அபூபக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அபூபக்கர் | |
| Khalifat-ul-Rasūl (நபிக்குப் பின் ஆட்சிசெய்தவர்) |
|
|---|---|
| கலிஃபா அபூபக்கர் பேரரசின் உச்ச ஆண்டு, 634. | |
| காலம் | 8 சூன் 632–23 ஆகஸ்டு 634 |
| புனைப்பெயர்கள் | Sadiq al-Akbar Thani Athnain Companion of the Cave Companion of the Tomb Shaikh Akbar Attique |
| பிறப்பு | c. 573 |
| பிறந்த இடம் | மக்கா, அரேபியா (தற்போது: சவுதி அரேபியா) |
| இறப்பு | 23 ஆகஸ்டு 634 |
| இறந்த இடம் | மதினா, அரேபியா (தற்போது: சவுதி அரேபியா) |
| அடக்கத்தலம் | நபியின் பள்ளி, மதினா |
| முன் ஆட்சிசெய்தவர் | முகம்மது |
| பின் ஆட்சிசெய்தவர் | உமர் |
அபூபக்கர்(ரலி) அவர்கள் முதன் முதலாக இசுலாம் சமயத்தை தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் முதல் கலிபாவாக பதவி வகித்தார். இவர் காலத்தில் இசுலாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது. இவர் கிபி 632 முதல் கிபி 634 வரை ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பைசாந்திய பேரரசு முறியடிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர். மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. கிபி 634-ம் ஆண்டு மரணமடைந்த இவர், தனக்குப்பிறகு உமரை அடுத்த கலிபாவாக நியமித்தார்.