இசுலாமிய நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுலாம்

உள்ளடக்கங்கள் சுருக்கமாக

Allah-eser-green.png
அடிப்படை நம்பிக்கைகள்
அல்லா ரசூல் (சல்)
மலக்குகள் இறைதூதர்கள்
இறை வேதங்கள்
மறுமை கலாகத்ர்
கட்டாயக் கடமைகள்

இறை நம்பிக்கை தொழுகை
நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜு

இசுலாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு சஹாபா
ரசூத்தீன் கலிபாக்கள்
ஷியா இமாம்கள்

நூல்களும் சட்டங்களும்

குர்ஆன் ஹதீஸ்

இஸ்லாமிய பிரிவுகள்

சன்னி சியா

பண்பாடு

கலை நாள்காட்டி குழந்தைகள்
மக்கள் பரவல் பண்டிகைகள்
மசூதிகள் மெய்யியல்
அரசியல் அறிவியல் பெண்கள் ஸல்

 பா    தொ 

இசுலாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (அரபு மொழி: التقويم الهجري; at-taqwīm al-hijrī; பெர்சியன்: تقویم هجری قمری ‎ taqwīm-e hejri-ye qamari) ஓர் சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. தவிர, இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா,அதாவது இசுலாமிய இறைதூதர் மொகமது மெக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த,ஆண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் H -Hijra அல்லது AH (இலத்தீனத்தில் anno Hegirae என்பதன் சுருக்கம்) என குறிக்கப்படும்.[1] ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் before Hijra (BH)என வழங்கப்படும்.காட்டாக முகமது பிறந்த ஆண்டு 53 BH.[2] தற்போதைய இசுலாமிய ஆண்டு 1430 AH, ஏறத்தாழ திசம்பர் 28, 2008 (மாலை) to திசம்பர் 17, 2009 (மாலை).

பொருளடக்கம்

[தொகு] மாதங்கள்

இசுலாமிய மாதங்கள் பெயர்கள் பின்வருமாறு:[3]

  1. முஹர்ரம் محرّم
  2. சஃபார் صفر
  3. ராபி அல் அவ்வல் ربيع الأول
  4. ராபி அல் தானி ربيع الآخر أو ربيع الثاني
  5. ஜூமதா அல் அவ்வல் جمادى الاول
  6. ஜூமதா அல் தானி جمادى الآخر أو جمادى الثاني
  7. ரஜப் رجب
  8. ஷாபான் شعبان
  9. ரமதான் رمضان (அல்லது ரம்ஜான்)
  10. ஷவ்வல் شوّال
  11. து அல் கிடா ذو القعدة
  12. து அல் ஹிஜ்ஜா ذو الحجة

ரமதான் மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் பகல் நேரத்தில் உணவு,தண்ணீர் உட்பட சாறுகள் மற்றும் உடலுறவை முற்றிலும் தவிர்க்கின்றனர்.

நடு இரவில் துவங்கும் கிருத்துவ நாட்காட்டிகளைப் போலன்றி இசுலாமிய மற்றும் யூத நாட்காட்டிகளில் சூரியனின் மறைவின்போது நாள் துவங்குகிறது.வெள்ளியன்று நடுப்பகலில் முஸ்லிம்கள் அனைவரும் பள்ளிவாசலில் தொழுகைக்காக கூடுவதால் அந்நாள கூடும் நாள் எனப்படுகிறது. அன்று ஓய்வுநாளாகக் கருதப்படுகிறது.இதனால் அடுத்து வரும் சனியன்று வாரம் துவங்குவதாக கருதப்படும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Watt, W. Montgomery "Hidjra". Encyclopaedia of Islam Online. Ed. P.J. Bearman, Th. Bianquis, C.E. Bosworth, E. van Donzel and W.P. Heinrichs. Brill Academic Publishers. ISSN 1573-3912. 
  2. Prophet Muhammad by Islamic Finder
  3. B. van Dalen; R.S. Humphreys; A.K.S Lambton, et al. "Tarikh". Encyclopaedia of Islam Online. Ed. P.J. Bearman, Th. Bianquis, C.E. Bosworth, E. van Donzel and W.P. Heinrichs. Brill Academic Publishers. ISSN 1573-3912. 

[தொகு] External links

[தொகு] Date converters


"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமிய_நாட்காட்டி&oldid=1102430" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்