தங்கர் பச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தங்கர்பச்சான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தங்கர் பச்சான்
பிறப்புதங்கராசு
1961
பத்திரக்கோட்டை,பண்ணுருட்டி வட்டம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிஉழவர், ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நாவலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1990 – தற்போது வரை

தங்கர் பச்சான் (Thangar Bachan) தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தங்கர் பச்சான் 1961 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவர். தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவர்.[1] திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவர்.

தங்கர் பச்சானின் நூல்களை ஆராய்ச்சி செய்து 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாக உள்ளன. 

திரைப்பட வரலாறு[தொகு]

இயக்குநராக[தொகு]

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2002 அழகி
சொல்ல மறந்த கதை
2004 தென்றல்
2005 சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
2007 பள்ளிக்கூடம் வெற்றியாளர், சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
ஒன்பது ரூபாய் நோட்டு
2013 அம்மாவின் கைப்பேசி [2]
2017 களவாடிய பொழுதுகள்

ஒளிப்பதிவு இயக்குநராக[தொகு]

நூற்பட்டியல்[தொகு]

நாவல்கள்[தொகு]

  • ஒன்பது ரூபாய் நோட்டு (புதினம்) - 1996.
  • அம்மாவின் கைப்பேசி (புதினம்) - 2009.[3]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • வெள்ளை மாடு - 1993
  • குடி முந்திரி - 2002
  • இசைக்காத இசைத்தட்டு - 2006

கட்டுரை[தொகு]

  • சொல்லத்தோணுது - 2015

விருதுகள்[தொகு]

  • 1993 - சிறந்த சிறுகதை தொகுப்பு - லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது (வெள்ளை மாடு)
  • 1993 - சிறந்த சிறுகதை தொகுப்பு - திருப்பூர் தமிழ் சங்கம் இலக்கிய விருது (வெள்ளை மாடு)
  • 1996 - சிறந்த நாவல் - தமிழ் நாடு அரசு விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)[4]
  • 1996 - சிறந்த நாவல் - அக்னி அஷர விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
  • 1996 - சிறந்த நாவல் - திருப்பூர் தமிழ் சங்கம் விருது (ஒன்பது ரூபாய் நோட்டு)
  • 1997 - சிறந்த ஒளிப்பதிவாளர் தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது (திரைப்படம் - காலமெல்லாம் காதல் வாழ்க)
  • 1998 - "கலைமாமணி" விருது - தமிழ் சினிமாவில் பங்களிப்புக்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது[5]
  • 2002 - சிறந்த இயக்குநர் SICA விருது - (திரைப்படம் - அழகி )
  • 2005 - சிறந்த நடிகர் ஜெயா தொலைக்காட்சி விருது (திரைப்படம் – சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி)
  • 2007 - திரைப்பட இயக்குநர் பங்களிப்பிற்காக தமிழ் நாடு மாநில ராஜா சான்டோ விருது.[6]
  • 2007 - சிறந்த இயக்குநர் சாந்தோம் விருது. (திரைப்படம் - ஒன்பது ரூபாய் நோட்டு)[7]
  • 2007 - சிறந்த தமிழ் இயக்குநர் சத்யன் நினைவுத் திரைப்பட விருது. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)[8]
  • 2007 - சிறந்த கதை வசனங்களுக்கான SICA விருது. (திரைப்படம் - பள்ளிக்கூடம்)
  • 2007 - சிறந்த இயக்குநர்  விருது (பள்ளிக்கூடம்) – தமிழ்நாடு அரசு
  • 2015 - சிறந்த நூல் - தினத்தந்தி ஆதித்தனார் இலக்கிய விருது (தங்கர் பச்சான் கதைகள்) 

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.goprofile.in/2017/06/Thangar-Bachan-Profile-family-wiki-Age-Affairs-Biodata-Height-Movie-list-Weight-Wife-Biography-movies-list.html?m=1
  2. "Shot Cuts: Iniya's next". தி இந்து. 28 மே 2012. பார்க்கப்பட்ட நாள் மே 28 - 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தங்கராஜ் அவரது பேனா எண்ணங்கள்". indiaglitz.com. Archived from the original on 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 3 - 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "தங்கர் பச்சான் கண்கள் திபாவளி வெளியீடு". indiaglitz.com. Archived from the original on 2007-10-20. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.
  5. "தமிழ் சினிமா:1999 ஆண்டு". தினகரன். Archived from the original on 2006-11-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.
  6. "தமிழ்நாடு அரசு விருதுகள் ரஜினி, கமல் பெறுகிறார்கள்". ஒன் இந்தியா. Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 23 - 2009. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "தமிழ்நாடு முதலமைச்சர் சாந்தோம் விருது வழங்கப்பட்டது". signis.net. Archived from the original on 2009-08-10. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.
  8. "சத்யன் நினைவு விருதுகள் அறிவிக்கப்பட்டது". malayalamcinema.com. Archived from the original on 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-23.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கர்_பச்சான்&oldid=3792034" இலிருந்து மீள்விக்கப்பட்டது