லா. ச. ராமாமிர்தம்
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
1916-ல் திருச்சி லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
[தொகு] இலக்கிய உலகில்
லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. லா. சா. ராமாமிர்தம் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதெமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை ""சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார். அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.
[தொகு] மறைவு
லா.ச.ரா அக்டோபர் 29, 2007 திங்கட்கிழமை அதிகாலை தமது 91 வயதில், சென்னையில் மரணமடைந்தார்.
[தொகு] எழுதிய நூல்கள்
நேசம்
மீனோட்டம்
இதழ்கள் (1959)
தயா (1966)
உத்தராயணம்
ஜனனி (1957)
பச்சைக் கனவு (1961)
அபிதா (1970) (புதினம்)
என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
அலைகள் (1964)
பாற்கடல்
அஞ்சலி (1963)
அவள்
சிந்தாநதி (கட்டுரைத் தொடர்)
கல் சிரிக்கிறது
பிராயச்சித்தம்
த்வனி
கங்கா (1962)
விளிம்பில்
கழுகு
அலைகள் ஓய்வதில்லை
நான்
சௌந்தர்ய
புத்ர (1965)(புதினம்)
[தொகு] பெற்ற விருதுகள்
[தொகு] வெளி இணைப்புகள்
- எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் மரணம்
- லா.ச.ரா - பா.ரா
- லா.ச.ரா.வின் சிறுகதை Mud (ஆங்கில மொழிபெயர்ப்பு)
- லா.ச.ரா. பற்றி வெளியான வண்ணநிலவனின் கட்டுரை - காலச்சுவடு இதழில்
- குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான லா.ச.ரா. நேர்காணல்
- அம்முலு - லா.ச.ரா - திண்ணை இதழில்
- கண்ணன் -லா.ச.ரா - திண்ணை இதழில்
- நெற்றிக் கண் - லா.ச.ரா - திண்ணை இதழில்
- வரிகள் - லா.ச.ரா - திண்ணை இதழில்
- தனித்துவமாய் திகழ்ந்த லா.ச.ரா - எழுத்தாளார் ஜீவி கட்டுரை
