சிக்காகோ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிகாகோ பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிக்காகோ பல்கலைக்கழகம்
UChicagoCOA.svg

குறிக்கோள்: Crescat scientia; vita excolatur (இலத்தீன் for "அறிவு வளர்ந்துகொண்டே போகட்டும், மனித வாழ்வு சிறக்கட்டும்")[1]
நிறுவல்: 1890 -ஜான் டி. ராக்பெல்லர்
வகை: தனியார் பல்கலைக்கழகம்
நிதி உதவி: US $6.2 பில்லியன்[2]
அதிபர்: ராபர்ட் ஸிமர்
பீடங்கள்: 2,168
ஆசிரியர்கள்: 14,772 பணியாளர்கள்
இளநிலை மாணவர்: 4,901
முதுநிலை மாணவர்: 9,820
அமைவிடம்: சிக்காகோ, இலினொய்
வளாகம்: நகர்ப்புறம், 211 ஏக்கர்கள்
நிறங்கள்: மரூன், வெள்ளை          
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
சிக்காகோ மரூன்ஸ்
Mascot: ஃபீனிக்ஸ்
தடகள விளையாட்டுக்கள்: என்.சி.ஏ.ஏ. மூன்றாம் பிரிவு, பல்கலைக்கழக தடகள விளையாட்டு ஆணையம்
இணையத்தளம்: www.uchicago.edu
The University of Chicago Logo

சிக்காகோ பல்கலைக்கழகம் (University of Chicago), ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். நோபல் பரிசு பெற்ற 89 பேர் இங்கு படித்தவர்கள் ஆவார். [3] மேலும், 9 பேர் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றவர் ஆவர். [4]

வரலாறு[தொகு]

தொடக்க கால ஆண்டு விழா

நிறுவல்[தொகு]

இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட போது, இருபாலரும் படிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. [5] அமெரிக்க பாப்டிச தேவாலயத்தின் சார்பாக நிறுவப்பட்டது. ஜான் டி. ராக்பெல்லர் இதற்கு பண உதவி வழங்கினார். முதன்முறையாக, 1890 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்ப்பர் இதன் தலைவரானார். முதல் வகுப்புகள் 1892 ஆம் ஆண்டு நடந்தன. .[6] தனி நிறுவனமாகத் தொடங்கினர். இதே பெயரில் முன்னர் செயல்பட்ட பல்கலைக்கழகம், நிதி நெருக்கடியால் 1886இல் மூடப் பட்டதால், இது தொடங்கப்பட்டது, பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளி 1898 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, [7]. பல்கலைக்கழக சட்டப் பள்ளி 1902 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. [8] பின்னர், ஆசிய ஆய்வியல் நிறுவனம் தொடங்கப்பட்டு தொல்பொருளியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, [9]

அங்கிகரிக்கப்பட்ட கல்லூரியில் படித்த மாணவர்கள் இலவசமாகவே இங்கு படிக்க அனுமதிக்கப்பட்டனர். இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு நூல்களையும், ஆய்வுக் கருவிகளையும் வழங்கியது,

1920–1980[தொகு]

1929 ஆம் ஆண்டு, பல்கலையின் ஐந்தாவது தலைவரான ராபர்ட் மேனார்டு ஹட்சின்ஸ், கல்விக்கு முக்கியத்துவம் தர எண்ணி, பல்கலைக்கழக கால்பந்து குழுவை நீக்கினார்.[10] வடமேற்குப் பல்கலைக்கழகத்தையும், சிக்காகோ பல்கலைக்கழகத்தையும் இணைக்கத் திட்டமிட்டார்.[11] இவரது காலத்தில், பல்கலைக்கழக மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டன. மருத்துவத் துறை மாணவர்கள் சேரத் தொடங்கினர்.[12]

அணுக்கருத் தாக்கத்தை கண்டுபிடித்தவர்கள். என்ரிக்கோ பெர்மி முதல் வரிசையில்

ராக்ஃபெல்லர் அறக்கட்டளை வழங்கிய பணத்தால், பெரும் பொருளியல் வீழ்ச்சியில் இருந்து தப்பித்தது கல்லூரி நிர்வாகம்.[10] இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, பல்கலைக்கழகத்தால் மன்காட்டன் திட்டம் செயற்படுத்தப்பட்டது. [13] புளூட்டோனியத்தை முதன்முறையாக இங்கு தான் பிரித்தனர். செயற்கையான, அணுப்பிளவை என்ரிக்கோ பெர்மி கண்டுபிடித்தார்.[13][14]

1978 ஆம் ஆண்டில், ஹன்னா ஹோல்போர்ன் கிரே, யேல் பல்கலைக்கழகத்தின் தலைவராய் இருந்தவர், பின்னர் இங்கு தலைவராக ஏற்கப்பட்டார். பெண்ணான இவர், 15 ஆண்டுகள் இப்பதவியில் நீடித்தார்..[15]

1990–2010[தொகு]

1999 ஆம் ஆண்டில், அப்போதைய தலைவரான ஹூகோ சோன்னென்ஷென், மாணவர்களின் சுமையைக் குறைக்க எண்ணி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார். கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கை 21 இல் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டது. த நியூயார்க் டைம்ஸ், தி எக்கனாமிஸ்ட் உள்ளிட்ட முன்னணிப் பத்திரிக்கைகள் இதை செய்தியாக வெளியிட்டன. பிரச்சனை எழவே, 2000 இல் தன் பதவியில் இருந்து விலகினார். [16]. பல மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கியது. 2009 ஆம் ஆண்டில், மேக்ஸ் பலேவ்சுகி வசிப்பிடக் கட்டிடம் உருவாக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், 10 மாடிக்கட்டிடமாக உயிர்மருத்துவத் துறை மையம் கட்டப்பட்டது. [17]

வளாகம்[தொகு]

முதன்மை வளாகம் 211 ஏக்கர்கள் (85.4 ha) பரப்பளவில் சிக்காகோ நகரில் உள்ளது. 1893 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக கொலம்பியக் கண்காட்சி, பல்கலையின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கிறது. தொடக்ககால கட்டிடங்கள் ஆறு உள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்று அருகில் அமைந்துள்ளன, இங்குள்ள ஹட்சிசன் அறை, ஆஃக்சுபோர்டு நகர தேவாலயத்தை ஒத்திருக்கும். சிக்காகோ பைல்-1 அமைந்துள்ள இடம், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. [18] பிராங்க் லாய்டு ரைட் கட்டிய ராபி ஹவுஸ் கட்டிடமும் தேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளென் சீபோர்க், தன் 405 அறையில், புளோட்டினியத்தை இங்கு தான் பிரித்தார்.[19]

தொலைதூர வளாகங்கள்[தொகு]

இந்த பல்கலைக்கழகம் தொலைதூரங்களிலும் வளாகங்களைக் கொண்டுள்ளது. இதன் வணிகப் பள்ளிக்கு, சிங்கப்பூரிலும், லண்டனிலும் கிளைகள் உள்ளன. பாரிசு நகரில் ஒரு வளாகம், செய்ன் ஆறு அருகில் உள்ளது. பெய்ஜிங் நகரிலும் இதன் வளாகம் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது,

நிர்வாகம்[தொகு]

பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க நிர்வாகக் குழு உள்ளது. பல்கலைக்கழகத் தலைவர் உட்பட ஐம்பது பேர் இந்த குழுவில் இடம்பெறுவர். பல்கலைக்கு தேவையான நிதியை சேகரிப்பதும், திட்டங்களை வகுப்பதும், இதன் பொறுப்பு. [20]

நூலகம்[தொகு]

இங்கு ஆறு நூலகங்கள் உள்ளன. மொத்தம் 8.5  மில்லியன் நூல்கள் உள்ளன. அமெரிக்காவின் முன்னணி நூலகங்களில் இதுவும் ஒன்று. தத்துவம், வரலாறு, வணிகம், மருத்துவம் எனப் பல துறைச் சார்ந்த நூல்களும் இவற்றுள் அடங்கும்.

பழைய மாணவர்கள்[தொகு]

2004 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இப்பல்கலைக்கழகத்திற்கு 133,155 பழைய மாணவர்கள் உள்ளனர்..[21] இவர்களில் பராக் ஒபாமா குறிப்பிடத்தக்கவர். மேலும், இங்கு படித்தவர்கள். உலக வங்கி, கனடிய அரசு, அமெரிக்க உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலும் பணிபுரிகின்றனர்.

நேட் சில்வர், கர்ட் வானெகெட், கார்ல் சேகன், மில்ட்டன் ஃப்ரீட்மன், யூஜின் ஃபாமா, எட்வின் ஹபிள், லாரி எலிசன் ஆகியோரும் இங்கு கற்றனர்.

தடகளம்[தொகு]

இங்கு பத்து ஆண் குழுக்களும், ஒன்பது மகளிர் குழுக்களும் இயங்குகின்றன. [22]. சிக்காகோ மரூன்ஸ் என்பது இந்த விளையாட்டுக் குழுக்களின் ஒட்டுமொத்த பெயர். என்.சி.ஏ.ஏ. எனப்படும் தேசிய தடகளப் போட்டிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பர்.

மாணவர் வாழ்க்கை[தொகு]

இங்குள்ள மாணவர்கள் ஏறத்தாழ 400 அமைப்புகளை நடத்துகின்றனர். இவற்றில் சமயம், பண்பாடு, விளையாட்டு, ஆர்வக் குழுக்கள் ஆகியன அடங்கும். மாணவர்களே பதிப்பிக்கும் செய்தித்தாள், திரைப்படக் குழு, பல்கலைக்கழக வானொலி உள்ளிட்டன குறிப்பிடத்தக்கன.

பிற[தொகு]

இங்கு தமிழ்மொழி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.[23]

சான்றுகள்[தொகு]

  1. "About the University". The University of Chicago (2007). பார்த்த நாள் 2007-04-20.
  2. "University of Chicago". The University of Chicago (2007). பார்த்த நாள் 2007-06-30.
  3. "About the University of Chicago". University of Chicago.
  4. Fields Medal | The University of Chicago. Uchicago.edu. Retrieved on 2013-08-15.
  5. Goodspeed, Thomas Wakefield (1916). A History of the University of Chicago. Chicago: The University of Chicago Press. p. 137. ISBN 0-226-30367-5. 
  6. "History". University of Chicago. பார்த்த நாள் May 26, 2011.
  7. "Chicago Booth History". University of Chicago Booth School of Business. பார்த்த நாள் September 8, 2009.
  8. "History of the Law School". University of Chicago Law School. பார்த்த நாள் September 8, 2009.
  9. "[http://oi.uchicago.edu/research/history/ A Brief History of the Oriental Institute]". The Oriental Institute. "Since its establishment in 1919, The Oriental Institute has sponsored archaeological and survey expeditions in every country of the Near East."
  10. 10.0 10.1 "History of the Office". The University of Chicago Office of the President (November 6, 2008). பார்த்த நாள் September 14, 2009.
  11. "The University of Chicago proposal". Northwestern university. பார்த்த நாள் September 8, 2009.
  12. "A Brief History of the Medical Center". The University of Chicago Medical Center. பார்த்த நாள் September 14, 2009.
  13. 13.0 13.1 "[http://www.atomicheritage.org/index.php?option=com_content&task=view&id=155 University of Chicago Met Lab]". Atomic Heritage Foundation. பார்த்த நாள் July 31, 2009.
  14. "[http://www.osti.gov/cgi- bin/rd_accomplishments/display_biblio.cgi?id=ACC0044&numPages=51&fp=N The First Reactor]" (December 1982). பார்த்த நாள் July 15, 2009. "On December 2, 1942, in a racquets court underneath the West Stands of Stagg Field at the University of Chicago, a team of scientists led by Enrico Fermi created man's first controlled, self-sustaining nuclear chain reaction."
  15. University of Chicago News Office(March 9, 2006). "Hanna Holborn Gray (1978–1993)". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: September 14, 2009.
  16. Beam, Alex (2008). A Great Idea at the Time. Public Affairs. p. 152. ISBN 978-1-58648-487-3. http://books.google.com/?id=xyQOZUzkt3UC&pg=PA153&lpg=PA153&dq=university+of+chicago+core+hutchins&q=. 
  17. University of Chicago News Office. "$25 million gift from Jules and Gwen Knapp will help build 10-story medical research facility at the University of Chicago". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: June 11, 2006.
  18. "Site of the First Self-Sustaining Nuclear Reaction". National Historic Landmarks Program. பார்த்த நாள் September 12, 2009.
  19. "Room 405, George Herbert Jones Laboratory". National Historic Landmarks Program. பார்த்த நாள் September 12, 2009.
  20. "Board of Trustees". The University of Chicago. பார்த்த நாள் August 15, 2009.
  21. Yoe, Mary Ruth (February 2004). "Everybody's a critic". University of Chicago Magazine 96 (3). http://magazine.uchicago.edu/0402/features/index.shtml. 
  22. "University of Chicago Athletics: Quick Facts" (2007). பார்த்த நாள் July 30, 2009.
  23. தமிழ்மொழி வகுப்புகள்

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புக்கள்[தொகு]