இந்திரா பார்த்தசாரதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்திரா பார்த்தசாரதி | |
|---|---|
|
தாக்கங்கள்
|
இந்திரா பார்த்தசாரதி ஒர் இந்திய எழுத்தாளர்.
பொருளடக்கம் |
[தொகு] முன்னுரை
பள்ளிப் பருவத்தில் இவர் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மாணவர். தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960களில் பணியாற்றி வந்தார். இவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் தீபம், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களிலில் எழுதிவந்தார்.
1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்றார். இவர் எழுதிய "நந்தன் கதை" [1], ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
[தொகு] படைப்புகள்
- ஏசுவின் தோழர்கள்
- காலவெள்ளம்
- சத்திய சோதனை
- ஒளரங்கசீப்
- குருதிப்புனல்
- தந்திர பூமி
- சுதந்தர பூமி
- வேதபுரத்து வியாபாரிகள்
- கிருஷ்ணா கிருஷ்ணா
- Ashes and Wisdom
- மாயமான் வேட்டை
- ஆகாசத் தாமரை
- கிருஷ்ணா கிருஷ்ணா
- ராமானுஜர்
- அக்னி
- தீவுகள்
- வெந்து தணிந்த காடுகள்
- வேர்ப்பற்று
- Wings in the Void
- Into this Heaven of Freedom
- திரைகளுக்கு அப்பால்
- ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
- இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
[தொகு] விருதுகள்
- சரஸ்வதி சம்மான்
- சாகித்ய அகாதமி
- பாரதீய பாஷா பரிஷத்
- 2010 -- பத்ம ஸ்ரீ விருது.