பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாட்டு என்பதற்கு ஒரு குறிப்பட்ட அல்லது அனைவராலும் ஏற்கப்பட்ட வரைவிலக்கணம் இல்லை. எனினும் ஒலிநயம், சொற் கோர்வைகள், சொற் தொடர்கள், இசை, உணர்ச்சி, கற்பனை, கருத்து வெளிப்பாடு, பாடப்படும் செயல் என்பவறோடு பாட்டு இறுகத் தொடர்புடையது.

ஒலிநயம் உள்ள சொற்களைக் கோர்த்து உணர்ச்சியையும் கற்பனையையும் கருத்தையும் சில பரவலான யாப்பு வடிவங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தலை பாட்டு எனலாம். இது வாய்மொழி இலக்கியமாகவோ அல்லது எழுத்து இலக்கியமாகவோ அல்லது இரண்டாகவும் அமையலாம். பொதுவாக பாட்டு இசையுடன் பாடப்படும்.

[தொகு] வெவ்வேறு வரைவிலக்கணங்கள்

"அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே" - தொல்காப்பியம்.

[தொகு] தமிழிசையில் பாட்டு வகைகள்

வண்டிக்காரப்பாட்டு, அறுவைப்பாட்டு, நடுகைப்பாட்டு, கிளிப்பாட்டு, குயில்பாட்டு, குறவைப்பாட்டு, சங்குப்பாட்டு, நையாண்டிப்பாட்டு, படைப்புவரிப்பாட்டு, பாம்பாட்டிப்பாட்டு, முர்த்தனப் பாட்டு, பல்லாண்டுப்பாட்டு, மயங்கு நிலைப்பாட்டு, முகவரிப்பாட்டு என பல வைககள் உண்டு.

[தொகு] பொதுவான வகைகள்

  • பக்திப் பாட்டு
  • போர்ப் பாட்டு
  • துயரப் பாட்டு
  • காதல் பாட்டு
  • காமப் பாட்டு
  • குழந்தைப் பாட்டு
  • பயணப் பாட்டு
  • வேலைப் பாட்டு
  • காட்சிப் பாட்டு
  • தன்னுணர்ச்சிப் பாட்டு
இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்