கவிதை
கவிதை (Poetry) என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.
கவிதை தோற்றம் [தொகு]
'காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில் கவிதை தோன்றியிருக்க வேண்டும்' என்பார் எமர்சன். 'கவிதை மந்திர மொழிகளிலும் சடங்குச் சொற்களிலும் வாய்மொழிப்பாடல்களாகத் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்' என்கிறது வாழ்வியல் களஞ்சியம். கவிதை முதலில் இசைப்பாடலாகத் தோன்றிருக்கவேண்டும் என்ற கருத்திற்கு வலிமைச் சேர்க்கும் விதமாக சங்க இலக்கியத்தில் பாணன்,பாடினி,விறலி போன்றோர்களின் குறிப்புகள் கிடைக்கின்றன. தமிழ்க் கவிதைத் தோற்றத்தில் பரிபாடல், பத்துப்பாட்டு ஆகியன எட்டுத்தொகையின் அகவற்பாவிற்கு முந்தைய வடிவம் என்ற கருத்தும் உண்டு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற திணைகளுக்குப் பண் வடிவங்கள் இருந்துள்ளன. கவிதை முதலில் வாய்மொழிப் பாடலாக இருந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. எனவே கவிதையின் தோற்றமும் முதலில் பொருளற்ற இசை குறிப்புகளில் இருந்து இசைப் பாடல்கள் தோன்றிருக்க வேண்டும். கல்வி புலவர்களின் உடமைப்பொருளான போது இசையின் ஒரு பிரிவாய் ஒலி நயத்துடன் கூடிய அகவற்பா,வெண்பா,வஞ்சிப்பா,கலிப்பா போன்ற யாப்பு வடிவமும் தோன்றின. கல்வி மக்களின் உடமைப் பொருளாகும் போது உரைநடை இலக்கியம் மற்றும் உரைநடைசார்ந்த புதுக்கவிதை பிறந்தது எனலாம்.
நுாற்பா செய்யுள், விருத்தம், பண், கவிதை, புதுக்கவிதை, ஐக்கூ ஆகியன ஒரு இனம் சார்ந்தது என்றாலும் அதன் முகங்கள் வேறானது. காலத்திற்கு காலம் மொழி தன்மை புதுப்பித்துக்கொள்வது போல் கவிதையியலும் தன்னை வளர்த்துக் கொள்கிறது.
எதுகவிதை
" இது சிறந்த கவிதை என்று எளிமையாகச் சொல்லி விடுவது போல எது சிறந்த கவிதை எனச் சொல்ல முடியாது " என்கிறார் பேராசிரியர் வையாபுரிபிள்ளை. "மிக உயர்ந்த சொற்கள் மிகச் சீறிய முறையில் உள்ளடக்கியது கவிதை" என்கிறார் கோல்ரிட்ச். " ஆற்றல் நிரம்பிய சொற்கள் இயல்பாகப் பொங்கி வழிவது கவிதை " என்கிறார் வோர்ட்சுவொர்த்து. "கால்வாய் இல்லாத இடத்தில் பெய்யும் ஒளிமழையே கவிதை" என்கிறார் கீட்ஸ் . " நேர் கோடுகளும் வளைகோடுகளும் வண்ணத்துடன் இணைந்தோ இணையாமலோ அழகியலாகும்போது ஓவியமாவதைப் போல் உள்ளடக்கம் அழகியலோடு இணைந்து உணர்வைத் தொடும் போது கவிதையாகிறது" என்கிறார் சென்னைப் பல்கலைக்கழக ஆய்வாளர் ப.தமிழ்ச்செல்வன்.(தமிழ்க்கவிதை வரலாறு ) முடிவாகச் சொன்னால் சொற்களால் கட்டப்பட்ட கலைவடிவம் கவிதை.
வெளி இணைப்புகள் [தொகு]
| இலக்கிய வடிவங்கள் | தொகு |
|---|---|
| கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம் | |