சு. சமுத்திரம்
சு. சமுத்திரம் (1941 – ஏப்ரல் 1, 2003) ஒரு தமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்தில் திப்பண்ணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்.[1][2][3][4][5]
விருதுகள் [தொகு]
- சாகித்திய அகாதமி விருது -1990.
- தமிழ் அன்னை பரிசு - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திடமிருந்து.
- இலக்கியச் சிந்தனை - சிறுகதைப் பரிசு.
- கலைஞர் விருது - முரசொலி அறக்கட்டளையிடமிருந்து. (மறைவுக்குப்பின்)
எழுதிய புத்தகங்கள் [தொகு]
(முழுமையானது அல்ல)
- வேரில் பழுத்த பலா
- வாடாமல்லி
- பாலைப்புறா
- ஊருக்குள் ஒரு புரட்சி
- ஒரு கோட்டுக்கு வெளியே
- கடித உறவுகள்
- மண் சுமை
- தலைப்பாகை
- வெளிச்சத்தை நோக்கி
- வளர்ப்பு மகள்
- சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
- தராசு
- சத்திய ஆவேசம்
- இல்லந்தோறும் இதயங்கள்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "A voice for the oppressed". The Hindu.
- ↑ "சு. சமுத்திரம் உடலுக்கு கருணாநிதி அஞ்சலி". பார்த்த நாள் 29 May 2010.
- ↑ "Su. Samuthiram - Editor's note" (Tamil). Tamil Virtual University.
- ↑ Tamil Sahitya Akademi Awards 1955-2007 Sahitya Akademi Official website.
- ↑ "Su Samuthiram - Obituary" (Tamil). Thinnai.