முகம்மது நபி
முகம்மது நபிகி.பி. 05 மே 570ல் [1] சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து பாட்டனார் அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40 வது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம் 'மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்' என்று கூறுகிறது.
பொருளடக்கம் |
சிறப்புகள்[தொகு]
இறைத்தூது கிடைக்கும் முன்[தொகு]
தந்தையை இழந்த தனது பேரனுக்கு பாட்டனார் அப்துல் முத்தலிப் "முஹம்மது"(புகழ்பெற்றவர்) என பெயர்ச்சூட்டினார்.
இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்.[தொகு]
மதீனாவில் குடியேறல்.[தொகு]
முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர் அவர்களுடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார்.
மக்கா வெற்றி[தொகு]
அறிஞர்களின் பார்வையில்[தொகு]
| “ | உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே. | ” |
M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978, pp. 33)
| “ | உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன. | ” |
- அல்போன்சு டி லாமார்ட்டின் - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276–277)
| “ | மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல. | ” |
- மகாத்மா காந்தி - (Young India)
| “ | சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ | ” |
- Thomas_Carlyle, Heroes_and_Hero_Worship
| “ | அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தைதான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார். முகம்மதை உண்மையான இறை த்தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன். | ” |
- போஸ்வெர்த் ஸ்மித், Benjamin_Bosworth_Smith
நபித்தோழர்கள்[தொகு]
மனைவிகள்[தொகு]
கத்யா[தொகு]
இவள் ஒரு பணக்கார விதவை. முகமது நபி தன்னுடைய 25 ஆவது வயதில் 40 வயதான கத்யாவை திருமணம் செய்தார். அவளை திருமணம் செய்தபடியால் முகமது நபி பெரிய பணக்காரர் ஆனார்.
சௌதா பிந்த் சமா[தொகு]
கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் இன்னுமொரு விதவையை முகமது திருமணம் செய்தார்.இவளுடைய கணவனும் இவளும் எத்தியோப்பியாவிலே குடியிருந்தனர். இவளுடைய கணவனுடைய மரணத்திற்கு பின்பு இவளை முகமது திருமணம் செய்தார்.
அயிஷா[தொகு]
பின் அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தார். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6 ஆகும். முகமதுவின் வயது அந்த சமயம் 52. ஹவ்சா பிந்த் உமர் இவளுடைய தந்தையின் பெயர் உமர் இபின் அல் கடாப். முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.
சைனாப் பிந்த் குசைமா[தொகு]
இவளுடைய கணவனின் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, இவள் முகமதை திருமணம் செய்ய கேட்டாள். முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் இறந்து போனாள்.
உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா[தொகு]
போரில் இவளுடைய கணவன் இறந்த பின்பு இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் போது இவளுடைய வயது 29 ஆகும்.
யுவேரியா பிந்த் ஹரித்[தொகு]
முகமது நபி இவளை திருமணம் செய்கையில் இவளுக்கு வயது 20, முகமது நபிக்கு 58 ஆகும்.
உம் ஹபிபா ரம்லா[தொகு]
இவள் 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள்.
சபியா பிந்த் ஹீயாய்[தொகு]
இவளுக்கு வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதiவாயாகவே தன்னுடைய எஞ்சிய காலத்தை கழித்தாள். தன்னுடைய 60 ஆவது வயதில் இறந்தாள்.
மைமுனா பிந்த் அல் ஹரித்[தொகு]
முகமது தனது 60 ஆவது வயதில் 36 வயதான மைமுனா பிந்த் அல் ஹரித்தைத் திருமணம் செய்து கொண்டார்.
நூல்கள்[தொகு]
இவற்றையும் பார்க்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]