.
[தொகு] சிறப்புகள்
- இலக்கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
- தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
- வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது பூமணிக்கு வழங்கப்பட்டது
[தொகு] வெளி இணைப்புகள்
- பூமணியின் கதைகளை வாசிக்க: அழியாச்சுடர்கள்
- கருவேலம்பூக்கள் திரைப்பட விமர்சனம். (ஆங்கிலத்தில்)
- பூமணியின் கட்டுரைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ள தன் தாய் தேனம்மாவினை பற்றி அம்பையின் http://www.hinduonnet.com/thehindu/lr/2003/01/05/stories/2003010500280400.htm கருத்துக்கள்]. (ஆங்கிலத்தில்)
- Clashing by Night, Caravan magazine (ஆங்கிலத்தில்)