பிதான் சந்திர ராய்
| பிதான் சந்திர ராய் | |
| பிதான் சந்திர ராய் |
|
|
|
|
| பதவியில் 14 சனவரி 1948 – 1 சூலை 1962 |
|
| முன்னவர் | பிரபுல்ல சந்திரா கோஷ் |
|---|---|
| பின்வந்தவர் | பிரபுல்ல சந்திரா கோஷ் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
|
|
|
| பிறப்பு | 1 சூலை 1882 பங்கிப்பூர், பட்னா, பீகார் |
| இறப்பு | சூலை 1 1962 (அகவை 80) கொல்கத்தா, மேற்கு வங்காளம் |
| தேசியம் | இந்தியர் |
| வாழ்க்கைத் துணை |
திருமணமாகாதவர் |
| இருப்பிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
| பழைய மாணவர் | பிரசிடென்சி கல்லூரி, கொல்கத்தா]] பட்னா கல்லூரி மருத்துவர்களின் அரசக் கல்லூரி அங்கத்தினர் (M.R.C.P.) அறுவை மருத்துவ அரசக்கல்லூரியின் சீர் உறுப்பினர் (F.R.C.S.) |
| துறை | மருத்துவர் விடுதலை போராளி அரசியல்வாதி |
| சமயம் | பிரம்மோ சமாஜ் |
மரு. பிதான் சந்திர ராய் , (Bidhan Chandra Roy, வங்காள: বিধান চন্দ্র রায়; 1 சூலை 1882–1 சூலை 1962) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது மேற்கு வங்காள முதலமைச்சராக பணியாற்றியவர். 1948ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டில் தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் காங்கிரசு முதலமைச்சராக தொடர்ந்து இப்பதவியில் இருந்தார். சிறந்த மருத்துவராகவும் விடுதலை இயக்க போராளியாகவும் மிகவும் புகழ் பெற்றிருந்தார். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு அடிகோலிய ராய் முதன்மை நகரங்களாக விளங்கும் துர்காப்பூர், கல்யாணி மற்றும் கொல்கத்தாவின் புறநகர் பிதான்நகர் உருவாக காரணமாக இருந்தார்.கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஓர் சாதனையாகும். இந்தியாவில் அவரது பிறந்த (மற்றும் இறந்த) நாளான சூலை 1 தேசிய மருத்துவர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.