என்ஹெடுவானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்ஹெடுவானா (Enheduanna; (அக்காதியம்: 𒂗𒃶𒁺𒀭𒈾, Enheduana அல்லது En-hedu-ana மாற்று வடிவங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது;[1] கி.மு 23 ஆம் நூற்றாண்டு )[2] என்பவர் அக்காடியப் பேரரசின் மன்னரான சார்கோனின் மகள் மற்றும் சுமேரியா நகரமான ஊர் என்ற நகரத்தில் இருந்த நானா என்றழைக்கப்பட்ட நிலவுக் கடவுளின் கோயிலின் பூசாரி ஆவார்.[3]

என்ஹெடுவானா சில இலக்கியப் படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார். இவை இவராலேயே இயற்றப்பட்டவை. இவர் இயற்றிய பாடல்களில் தன் வாழ்க்கையைப் பற்றியும் தன்பெயரையும் குறிப்பிட்டுள்ளார். என்ஹெடுவானாவின் படைப்புகள் சடங்கு சார்ந்தவை, புவி, அன்பு, வளம் ஆகியவற்றுக்கான சுமேரியக் கடவுளான இனான்னா, நிலவுக்கடவுள் மற்றும் சுமேரியக் கோயில்கள் பற்றியும் மிகுதியாகப் பாடி இருக்கிறார்.[4]). இவர் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் கிடைக்கப்பெறும் முதல் எழுத்தாளராகவும், முதல் பெண் கவிஞராகவும் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.[5]

இவர்தான் ஈஎன் என்ற பட்டத்துடன் குறிப்பிடப்படும் முதல் பெண்ணாவார், இவர் இளவரசியாக இருந்ததால் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் கொண்டவராக இருந்தார்.[6] இவரது தந்தையால் இவருக்கு கோயில் அர்ச்சகி பொறுப்பு அளிக்கப்பட்டது. இவரின் தாயார் அரசி தாசுல்தும்மாக இருக்கலாம்.[7][8]

இவர் தனது சகோதரன் ரிமூசின் காலத்திலும் தனது பதவியில் தொடர்ந்தார். பின்னர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டு வெளியேற்றப்பட்டார். நாளடைவில் மீண்டும் தன் அர்ச்சகி பதவியை அடைந்தார்.

தொல்லியல் மற்றும் எழுத்துச் சான்றுகள்[தொகு]

நவீன புனரமைப்பில் எனஹேன்னா வாழ்ந்த மற்றும் அடக்கம் செய்யப்பட்ட கோயில் வளாகம் (பின்னணியில்) ஊர்

என்ஹெடுவானா வசித்த ஊர் என்ற ஊரில் இருந்து தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர் பெயர் பொறித்த இரண்டு முத்திரைகளை ஊர் அரசக் கல்லறையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கிடைத்துள்ளது.[9][10] கூடுதலாக இவர் உருவம் மற்றும் பெயர் தாங்கிய வட்டுத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.[11]

இலக்கியம்[தொகு]

என்ஹெடுவானாவின் பாடல்கள் அவற்றின் சிறப்பால் மக்களிடையே அக்கால கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. அவரது காலத்துக்குப் பின் களிமண் ஏடுகளில் பதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்த பாடல்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.

இவரின் படைப்புகளை மொழிபெயர்த்தும், வரலாற்றுத் தகவல்களைக் கொண்டும் வில்லியம் டபிள்யூ ஹாலோவும் ஜே.ஜே.ஏ. வான் டிஜிக்கும் வெளியிட்ட தி எக்சால்ணேசன் ஆஃப் இனான்னா புத்தகம் என்ஹெடுவானாவையும் அவரது படைப்புகளையும் பற்றி அறிந்துகொள்ள முதன்மையான நூலாக உள்ளது. மேலும், என்ஹெடுவானாவின் தனிப் பாடல்களைத் திரட்டி ஒரே இலக்கியமாக ஆக்கி இனான்னா – குயின் ஆஃப் ஹெவன் அண்டு எர்த் என்ற தலைப்பில் டயான் வோல்க்ஸ்டெய்னும் சாமுவேல் நோவா கிராமெரும் மொழிபெயர்த்து 1983 இல் வெளிவந்த நூல் சிறப்பானது.[12]

குறிப்புகள்[தொகு]

  1. "En HeduAnna (EnHedu'Anna) philosopher of Iraq – 2354 BCE". Women-philosophers dot com.
  2. Binkley, Roberta (1998). "Biography of Enheduanna, Priestess of Inanna". University of Pennsylvania Museum. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.
  3. Gods, Demons, and Symbols of Ancient Mesopotamia: An Illustrated Dictionary by Jeremy Black and Anthony Green (1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-292-70794-0), p. 134 (entry "Nanna-Suen").
  4. Hallo, William W. and Van Dijk, J.J.A. (1968).
  5. Dr. Aaron Ralby (2013). "Sargon the Great, c. 2300 BCE: The Fall of Sumer". Atlas of Military History. Parragon. பக். 48—49. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4723-0963-1. https://archive.org/details/atlasofworldmili0000ralb_j5i6. 
  6. J Renger 1967: "Untersuchungen zum Priestertum in der altbabylonischen Zeit", Zeitschrift für Assyriologie und vorderasiatische Archäologie.
  7. Elisabeth Meier Tetlow (2004). Women, Crime, and Punishment in Ancient Law and Society: The ancient Near East. Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8264-1628-5. http://books.google.com/books?id=ONkJ_Rj1SS8C&pg=PA245&dq=Tashlultum#v=onepage&q=Tashlultum&f=false. பார்த்த நாள்: 29 July 2011. 
  8. Michael Roaf (1992). Mesopotamia and the ancient Near East. Stonehenge Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86706-681-4. http://books.google.com/books?id=SapVAAAAYAAJ&q=Tashlultum&dq=Tashlultum. பார்த்த நாள்: 29 July 2011. 
  9. Gadd, C. J. et al Ur Excavations Texts I – Royal Inscriptions" Trustees of the British Museum and of the Museum of the University of Pennsylvania, London, 1928
  10. Woolley, Leonard.
  11. Weadock, P. 1975 'The Giparu at Ur.' Iraq 37(2): 101–128.
  12. ஆசை (16 அக்டோபர் 2016). "என்ஹெடுவானா: ஆதிச் சிறகுகள்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்ஹெடுவானா&oldid=3714804" இலிருந்து மீள்விக்கப்பட்டது