ஆயிஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி) (612-678) முகம்மது நபியின் துணைவியருள் ஒருவர்.இஸ்லாத்தின் அடிப்படையில் ‘உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்)என்றும் அழைக்கப்படுபவர். சித்தீக்கா என்ற சிறப்புப் பெயர் இவருக்கு உண்டு.

பிறப்பு[தொகு]

அபூபக்கர்(ரலி) உம்மு ரூமான்(ரலி) தம்பதியருக்கு மகளாக மக்காவில் பிறந்தார்கள்.

இவர்களுக்கு மூன்று சகோதரர்களும்,இரண்டு சகோதரிகளும் உண்டு. இவர்களில் அப்துர் ரஹ்மான்(ரலி) சொந்த சகோதரர் ஆவார். முஹம்மத் என்பவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் மூன்றாவது மனைவியான அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) என்பவருக்குப் பிறந்தவர்.அவ்ஃப் இப்னு ஹாரித் (ரலி) என்பவர் பால் குடி சகோதரர் ஆவார்.இரண்டு சகோதரிகளும் அபூபக்ர் (ரலி)அவர்களின் மற்ற மனைவியருக்குப் பிறந்தவர்கள்.அஸ்மா(ரலி) அவர்கள் கதீலா(குதைலா என்போரும் உண்டு) என்ற முதல் மனைவிக்கும், உம்மு குல்சூம்(ரலி) என்பவர் நான்காவது மனைவி உம்மு ஹபீபா(ரலி) அவர்களுக்கும் பிறந்தவர்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிஷா&oldid=1712947" இருந்து மீள்விக்கப்பட்டது