நவம்பர் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | நவம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXIII | ||||||
நவம்பர் 3 கிரிகோரியன் ஆண்டின் 307வது நாளாகும். நெட்டாண்டுகளில் 308வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 58 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 644 - இரண்டாவது முஸ்லிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதினாவில் பாரசீக அடிமையினால் கொல்லப்பட்டார்.
- 1493 - கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.
- 1655 - பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவப் பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
- 1793 - பிரான்சின் நாடகாசிரியரும், செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கஸ் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
- 1812 - நெப்போலியனின் இராணுவத்தினர் வியாஸ்மா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
- 1838 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
- 1903 - ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
- 1905 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டான்.
- 1913 - ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது.
- 1918 - போலந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் வில்ஹெம்ஷாஃபென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.
- 1957 - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.
- 1963 - தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.
- 1963 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1964 - வாஷிங்டன் டீசி மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
- 1970 - சல்வடோர் அலெண்டே சிலியின் அதிபரானார்.
- 1973 - நாசா மரைனர் 10 என்ற விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1978 - டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1979 - கம்யூனிச பாட்டாளிகள் கட்சியில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1982 - ஆப்கானிஸ்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1986 - மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1988 - இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.
பிறப்புக்கள்[தொகு]
- 1618 - ஔரங்கசீப், இந்தியாவின் மொகாலய சக்கரவர்த்தி, (இ. 1707).
- 1795 - ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர் (இ. 1849)
- 1911 - ஏ. கே. செட்டியார், தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி (இ. 1983)
- 1933 - அமர்த்தியா சென், இந்தியப் பொருளாதார நிபுணர், நோபல் பரிசு பெற்றவர்
- 1932 - அன்னை பூபதி, மட்டக்களப்பில் இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1988)
இறப்புகள்[தொகு]
- 2006 - ஈ. வி. சரோஜா, தமிழ்த் திரைப்பட நடிகை, (பி. 1935).
சிறப்பு நாள்[தொகு]
- பனாமா - விடுதலை நாள் (1903)
- டொமினிக்கா - விடுதலை நாள் (1978)
- மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் - விடுதலை நாள் (1986)