சுமேரியா
| பண்டைய மெசொப்பொத்தேமியா |
|---|
| இயூபிரட்டீசு · டைகிரிசு |
|
பேரரசுகள் / நகரங்கள்
|
| சுமெர் |
| எரிது · கிஷ் · உருக் · ஊர் லாகாசு · நிப்பூர் · இங்கிர்சு |
| ஈலம் |
| சூசா |
| அக்காடியப் பேரரசு |
| அக்காட் · மாரி |
| அமோரைட்கள் |
| இசின் · லார்சா |
| பபிலோனியா |
| பபிலோனியா · சால்டியா |
| அசிரியா |
| அசுர்r · நிம்ருட் துர்-சருக்கின் · நினேவே |
|
காலவரிசை
|
| மெசொப்பொத்தேமியா |
| சுமேரியர் (அரசர் பட்டியல்) |
| அசிரியாவின் அரசர்கள் பபிலோனின் அரசர்கள் |
| எனூமா எலிசு · கில்கமெசு |
| அசிரிய-பபிலோனியச் சமயம் |
|
மொழிகள்
|
| சுமேரியம் · ஈலம் |
| அக்காத் · அரமேயம் |
| உரியம் · இட்டைட் |
சுமேரியா தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ( இன்றைய தென் ஈராக்) அமைந்திருந்த ஒரு பழைய நாகரிகமாகும். இது கிமு 4வது ஆயிரவாண்டு முதல் கிமு 3வது ஆயிரவாண்டில் பபிலோனிய இராச்சியத்தின் எழுச்சிவரை காணப்பட்டது. சுமேரியா உலகில் தோன்றிய நாகரிகங்களில் அதற்கு வேண்டிய சகல கூறுகளையும் கொண்ட முதலாவது நாகரிகமாக கருதப்படுகிறது."சுமேரியர்" என்ற சொல் சுமேரிய மொழி பேசியவர்களை குறிக்கிறது.
பொருளடக்கம் |
பின்னணி [தொகு]
சுமேரியர் என்ற சொல் அக்காத் மக்களால் முதலில் வழங்கப்பட்டது. சுமேரியர் தங்களை "கருந்தலை மக்கள்" என அழைத்தனர். தங்களின் பிரதேசத்தை "நாகரிக பிரபுக்களின் நாடு" என அழைத்தனர். இவர்களின் மொழி இந்நிலப்பகுதி மொழிகளிலிருந்து மாறுபட்டு காணப்பட்டதால் இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனாலும் தொல்பொருள் சான்றுகள் சுமேரியர் இந்நிலப்பகுதிகளில் யூபித் காலப்பகுதி (கி.மு. 5200-4500 அல்லது கி.மு. 6090-5429) தொடக்கம் தெற்கு மொசொப்பெத்தேமியாவில் இருந்ததை சுட்டுகிறது. இவர்கள் யூபிரிடிஸ் டைகிரிடிஸ் ஆறுகளால் படிந்த செழுமையான வண்டல் நிலங்களில் உழவுத்தொழில் மேற்கொண்டனர்.
இந்நிலப்பகுதி ஆண்டுக்கு ஏறக்குறைய 130 மி.மீ. மழைவீழ்ச்சியே பெறுகின்றது. எனவே யூபிரிடிஸ் டைகிரிஸ் ஆறுகளை ஆண்டு முழுவதுக்குமான நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்துவது முக்கியமாகும். சுமேரிய மொழியில் நீர்ப்பாசனத்துடன் தொடர்புடைய பல சொற்கள் காணப்படுகின்றன. இதன் மூலம், வடக்கில் உழவுத்தொழிலில் தேர்ச்சி பெற்ற உழவர்கள் குழுவே தெற்கு மொசொப்பொத்தேமியாவுக்கு வந்து சுமேரிய நாகரிகத்தை தோற்றுவித்தது என்பது தெளிவாகிறது.
குமரியும் சுமேரியாவும் [தொகு]
- சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்ட வாக்கியமான கி ரி அ கி பட் டு ரி யா என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு க ரி ய ர வ ன ட ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம்.[1] உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. குமரிக்கண்டத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும் போது[2] அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்தது வியப்பில்லை.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.urbandictionary.com/define.php?term=kumari%20kandam
- ↑ தமிழரின் தோற்றமும் பரவலும் பேரா. இராமச்சந்திர தீட்சிதர்
உசாத்துணை [தொகு]
- பஃறுளி முதல் யூப்ரடீசு வரை (நூல்) - இப்புத்தகம் மெசப்பதோமிய நாகரிகங்கள் அனைத்தும் குமரிக்கண்ட நாகரிகத்தில் இருந்து பிரிந்தது என்பதற்கான மொழியியல் மற்றும் ஊர் பெயரியல் சான்றுகளை முன்வைக்கிறது.