நாஞ்சில் நாடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல்.

இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.[1]

பொருளடக்கம்

படைப்புகள் [தொகு]

புதினங்கள் [தொகு]

  • தலைகீழ் விகிதங்கள்
  • மாமிசப்படைப்பு
  • என்பிலதனை வெயில்காயும்
  • மிதவை
  • எட்டுதிக்கும் மதயானை
  • சதுரங்க குதிரை

சிறுகதை தொகுதிகள் [தொகு]

  • தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
  • வாக்குப்பொறுக்கிகள்
  • உப்பு
  • பேய்க்கொட்டு
  • பிராந்து
  • நாஞ்சில் நாடன் கதைகள்
  • சூடிய பூ சூடற்க
  • முத்துக்கள் பத்து
  • கான் சாகிப்

கவிதை [தொகு]

  • மண்ணுள்ளீப்பாம்பு
  • பச்சை நாயகி

கட்டுரைகள் [தொகு]

  • நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
  • நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
  • தீதும் நன்றும்
  • திகம்பரம்.
  • காவலன் காவான் எனின்
  • நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

கருத்துக்கள் [தொகு]

இவர் தனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பற்றி குறிப்பிடுகையில் காலம் கடந்து இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சாகித்ய அகாடமி அரசியல் மற்றும் பணபலத்தின் செயல்பாட்டுக் களமாகி விட்டது. அங்கு வெறும் கல்வியாளர்களின் கைதான் ஓங்கி உள்ளது. அவர்கள் மரபு இலக்கியங்களை முழுமையாக படிப்பதில்லை. அரசியல் செல்வாக்கோ, பண செல்வாக்கோ இருந்தால் விருதை பெறவேண்டியதில்லை, வாங்கிவிடலாம் என்கிறார். எனக்கு முன்னால் மிகப் பெரிய தகுதியுடையவர்கள் 20 முதல் 30 பேர் வரை விருது பெற காத்திருக்கின்றனர். ஆண்டுதோறும் 25 பேருக்கு இந்த விருதை வழங்கலாம்[2] என்றும் கூறியுள்ளார்

மேற்கோள்கள் [தொகு]

  1. நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதெமி விருது
  2. தினமணி செய்தி 31/01/2011

வெளி இணைப்புகள் [தொகு]

நாஞ்சில்நாடன் வலைத்தளம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சில்_நாடன்&oldid=1421904" இருந்து மீள்விக்கப்பட்டது