நாடகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார்.
விளக்கமும் செயல்பாடுகளும் [தொகு]
- 'இயல்' என்பது சொல் வடிவம்,
- 'இசை ' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
- 'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.
"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் ஒரு கிரேக்க அறிஞர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.
அருஞ்சொற் பொருள் [தொகு]
- கதைக்கோப்பு - Plot
- கதாப் பாத்திரம் - Character
- உரையாடல் - Dialogue
- பின்னணி - Setting
- வாழ்க்கையின் பேருண்மைகள் - Universal truths
- உத்திகள் - Techniques
- மேடையமைப்பு, மேடைநெறியாள்கை - Stage setting
| இலக்கிய வடிவங்கள் | தொகு |
|---|---|
| கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம் | |