மா. ராமலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மா.ராமலிங்கம் (பி. 1939 ) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் 1981ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ராமலிங்கம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். இவர் 1964ல் தமிழக அரசு கல்வித்துறையில் பணியில் சேர்ந்தார். சிறிது காலத்திற்குப்பின் இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் தமிழ் இலக்கிய விமர்சனம் குறித்து ஏழு புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது நவீன தமிழ் உரைநடை பற்றிய இலக்கிய விமர்சன நூலான புதிய உரைநடை 1981ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மா._ராமலிங்கம்&oldid=1743620" இருந்து மீள்விக்கப்பட்டது