லதா மங்கேஷ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar, பி. செப்டெம்பர் 28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர்.இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

குடும்ப வாழ்க்கை[தொகு]

திருமணம் செய்யாமலே இருந்து விட்டவர். பாடகி ஆஷா போஸ்லேயின் சகோதரி.

கலையுலக வாழ்க்கை[தொகு]

முதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்தி பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.

விருதுகள்[தொகு]

இவர் பாடிய பாடல்களில் சில[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Bichu, Dr. Mandar (2011). Lata - Voice of the Golden Era. Popular Prakashan. ISBN 978-81-7991-625-4. 
  • Bhimani, Harish (1995). In search of Lata Mangeshkar. Indus. ISBN 978-81-7223-170-5. 
  • Bharatan, Raju (1995). Lata Mangeshkar: A Biography. UBS Publishers Distributors. ISBN 978-81-7476-023-4. 
  • Kabir, Nasreen Munni (2009). Lata Mangeshkar: In Her Own Voice. Niyogi Books. ISBN 978-81-89738-41-9. 
  • Lata, Mangeshkar (1995). Madhuvanti Sapre and Dinkar Gangal. ed (in Marathi). In search of Lata Mangeshkar. Harper Collins/Indus. ISBN 978-81-7223-170-5. . A collection of articles written by Lata Mangeshkar since 1952.
  • Nerurkar, Vishwas (in Hindi). Lata Mangeshkar Gandhar Swaryatra (1945-1989). Mumbai: Vasanti P. Nerukar. .
  • Bichhu, Mandar V. (1996) (in Hindi). Gaaye Lata, Gaaye Lata. Sharjah: Pallavi Prakashan. ISBN 978-81-7223-170-5. . A collection of articles written by Lata Mangeshkar since 1952."http://ta.wikipedia.org/w/index.php?title=லதா_மங்கேஷ்கர்&oldid=1745044" இருந்து மீள்விக்கப்பட்டது