அமர்த்தியா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமார்த்ய சென்
பிறப்புநவம்பர் 3, 1933 (1933-11-03) (அகவை 90)
சாந்திநிகேதன், மேற்கு வங்காளம், இந்தியா
வாழிடம்ஐக்கிய அமெரிக்க குடியரசு
தேசியம்இந்தியா
துறைபொருளாதாரம்
பணியிடங்கள்ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளாதார பள்ளி
தில்லி பொருளாதார பள்ளி
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ட்ரினிடி கல்லூரி, கேம்பிரிட்ஜ் (Ph.D.)(B.A.)
மாநிலக் கல்லூரி, கொல்கொத்தா (B.A.)
அறியப்படுவதுசமூகநல பொருளாதாரம்
மனித வளர்ச்சி கொள்கை
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (1998)
பாரத் ரத்னா (1999)

அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.[1]

விருதுகளும், அங்கீகாரங்களும்[தொகு]

  • 1954: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஆடம் ஸ்மித் பரிசு’ வழங்கப்பட்டது.
  • 1956: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மூலமாக ‘ஸ்டீவென்சென் பரிசு’ வழங்கப்பட்டது.
  • 1976: மகாலானோபிஸ் பரிசு பெற்றார்.
  • 1986: அரசியல் பொருளாதாரத்தில் ‘ரேங்க் ஈ செய்ட்மேன் டிஸ்டிங்கஷ்ட் விருது’ கிடைத்தது.
  • 1990: நெறிமுறைகளுக்கான ‘செனட்டர் ஜியோவானி அக்னெல்லி சர்வதேச பரிசு’ பெற்றார்.
  • 1990: ‘ஆலன் ஷான் ஃபெய்ன்ஸ்டீன் வேர்ல்ட் ஹங்கர் விருது’
  • 1993: ஜோன் மேயர் ‘குளோபல் குடியுரிமை விருது’
  • 1994: ஆசிய சமூகத்தின் ‘இந்திரா காந்தி தங்க பதக்கம் விருது’
  • 1997: ‘எடின்பர்க் பதக்கம்’
  • 1997: ஒன்பதாவது ‘கட்டலோனியா சர்வதேச பரிசு’
  • 1998: பொருளாதாரத்தில் ‘நோபல் பரிசு’
  • 1999: ‘பாரத் ரத்னா விருது’
  • 1999: வங்காள அரசின் ‘கெளரவ குடியுரிமை’ வழங்கப்பட்டது.
  • 2000: உலகளாவிய அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்திலிருந்து ‘லியன்டெஃப் பரிசு’
  • 2000: அமெரிக்காவின் தலைமை மற்றும் சேவைக்காக ‘ஐசனோவர் பதக்கம்’
  • 2000: ‘சாம்பியன் ஆஃப் ஹானர்’
  • 2002: சர்வதேச ஹ்யுமனிஸ்ட் மற்றும் எதிக்கல் யூனியனிலிருந்து ‘சர்வதேச ஹ்யுமனிஸ்ட் விருது’
  • 2003: இந்திய வர்த்தக சேம்பர் அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவித்தது’
  • யுனெஸ்கேபின் (UNESCAP) ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

[2]

காலவரிசை[தொகு]

  • 1933: நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் இந்தியாவிலுள்ள வங்காள மாகாணத்திலிருக்கும் சாந்திநிகேதனில் பிறந்தார்.
  • 1953: கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
  • 1955: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
  • 1959: கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில், ஹெச்.ஏ. மற்றும் பி.எச்.டி முடித்தார்.
  • 1956: கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக அவரது முதல் பணியைத் தொடங்கினார்.
  • 1963: தில்லி பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக பணியேற்றார்.
  • 1970: அவரது முதல் புத்தகமான “கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோசியல் வேல்ஃபார்” வெளியிடப்பட்டது.
  • 1972: லண்டன் பொருளாதார பள்ளியில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.
  • 1977: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.
  • 1986: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளாதார பேராசிரியராக சேர்ந்தார்.
  • 1989: பொருளாதாரத்திற்காக ‘நோபல் பரிசு’ பெற்றார்.
  • 1999: ‘பாரத ரத்னா புரஸ்கார்’ விருதைப் பெற்றார்.

[3][4]

முக்கிய பதிப்புகள்[தொகு]

  • சென், அமர்த்தியா, Collective Choice and Social Welfare, San Francisco, Holden-Day, 1970
  • சென், அமர்த்தியா, On Economic Inequality, New York, Norton, 1973
  • சென், அமர்த்தியா, Poverty and Famines : An Essay on Entitlements and Deprivation, Oxford, Clarendon Press, 1982
  • சென், அமர்த்தியா, Choice, Welfare and Measurement, Oxford, Basil Blackwell, 1982
  • சென், அமர்த்தியா, Food Economics and Entitlements, Helsinki, Wider Working Paper 1, 1986
  • சென், அமர்த்தியா, On Ethics and Economics, Oxford, Basil Blackwell, 1987.
  • Drèze, Jean and சென், அமர்த்தியா, Hunger and Public Action. Oxford: Clarendon Press. 1989.
  • சென், அமர்த்தியா, More Than 100 Million Women Are Missing. New York Review of Books, 1990.
  • சென், அமர்த்தியா, Inequality Reexamined, Oxford, Oxford University Press, 1992.
  • மார்த்தா நசுபாம் மற்றும் சென், அமர்த்தியா. The Quality of Life. Oxford: Clarendon Press, 1993
  • சென், அமர்த்தியா, Reason Before Identity (The Romanes Lecture for 1998), Oxford, Oxford University Press, 1999. ISBN 0-19-951389-9
  • சென், அமர்த்தியா, Development as Freedom, Oxford, Oxford University Press, 1999 Review பரணிடப்பட்டது 2018-08-25 at the வந்தவழி இயந்திரம்
  • சென், அமர்த்தியா, Rationality and Freedom, Harvard, Harvard Belknap Press, 2002
  • சென், அமர்த்தியா, The Argumentative Indian, London: Allen Lane, 2005.
  • சென், அமர்த்தியா, Identity and Violence.The Illusion of Destiny New York W&W Norton.

பரிசுகளும் புகழ்ப்பட்டங்களும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.trin.cam.ac.uk/index.php?pageid=176&conid=1
  2. http://scholar.harvard.edu/files/sen/files/cv_sen_amartya_jan2013_0.pdf
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்த்தியா_சென்&oldid=3845106" இலிருந்து மீள்விக்கப்பட்டது