பாண்டுரங்க வாமன் காணே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாண்டுரங்க் வாமன் கானே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மகாமகோபாத்தியாய
பாண்டுரங்க வாமன கானே
पांडुरंग वामन काणे
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
(நியமன உறுப்பினர்)
பதவியில்
16 நவம்பர் 1953[1] – 2 ஏப்ரல் 1964
முன்னையவர்அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
தொகுதிநியமன உறுப்பினர்
துணை வேந்தர், மும்பை பல்கலைக்கழகம்
பதவியில்
10 நவம்பர் 1947 – 9 நவம்பர் 1949
முன்னையவர்எம். சி. சாக்ளா
பின்னவர்நட்வர்லால் எச். பகவதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1880-05-07)7 மே 1880
இரத்தினகிரி மாவட்டம், பம்பாய் மாகாணம்
இறப்பு18 ஏப்ரல் 1972(1972-04-18) (அகவை 91)[2]
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்
விருதுகள்பாரத ரத்னா (1963)
சாகித்திய அகாதமி விருது (1956)

முனைவர். பாண்டுரங்க வாமன் காணே (Dr. Pandurang Vaman Kane, மராத்தி: डॉ. पांडुरंग वामन काणे) (பிறப்பு : மே 7, 1880 - இறப்பு : மே 8, 1972) பரவலாக அறியப்பட்ட ஓர் இந்தியவியலாளரும் சமசுகிருத அறிஞரும் ஆவார். இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் சித்பவன் என்ற சிற்றூரில் பழமைவாத பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரைப் பற்றி புகழ்பெற்ற வரலாற்றாளர் பேராசிரியர் ராம் சரண் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்:

"சமசுகிருதத்தில் புலமை வாய்ந்த சமூக சீர்த்திருத்தவாதி பாண்டுரங்க வாமன் காணே பழங்கால கல்வி வழக்கங்களை தொடர்ந்தார். இருபதாம் நூற்றாண்டில் ஐந்து பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இவரது "தர்மசாத்திரத்தின் வரலாறு" என்ற படைப்பு பழங்கால சமூக சட்டங்களையும் வழக்கங்களையும் தொகுத்த ஒரு கலைக்களஞ்சியமாகும். இது தொன்மை இந்தியாவின் சமூக செயல்பாடுகளை ஆய்வு செய்ய எமக்கு மிகவும் உதவியது"'[3].

விருதுகள்[தொகு]

முனைவர் காணே மகாமகோபாத்யாயர் (மகா+மகா+உபாத்தியாயர் = மிகச்சிறந்த ஆசிரியர்) என அறியப்பட்டார்.மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார். இந்தியவியல் படிப்புக்களுக்கான குருக்சேத்திரா பல்கலைக்கழகத்தை துவங்க இவரது வழிகாட்டுதல் கோரப்பட்டது. 1956ஆம் ஆண்டில் இவரது "தர்ம சாத்திரத்தின் வரலாறு" என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பாரதிய வித்யா பவனின் கௌரவ அங்கத்தினராக இருந்தார்.

கல்வித்துறையில் இவரது சீர்மிகு பங்களிப்புகளுக்காக மாநிலங்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1963ஆம் ஆண்டில் நாட்டின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா இவருக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Nominated Members Since 1952". Rajya Sabha. National Informatics Centre. Archived from the original on 1 January 2012.
  2. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
  3. R.S. Sharma (2005). India's Ancient Past. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0195687859. 
  1. A write-up on MM Dr. P.V. Kane
  2. Publication dates of volumes பரணிடப்பட்டது 2007-06-19 at Archive.today
  3. Sahitya Akademi Award பரணிடப்பட்டது 2008-04-10 at the வந்தவழி இயந்திரம்
  4. Honorary member of Bharatiya Vidya Bhavan பரணிடப்பட்டது 2018-02-13 at the வந்தவழி இயந்திரம்
  5. Evolution of MM Dr. P.V. Kane’s Magnum Opus
  6. Constitution making a complete break with traditional ideas of India
  7. A viewpoint: Dr. P.V. Kane’s work proves that ancient Indians ate beef பரணிடப்பட்டது 2007-11-02 at the வந்தவழி இயந்திரம்
  8. Biography (Chapter 2.2) (German site, biography in English)
  9. Kane's chronology of Dharmasastra literature (At the bottom of the article) (German site, chronology in English)

பிற மூலங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டுரங்க_வாமன்_காணே&oldid=3861930" இலிருந்து மீள்விக்கப்பட்டது